துக்ரில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துக்ரில்

துக்ரில் (முழுப்பெயர்: ருக்ன் அல்-துன்யா வா அல்-தின் அபு தாலிப் முகம்மத் தொக்ருல்-பெக் இபின் மிக்கைல்) என்பவர் செல்யூக் பேரரசை நிறுவியவர் ஆவார். இவர் ஒரு துருக்மேனியர்.[1][2] 1037 முதல் 1063 வரை ஆட்சி செய்தார். பெரிய ஆசிய புல்வெளிகளில் இருந்த துருக்மேனிய போர்வீரர்களை பழங்குடி இனங்களின் ஒரு கூட்டமைப்பாக ஒன்றிணைத்தார். அவர்கள் அனைவரும் செல்யூக் என்ற பெயருடைய ஒரு மூதாதையரை கொண்டிருந்தனர். அவர்களைக் கொண்டு கிழக்கு ஈரானை இவர் கைப்பற்றினார். பாரசீகத்தை வென்று 1055 ஆம் ஆண்டு புயிட்களிடமிருந்து அப்பாசிய தலைநகரமான பகுதாதுவை மீட்டெடுத்த பின்னர் செல்யூக் சுல்தானகத்தை இவர் நிறுவினார். துக்ரில் அப்பாசிய கலீபாக்களை மாநில தலைவர்களாக மாற்றி வெளியேற்றினார். பைசாந்தியப் பேரரசு மற்றும் பதிமிட்களுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களில் கலீபகத்தின் ராணுவத்திற்கு தலைமை தாங்கினார். தனது பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தவும் இஸ்லாமிய உலகத்தை ஒன்று படுத்தவும் அவர் இவ்வாறு செய்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

குராசான்,திரான்சாக்சியானா மற்றும் தோகரிஸ்தானின் வரைபடம்.

இவர் தந்தை பெயர் மிக்கைல் பெக் இபின் செல்யூக். தனது தந்தை இறந்த பொழுது துக்ரில் மற்றும் அவரது சகோதரர் சக்ரி ஆகியோர் அவர்களின் தாத்தாவான செல்யூக்கால் வளர்க்கப்பட்டனர். செல்யூக்கிற்கு முசா யக்பு மற்றும் அர்ஸ்லான் இஸ்ரைல் ஆகிய பெயருடைய மற்ற மகன்களும் இருந்தனர். அர்ஸ்லான் இஸ்ரைல், துக்ரில் உடன் பின்னாளில் ஈரானிய பீடபூமிக்கு பயணித்தார். அண். 1016 ஆம் ஆண்டு துக்ரில் அதிகாரத்திற்கு வந்தார்.

துக்ரிலின் நாணயங்கள்

மரபு[தொகு]

சுல்தான் துக்ரில் சந்தேகமின்றி ஒரு ராணுவ மேதை ஆவார்.

துக்ரிலின் படையெடுப்புகள் வெல்லப்பட்ட மக்களின் வாழ்வை மட்டும் மாற்றாமல் நாடோடிகளின் வாழ்க்கையையும் மாற்றியது. நாடோடிகள் புதிய அரசை நிறுவும் பணியில் பங்கேற்றனர்.

உசாத்துணை[தொகு]

  1. Grousset, Rene, The Empire of the Steppes, (Rutgers University Press, 1991), 161,164; "It is to be noted that the Seljuks, those Turkomans who became sultans of Persia..."
  2. Fleet, Kate (2009). The Cambridge History of Turkey: Byzantium to Turkey, 1071–1453: Volume 1. Cambridge University Press. பக். 1. https://assets.cambridge.org/97805216/20932/excerpt/9780521620932_excerpt.pdf. "The defeat in August 1071 of the Byzantine emperor Romanos Diogenes by the Turkomans at the battle of Malazgirt (Manzikert) is taken as a turning point in the history of Anatolia and the Byzantine Empire.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்ரில்&oldid=3912422" இலிருந்து மீள்விக்கப்பட்டது