உமர் ஷேக் மிர்ஸா II

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமர் ஷேக் மிர்ஸா II
عمر شیخ میرزا
பெர்கானா பள்ளத்தாக்கின் மன்னன்
துணைவர்
குத்லூக் நிஜார் கானம் (m.1450-76)
ஆலுஸ் அகா
பாத்மா சுல்தான் ஆகா
கராகஸ் பேகம்
ஆமித் அகாஷா
யுன் சுல்தான் அகாஷா
ஆகா சுல்தான் அகாஷா
குழந்தைகளின்
பெயர்கள்
கான்ஸாதா பேகம்
பாபர், முகலாய பேரரசர்
இரண்டாம் ஜஹாங்கிர் மிர்ஸா
நாசர் மிர்ஸா
மெஹர் பேனு பேகம்
ஷேர் பேனு பேகம்
யட்சர் சுல்தான் பேகம்
ருகையா சுல்தான் பேகம்
மரபுதைமூரின் வழி
தந்தைஅபு சைத் மிர்சா
தாய்ஷா சுல்தான் பேகம்
மதம்இசுலாம்

இரண்டாம் உமர் சேக் மிர்சா (Umar Shaikh Mirza II) (கி.பி.1469-1494 ) பெர்கானா பள்ளத்தாக்கின் ஆட்சியாளராக இருந்தார். தற்போது அறியப்படுகின்ற கசக்கஸ்தான், உசுபெக்கிசுத்தான், கிழக்கு ஈரான் மற்றும் ஆப்கானிசுத்தான் பகுதிகளின் பேரரசராக இருந்த அபு சையத் மிர்சாவின் நான்காவது மகனாக இவர் பிறந்தார்

சாகட்டாய் கான்னெட்டின் மொகுலிசுதான் மன்னன் யூனுசு கானின் மகள் இளவரசி குதுல்ஃப் நிகர் கான் உமரின் முதல் மனைவியும் தலைமைச் சேவகருமாக இருந்தார். இவருடன் உமருக்கு வேறு இரண்டு மனைவிகள் இருந்தனர். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் பிறந்தனர். மூத்த மகன் பாபுர் மிர்சா முதல் மனைவி குதுல்ஃப் நிகர் கானுக்கு பிறந்தவர் ஆவார். இரண்டாம் சகாங்கிர் மிர்சா மற்றும் நாசீர் மிர்சா ஆகிய இருவரும் மற்ற இரண்டு மனைவிகளுக்கு பிறந்தவர்களாவர். மூத்த மகன் பாபர் மிர்சா 1526 ஆம் ஆண்டு முகலாயப் பேரரசை நிறுவினார். இவரே முகலாயப் பேரரசின் முதல் பேரரசரும் ஆவார்.

1494 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் நாள் இரண்டாம் உமர் சேக் மிர்சா வடக்கு பெர்கானாவில் உள்ள அக்சி கோட்டையில் ஒரு தனிப்பட்ட விபத்தில் இறந்தார். கட்டிடத்தின் விளிம்பில் கட்டப்பட்ட மேல்மாடம் சரிந்து விழுந்து இவ்விபத்து நிகழ்ந்தது. இதனால் பதினோரு வயதான பாபர் பெர்கானாவின் ஆட்சியாளர் ஆனார்.[1]

குடும்பம்[தொகு]

தாய்[தொகு]

உமர் சேக்கின் தாயாரின் பெயர் மகன் பாபரின் சுயசரிதையான பாபர்னாமா உள்ளிட்ட எந்த வரலாற்று ஆதாரங்களிலும் வெளிப்படையாக காணப்படவில்லை. இது சற்றே அசாதாரணமானதாகும். ஏனெனில் பாபர் தனது முக்கிய உறவினர்கள் பலருக்கு தாய்வழி வம்சாவளியை வழங்கினார். இருப்பினும், பாபர் ஒரு குறிப்பிட்ட சா சுல்தான் பேகத்தை ( 1501) பல முறை உமர் சேக்கின் தாயார் என்று பரிந்துரைத்துள்ளார். [2] இந்த அடையாளமே வரலாற்றாசிரியர்களால் பயன்படுத்தப்படுகிறது. [3]

சா சுல்தான் பேகத்தின் சொந்த பின்னணி ஒருபோதும் கூறப்படவில்லை. இருப்பினும், பாபரின் மாமா சுல்தான் மகமூத்தின் மந்திரியான குவாண்ட் அமீர், உமர் சேக்கை சுல்தான் மகமூத் மற்றும் சுல்தான் அகமது ஆகியோரின் "சொந்த தம்பி" என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் சொந்த சகோதரர்கள் என்று சொல்ல இந்த சொல் அளிக்கப்பட்டிருந்ததாகக் கொண்டால் சா சுல்தான் பேகம் மூன்று ஆட்சியாளர்களுக்கும் தாய் என்று கருதவியலும். இதனால் அகமத் மற்றும் மகமூத்தின் தாய்வழி தாத்தாவாக இருந்த ஆர்து-புகா தர்கான் அர்குனின் மகளே சா சுல்தான் பேகம் என்று துணியலாம்.[4]

மனைவியர்[தொகு]

உமருக்கு மொத்தமாக ஏழு மனைவியர் இருந்தனர்.

 1. மொகலிசுதானின் யூனசு கான் மற்றும் ஐசான் டவுலட் பேகம் ஆகியோரின் மகள் குத்லூக் நிசார் கான்; 
 2. குவாசா உசைன் பேக் மகள் உலுசு அகாய் பேகம்; 
 3. பாத்திமா சுல்தான் ஆகா, மொகூல் டூமன்களைப் பாராட்டிய ஒரு மகள்; 
 4. மக்தும் சுல்தான் பேகம், கராகசு பேகம் என்று அறியப்பட்டவர்; 
 5. மிர்சாவுக்கு முன் இறந்த காமக்கிழத்தி, உமித் அகாசா; 
 6. யுன் சுல்தான் அகாச்சா, முகாலாய காமக்கிழத்தி; 
 7. ஆகா சுல்தான் அகாச்சா, காமக்கிழத்தி.

குழந்தைகள்[தொகு]

 • பாபர் - குதுலூக் நிசார் கான்முடன் 
 • சகாங்கிர் மிர்சா - பாத்திமா சுல்தான் ஆகாவுடன் 
 • நசீர் மிர்சா - உமித் அகாசாவுடன் 
 • கான்செசுட்டு பேகம் - குதுலூக் நிசார் கானுடன் 
 • மெகர் பேனு பேகம் - ஓமித் அகாசாவுடன் 
 • சேர் பேனு பேகம் - ஓமித் அகாசாவுடன் யட்கர் 
 • சுல்தான் பேகம் - ஆகா சுல்தான் அகாசாவுடன் 
 • ருகையா சுல்தான் பேகம் - மக்மூம் சுல்தான் பேகம் உடன்

மேற்கோள்கள்[தொகு]

 1. Abraham Eraly (17 September 2007). Emperors Of The Peacock Throne: The Saga of the Great Moghuls. Penguin Books Limited. பக். 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5118-093-7. https://books.google.com/books?id=h7kPQs8llvkC&pg=PT18. 
 2. Annette Susannah Beveridge, The Bābur-nāma in English: (memoirs of Babar) (1922), p. 13
 3. B. S. Chandrababu, L. Thilagavathi, Woman, Her History and Her Struggle for Emancipation (2009), p. 201
 4. (Beveridge 1922, ப. 13, 33)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமர்_ஷேக்_மிர்ஸா_II&oldid=3603173" இலிருந்து மீள்விக்கப்பட்டது