துருக்மெனியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துருக்மெனியர் என்பவர் மத்திய ஆசியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு துருக்கிய இனக்குழு ஆவர். இவர்கள் பெரும்பான்மையாக துருக்மெனிஸ்தான், வடக்கு மற்றும் வடகிழக்கு ஈரானிய பகுதிகள் மற்றும் வடமேற்கு ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவிலான குழுக்கள் உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் வடக்கு காக்கேசியா ஆகிய பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் துருக்மென் மொழியை பேசுகின்றனர். இம்மொழி துருக்கிய மொழிகளில் கிழக்கு ஒகுஸ் கிளையின் ஒரு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. துருக்கியம், அசர்பெய்ஜானி, கஷ்கை, ககவுஸ், குராசானி மற்றும் சலார் ஆகிய மொழிகள் ஒகுஸ் மொழிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.[1]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருக்மெனியர்&oldid=3311412" இருந்து மீள்விக்கப்பட்டது