சகரிசப்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சகரிசப்சு (உசுபேகியம்: Шаҳрисабз சகரிசப்சு; தாஜிக்: Шаҳрисабз; பாரசீகம்: شهر سبز: 'பச்சை நகரம்' / 'பசுமையான நகரம்'; உருசியம்: Шахрисабз) என்பது தெற்கு உசுபெக்கிசுத்தானின் கசுக்கடரியோ பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது சமர்கந்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தெற்கில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 2014ஆம் ஆண்டு நிலவரப்படி 1,00,300.[1] இது கடல் மட்டத்திலிருந்து 622 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வரலாற்றுரீதியாக இந்நகரம் கேஷ் அல்லது கிஷ் என்று அழைக்கப்பட்டது. இது நடு ஆசியாவில் ஒரு காலத்தில் முக்கியமான நகராக இருந்தது. பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் சோக்தியானா மாகாணத்தின் முக்கியமான நகர மையமாகத் திகழ்ந்தது. தற்காலத்தில் 14ஆம் நூற்றாண்டு துருக்கிய-மங்கோலியப் படையெடுப்பாளரானா தைமூரின் பிறப்பிடமாக அறியப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகரிசப்சு&oldid=3169480" இருந்து மீள்விக்கப்பட்டது