கலீபகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலீபகம் என்பது இஸ்லாமிய சட்டப்படி ஒரு பகுதியை ஆளும் அமைப்பை குறிக்கும்.[1] இந்த அமைப்பின் தலைவர் கலீப் என்று அழைக்கப்படுகிறார். இசுலாமிய இறைதூதர் முகமதுவின் அரசியல்-மத வழிவந்தவர் என்று கருதப்படுகிறார். மொத்த முஸ்லீம் உலகத்திற்கும் (உம்மா) தலைவர் என்று கருதப்படுகிறார். வரலாற்று ரீதியாக கலீபகங்கள் இஸ்லாமை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அமைப்புகளாக இருந்தன. பிற்காலத்தில் பல இன மக்களைக் கொண்ட பல நாடுகளை உள்ளடக்கிய பேரரசுகளாக உருவாயின.

ஒரு அரசியல் சக்தியாக கலீபகத்தின் முக்கியத்துவமானது வரலாறு முழுவதும் சீராக இல்லாதபோதும் இந்த அமைப்பானது ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து இருந்தது. 632இல் முகமதுவின் இறப்பிற்குப் பிறகு 1924இல் உதுமானியக் கலீபகம் கலைக்கப்படும் வரை இது நீடித்தது. நடு காலத்தில் மூன்று கலீபகங்கள் முக்கியமானவையாக இருந்தன. அவை ராசிதீன் கலீபகம், உமையா கலீபகம் மற்றும் அப்பாசியக் கலீபகம்.

உசாத்துணை[தொகு]

  1. Al Qalqashandi Ma'athir al-inafah fi ma'alim al-khilafah qtd. in Hassan, Mona. “Conceptualizing the Caliphate, 632–1517 CE.” Longing for the Lost Caliphate: A Transregional History, Princeton University Press, 2016, pp. 98–141, http://www.jstor.org/stable/j.ctt1q1xrgm.9
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலீபகம்&oldid=3343865" இலிருந்து மீள்விக்கப்பட்டது