இமாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இமாம் (Imam; அரபு மொழி: إمام) என்பது இசுலாமியர்களின் தலைமை நிலையை குறிக்கும். பொதுவாக இது பள்ளிவாசலில் வழிபாடு நேரத்தில் வழிபாட்டை தலைமை ஏற்று நடத்துபவரை குறிக்கும். இமாம் என்பவர் தொழுகையை நடத்துபவர் மட்டுமல்லாமல் மதத் தலைவராகவும், மதம் தொடர்பான நிகழ்வுகளில் மக்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும் இருப்பார்.

சியா இசுலாமியர்கள் பழக்கப்படி இமாம் என்பவர் முகம்மது நபி அவர்களின் குடும்பத்தினர்களான பன்னிரு இமாம்களை குறிக்கும்.[1][2]

பணிகள்[தொகு]

கெய்ரோ நகர பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்படும் ஓவியம்
 • தொழுகை நடத்துவது.
 • வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கம் செய்வது.
 • இசுலாமிய போதனைகள் செய்வது.
 • ரமலான் நோன்பு மாத தராவீஹ் தொழுகை நடத்துவது.[3]
 • இசுலாமிய பண்டிகைகளான ஈகைத் திருநாள் மற்றும் தியாகத் திருநாள் போன்றவற்றில் வாஜிபான சிறப்பு தொழுகை நடத்துவது.[3]
 • மத விசயங்களில் ஆலோசனை கூறுவது.
 • பல பள்ளிவாசல்களில் இமாம் குழந்தைகளுக்கு காலை மாலை இசுலாமிய படிப்புக்கான வகுப்புகள் எடுப்பர்.[4]

தகுதிகள்[தொகு]

 • இமாம் என்பவர் குர்ஆனைப் புரிந்து கொண்டு சரியாக மற்றும் அழகாக அதை ஓதிக்காண்பிக்க வேண்டும்.[3]
 • இமாம் சமூகத்தின் ஒரு மரியாதைக்குரிய உறுப்பினராக இருக்க வேண்டும்.[3]
 • சில சமூகங்களில், இமாம் சில சிறப்பு பயிற்சிகள் படித்து பணியமர்த்த படுகிறார்.[3]
 • இமாம் குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ், மற்றும் அரபு மொழி அறிவு இருக்க வேண்டும்.[4]

ஹதீஸ் தொகுப்பாளர்கள்[தொகு]

முகம்மது நபி கூறிய ஹதீஸ்களை தொகுத்த முகம்மது அல்-புகாரி, முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், இமாம் திர்மிதி, இமாம் நஸாயீ , இமாம் அபூதாவூத் போன்றவர்களும் இமாம் என அழைக்கப்படுகின்றனர்.

மத்ஹப்[தொகு]

சுன்னா இசுலாமிய பிரிவை சேர்ந்த நான்கு மத்ஹப் தோற்றுவித்த இமாம் மாலிக் [5], இமாம் அபூஹனீபா, இமாம் அகமது இப்னு ஹன்பல், இமாம் ஷாபி போன்றவர்களும் இமாம் என அழைக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Corbin 1993, p. 30
 2. Amir-Moezzi, Ali (2008). Spirituality and Islam.. London: Tauris. பக். 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781845117382. 
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 Imam
 4. 4.0 4.1 "10 Things Every Imam Should Do". TheRevival. 16 September, 2006 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 5. "Malik ibn Anas ibn Malik ibn `Amr, al-Imam, Abu `Abd Allah al-Humyari al-Asbahi al-Madani". Sunnah.org. 2011-06-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாம்&oldid=3373887" இருந்து மீள்விக்கப்பட்டது