செல்யூக் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

دولت سلجوقیان
Dawlat-i Saljūqiān
செல்யூக் பேரரசு
Büyük Selçuklu Devleti
(துருக்கிய பேரரசு)
1037–1194
மாலிக் ஷா I இறந்த 1092ஆம் ஆண்டு செல்யூக் பேரரசு உச்சத்தில் இருந்தபோது [1]
மாலிக் ஷா I இறந்த 1092ஆம் ஆண்டு செல்யூக் பேரரசு உச்சத்தில் இருந்தபோது [1]
தலைநகரம்நிஷாபூர்
ஷேர்-இ-ரே,ஈரான்
இஸ்ஃபாஃகான்
பேசப்படும் மொழிகள்
  • பாரசீக மொழி (அலுவலக அரசவை மொழி)
  • அராபி (கல்வியாளர் மொழி, சமயம் மற்றும் கல்வி)
  • ஓகுசு துருக்கிய மொழி (ஓகுசு மக்களின் மற்றும் இராணுவத்தின் மொழி)
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் 
• 1037–1063
துக்ருல் பெக் (முதலாவது)
• 1174–1194
துக்ருல் III (கடைசி)[2][3]
வரலாறு 
• துக்ருல் பெக் இராச்சிய அமைப்பை உருவாக்கியது
1037
• கவாரெசிமியன் பேரரசால் பெயர்க்கப்பட்டது
1194
பரப்பு
1080 மதிப்பு.3,900,000 km2 (1,500,000 sq mi)
முந்தையது
பின்னையது
Ghaznavid Empire
Khwarezmian Empire
Sultanate of Rûm
Ayyubid dynasty
Atabegs of Azerbaijan
Burid dynasty
Zengid dynasty
Danishmends
Artuqid dynasty
Saltuklu
தற்போதைய பகுதிகள் ஆப்கானித்தான்
 ஆர்மீனியா
 அசர்பைஜான்
 ஈரான்
 ஈராக்
 இசுரேல்
 யோர்தான்
 கசக்கஸ்தான்
 கிர்கிசுத்தான்
 லெபனான்
 ஓமான்
 சிரியா
 தாஜிக்ஸ்தான்
 துருக்கி
 துருக்மெனிஸ்தான்
 ஐக்கிய அரபு அமீரகம்
 உஸ்பெகிஸ்தான்

மாபெரும் செல்யூக் பேரரசு (Great Seljuq Empire, Persian: دولت سلجوقیان‎, அரபு மொழி: الدولة السلجوقية‎) இடைக்காலத்தில் விளங்கிய ஒரு துருக்கிய-பாரசீக[4] சுன்னி இசுலாமியப் பேரரசு ஆகும். ஓகுசு துருக்கியர்களின் (Oghuz Turks) கிளை இராச்சியம் ஒன்றிலிருந்து உருவானது[5]. செல்யூக் பேரரசின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் கிழக்கே இந்துகுஷ் முதல் அனத்தோலியா வரையும் மத்திய ஆசியாவிலிருந்து பாரசீக வளைகுடா வரையும் பரந்த நிலப்பரப்பு இருந்தது. தங்கள் உறைவிடமான ஏரல் கடல் பகுதியிலிருந்து முதலில் கோராசன் எனப்படும் வடக்கு ஈரான் பகுதியைப் பிடித்து பின்னர் பாரசீகத்தை ஆட்கொண்டு இறுதியில் கிழக்கு அனத்தோலியா வரை முன்னேறினார்கள்.

செல்யூக் வம்சத்தின் செல்யூக் பெக் நிறுவ முயன்ற செல்யூக் பேரரசு அவரது மகன் துக்ருல் பெக் காலத்தில் 1037ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.செல்யூக்கினர் பிளவுபட்டிருந்த கிழக்கு இசுலாமிய உலகை ஒற்றுமைப்படுத்தி முதலாம் மற்றும் இரண்டாம் சிலுவைப் போர்களில் முக்கியப் பங்காற்றினர். மிகவும் பாரசீக தாக்கம் கொண்ட[4] பண்பாட்டையும் பாவித்த செல்யூக்கர்கள் துருக்கிய-பாரசீக மரபை வளர்த்தெடுத்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Black, Jeremy (2005). The Atlas of World History. Covent Garden Books. பக். 65, 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7566-1861-2. 
  2. A New General Biographical Dictionary, Vol.2, Ed. Hugh James Rose, (London, 1853), 214.
  3. Grousset, Rene, The Empire of the Steppes, (New Brunswick:Rutgers University Press, 1988), 167.
  4. 4.0 4.1 M.A. Amir-Moezzi, "Shahrbanu", Encyclopaedia Iranica, Online Edition, (LINK): "... here one might bear in mind that non-Persian dynasties such as the Ghaznavids, Saljuqs and Ilkhanids were rapidly to adopt the Persian language and have their origins traced back to the ancient kings of Persia rather than to Turkmen heroes or Muslim saints ..."
  5. *Jackson, P. (2002). "Review: The History of the Seljuq Turkmens: The History of the Seljuq Turkmens". Journal of Islamic Studies (Oxford Centre for Islamic Studies) 13 (1): 75–76. doi:10.1093/jis/13.1.75. 

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்யூக்_பேரரசு&oldid=2998524" இருந்து மீள்விக்கப்பட்டது