இமாம் ஹுசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமாம் உசைன் பள்ளிவாசல், கர்பலா, ஈராக்

இமாம் ஹுசைன் (Husayn ibn Ali or Al-Ḥusayn ibn ‘Alī ibn Abī Ṭālib) (அரபு மொழி: الحسين ابن علي ابن أبي طالب‎; (பிறப்பு: 10 சனவரி 626 – இறப்பு: 10 அக்டோபர் 680), இறைத்தூதர் முகமது நபியின் பேரனும், அலீபாத்திமா இணையரின் இரண்டாவது மகனாக மதீனாவில் பிறந்தவர். மேலும் ஹுசைன், சியா இசுலாமின் முதல் இமாமாகவும் சியா இஸ்லாமியரால் கருதப்படுபவர். இவரது அண்ணன் அல் ஹசன் ஆவார்.

உமையா கலீபகத்தின் முதல் கலிபாவான முதலாம் முஆவியா 680-இல் மறைவிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது மகன் யசீதின் ஆளுநருடன், மக்களுக்காக மோதல் ஏற்பட்டு , ஹுசைன் மக்காவிலிருந்து தற்கால ஈராக்கில் உள்ள கூபா நகரத்திற்கு தனது படைகளுடன் சென்ற போது [1] கர்பலா எனுமிடத்தில் 10 அக்டோபர் 680-இல் யசீதின் படைகள் ஹுசைனை இடைமறித்து தலையை கொய்தனர். எனினும் இந்த நிகழ்வு அங்குள்ள இஸ்லாமிய எதிரிகளால் தீட்டப்பட்ட சதி என்று அப்போது தான் ஹுசைனுக்கு தெரிந்தது [2] முகமது நபியின் பேரனை கொன்ற காரணத்தினால், கலீபகத்தில் பெரும் கலவரம் மூண்டது. பின்னர் உமையா கலீபகத்தினை வீழ்த்தி விட்டு அப்பாசிய வம்சத்தவர்கள் அப்பாசியக் கலீபகத்தை நிறுவினர். [3][4]

ஹுசைனின் நினைவை போற்றும் வகையில் சியா பிரிவு இசுலாமியர்கள் ஆண்டு தோறும் முகரம் மாதத்தின் பத்தாவது நாளான ஆஷூரா நாளை தியாகத் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.

நல்லடக்கம்[தொகு]

இமாம் ஹுசைன் பள்ளிவாசலில், அல் ஹுசைனின் கல்லறை, கர்பலா

கர்பலா நகரத்தில் இமாம் ஹுசைன் கொல்லப்பட்ட இடத்தில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.[5]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dakake 2008, ப. 81–82
  2. Gordon, 2005, pp. 144–146
  3. Cornell, Vincent J.; Kamran Scot Aghaie (2007). Voices of Islam. Westport, Conn.: Praeger Publishers. பக். 117 and 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780275987329. https://books.google.com/?id=y_eGWvPTtikC&dq=Karbala+Umayyads. பார்த்த நாள்: 4 November 2014. 
  4. Robinson (2010). "5 - The rise of Islam, 600–705 by". in Chase F.. The new Cambridge history of Islam, volume 1: Sixth to Eleventh Centuries. Cambridge: Cambridge University Press. பக். 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521838238. http://universitypublishingonline.org/cambridge/histories/ebook.jsf?bid=CBO9781139055932. 
  5. Halm (2004), pp. 15 and 16

மேற்கோள்கள்[தொகு]

நூற்கள்
கலைக்களஞ்சியங்கள்
வலைப்பூ

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாம்_ஹுசைன்&oldid=3849825" இலிருந்து மீள்விக்கப்பட்டது