புர்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புர்சா
பெருநகர மாநகராட்சி
புர்சா
மேல் இடது: நகர மையம், மேல் வலது: சாபெர் பிளாசா; நடு இடது: இர்கண்டி பாலம், நடு: அத்தாதுர்கின் சிலை, நடு வலது: புர்சா மணிக்கூண்டு; கீழ் இடது: புர்சா தாவரவியல் பூங்கா, கீழ் வலது: நகர மையம்
மேல் இடது: நகர மையம், மேல் வலது: சாபெர் பிளாசா;
நடு இடது: இர்கண்டி பாலம், நடு: அத்தாதுர்கின் சிலை, நடு வலது: புர்சா மணிக்கூண்டு;
கீழ் இடது: புர்சா தாவரவியல் பூங்கா, கீழ் வலது: நகர மையம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Turkey" does not exist.புர்சாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 40°11′N 29°03′E / 40.183°N 29.050°E / 40.183; 29.050ஆள்கூற்று: 40°11′N 29°03′E / 40.183°N 29.050°E / 40.183; 29.050
நாடு  துருக்கி
வலயம் மர்மரா
மாகாணம் புர்சா
குடியேற்றம் பொழயு.முன்பு 5200
அரசு
 • நகரத்தந்தை அலினூர் அக்தாசு (ஏகேபி)
 • வாலி (ஆளுநர்) முனிர் கரலோகு
பரப்பளவு
 • நகரம் 1,036
ஏற்றம் 100
மக்கள்தொகை (2015)[1][2]
 • பெருநகர மாநகராட்சி 18,54,285
 • அடர்த்தி 1,508.52
 • பெருநகர் 28,42,000
நேர வலயம் EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே) EEST (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு 16000
தொலைபேசி குறியீடு (+90) 224
Licence plate 16
இணையதளம் www.bursa.bel.tr
அலுவல் பெயர் புர்சாவும் குமாலிகிசிக்கும்: உதுமானியப் பேரரசு உருவாக்கம்
வகை பண்பாடு
வரன்முறை i, ii, iv, vi
தெரியப்பட்டது 2014 (38வது அமர்வு)
உசாவு எண் 1452
State Party  துருக்கி
வலயம் ஐரோப்பாவும் வட அமெரிக்காவும்

புர்சா (Bursa, உதுமானியத் துருக்கி بورسا) துருக்கியின் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இது அனத்தோலியாவின் வடமேற்கில், மர்மரா வலயத்தில் அமைந்துள்ளது. இது துருக்கியின் நான்காவது மக்கள்தொகை மிக்க நகரமாகும். நாட்டின் மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட பெருநகரப் பகுதிகளில் முதன்மையானதாக விளங்குகின்றது. இது புர்சா மாகாணத்தின் தலைநகரமாகவும் உள்ளது.

புர்சா 1335க்கும் 1363க்கும் இடைப்பட்டக் காலத்தில் உதுமானிய நாட்டின் முதல் முதன்மைத் தலைநகரமாகவும் இரண்டாவது பொதுத் தலைநகரமாகவும் இருந்தது. அக்காலத்தில் இந்த நகரம் உடாவென்டிகர் (Hüdavendigar, உதுமானியத் துருக்கி خداوندگار 'கடவுளின் கருணை') என அழைக்கப்பட்டது. அண்மைக்காலத்தில் எசி புர்சா (Yeşil Bursa, 'பசுமை புர்சா' ) என விளிக்கப்பட்டது. நகர்புறத்தில் பரவியுள்ள பூங்காக்களையும் தோட்டங்களையும் சுற்றியுள்ள பகுதியிலுள்ள வனங்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு அழைக்கப்பட்டது. தொன்மையான உலுடாக் குன்று இதை நோக்கியுள்ளது; அங்குள்ள பனிச்சறுக்கு மகிழ்விடுதி மிகவும் புகழ்பெற்றது. புர்சாவின் நகர வளர்ச்சி ஒரு ஒழுங்கமைவுடன் நடந்துள்ளது. உதுமானிய சுல்தான்களின் கல்லறைகள் புர்சாவில் உள்ளன. உதுமானியர் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் இன்று முதன்மையான பார்வையிடங்களாக உள்ளன. தவிரவும் இங்கு பல மருத்து நீருற்றுகளும் அருங்காட்சியகங்களும் உள்ளன.

2015இல், புர்சாவின் மக்கள்தொகை 1,854,285 ஆக இருந்தது. புர்சா மாகாணத்தின் மக்கள்தொகை 2,842,000 ஆகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Turkey: Major cities and provinces". citypopulation.de. பார்த்த நாள் 2015-02-08.
  2. 2.0 2.1 [1][தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்சா&oldid=2554696" இருந்து மீள்விக்கப்பட்டது