சதாசிவராவ் பாவ்
சதாசிவராவ் பாவ் | |
---|---|
![]() சதாசிவ்ராவ் பாவின் மார்பளவு உருவப்படம் c.1760 | |
![]() | |
பதவியில் 1760 – 14 ஜனவரி 1761 | |
ஆட்சியாளர் | இரண்டாம் இராஜாராம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புனே, மராட்டியப் பேரரசு (நவீன மகாராட்டிரம், இந்தியா) | 4 ஆகத்து 1730
இறப்பு | 14 சனவரி 1761 பானிப்பத், மராட்டியப் பேரரசு (நவீன அரியானா, இந்தியா) | (அகவை 30)
துணைவர்(கள்) | உமாபாய் பார்வதிபாய் |
உறவுகள் | பாஜிராவ் விசுவாசராவ் மாதவராவ் பேஷ்வா நாராயணராவ் பாலாஜி பாஜி ராவ் இரகுநாதராவ் சம்ஷேர் பகதூர் (கிருஷ்ணா ராவ்) |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
இராணுவ சேவை | |
பற்றிணைப்பு | ![]() |
கிளை/சேவை | ![]() |
சேவை ஆண்டுகள் | 1746 – 1761 |
தரம் | படைத் தளபதி (1760 – 1761) |
போர்கள்/யுத்தங்கள் |
|
சதாசிவராவ் பேஷ்வா (Sadashivrao Peshwa) (3 ஆகத்து 1730 - 14 சனவரி 1761) இவர் முதலாம் பாஜிராவின் இளைய சகோதரரான சிமாஜி அப்பா என்பவருக்கும் இரக்மாபாய் (பெத்தே குடும்பம்) என்பவருக்கும் மகனாவார். மேலும் பாஜிராவ் பேஷ்வாவின் மருமகனுமாவாவார். இவர் மூன்றாவது பானிபட் போரில் மராட்டிய இராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றினார்.[9]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சதாசிவராவ், பேஷ்வா பாஜி ராவின் சகோதரர் சிமாஜி அப்பாவின் மகனாக புனேவில் பிறந்தார்.[10] இவரது தாயார் இரக்மாபாய் இவர் பிறந்த ஒரு மாதத்திலேயே இறந்துவிட்டார். இவரது தந்தை இவரது பத்து வயதில் இறந்தார். இவரை இவரது பாட்டி இராதாபாய் மற்றும் இவரது அத்தை காசிபாய் ஆகியோர் கவனித்துக் கொண்டனர். இவர் சாத்தாராவில் கல்வி கற்றார்.[11]
முதல் போர்
[தொகு]பாராமதியின் பாபுஜி நாயக் மற்றும் அக்கல்கோட்டின் பதே சிங் போன்சுலே ஆகியோருக்கு எதிராக இவர் 1746 இல் கர்நாடகாவில் தனது முதல் போரை மேற்கொண்டார். தனது அரசியல் ஆலோசகர்களாக இருந்த மஹாதோபா புரந்தரே மற்றும் சாகரம் பாபு ஆகியோருடன் இவர் 1746 திசம்பர் 5 ஆம் தேதி புனேவிலிருந்து படைகளுடன் சென்றார். இந்தப் போர் மே 1747 வரை பெரும்பாலும் மேற்கு கர்நாடக பிராந்தியத்தில் தொடர்ந்தது. சனவரி 1747 இல் கோலாப்பூருக்கு தெற்கே அஜ்ராவில் தனது முதல் போரில் வெற்றி பெற்றார். சவ்னூரின் நவாப் தண்டிக்கப்பட்டார், பகதூர் பெண்டாவின் கோட்டை கைப்பற்றப்பட்ட. மேலும் கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரா ஆறுகளுக்கு இடையிலான பகுதிகளுக்கு வரி விதிக்கப்பட்டது. இந்தப் போரில் அனைவரும் சேர்ந்து 36 பர்கானாக்களை கைப்பற்றினர்.
உத்கீர் போர்
[தொகு]ஐதராபாத் நிசாமை பலவீனப்படுத்திய உத்கீர் போரை இவர் வெற்றிகரமாக வழிநடத் தௌலதாபாத் கோட்டையை வென்றார்.
மூன்றாம் பானிபட் போர்
[தொகு]

மூன்றாம் பானிபட் போர் 14 சனவரி 1761ல்தில்லிக்கு வடக்கே 60மைல் (97கி.மீ) தொலைவில் பானிபட் என்ற இடத்தில் மராட்டிய பேரரசின் வடக்கு படைக்கும், ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது சா அப்தாலிக்கும் இடையில் நடந்தது.
ஆப்கானியர்களுக்கு எதிரான இப்போரில் இராசபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை. எனவே மராத்தியப் படைகள் தோல்வி கண்டது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
சனவரி 1760 இல், அகமது ஷா துரானிபஞ்சாப் பகுதியை ஆக்கிரமித்து அதை கைப்பற்றியிருந்தார். பஞ்சாபை கைப்பற்றுவதற்கானப் போரில் துரானி கடுமையான ஆரம்ப இழப்புகளை எதிர்கொண்டாலும் இறுதியில் இறுதியில் மராத்திய இராணுவம் தோற்கடிக்கப்பட்டது. சதாசிவராவின் மருமகனும், நானாசாகேப் பேஷ்வாவின் வாரிசுமான விசுவாசராவ் இப்போரில் போரில் சம்பவ இடத்திலேயே இறந்தார். விசுவாசராவின் மரணம் அவரது துருப்புக்களின் மன உறுதியை குறைத்தது. பாவின் படைகளின் குழப்பத்தையும் பலவீனத்தையும் சாதகமாக்க துரானி தாக்கினார். பாவ் எதிர் தாக்குதல் நடத்தினார், ஆனால் மற்றும் மீதமுள்ள வீரர்கள் கொல்லப்பட்டனர். இப்போரில் சதாசிவராவ் இறந்துவிட்டார் என்று கருதப்படுகிறது.
[[படிமம்:The_Third_battle_of_Panipat_13_January_1761.jpg|thumb| அகமத் ஷா துரானியும் அவரது கூட்டணியும் மூன்றாவது பானிபட் போரின்போது மராட்டிய கூட்டமைப்பை தீர்க்கமாக தோற்கடித்தனர்.[12]
குடும்பம்
[தொகு]இவரது முதல் மனைவியின் பெயர் உமாபாய். இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தப் பின் உமாபாய் 1750 இல் இறந்தார். சதாசிவராவின் இரண்டாவது மனைவி பார்வதிபாய் மூன்றாம் பானிபட் போரின்போது சதாசிவராவ் பாவ் உடன் சென்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mehta, Jaswant Lal (January 2005). Advanced Study in the History of Modern India 1707-1813. Sterling Publishers Pvt. ISBN 978-1-932705-54-6.
- ↑ https://archive.org/details/in.ernet.dli.2015.32142 pg.291-292
- ↑ https://archive.org/details/in.ernet.dli.2015.32142 pg.325
- ↑ Mehta, Jaswant Lal (January 2005). Advanced Study in the History of Modern India 1707-1813. Sterling Publishers Pvt. ISBN 978-1-932705-54-6.
- ↑ https://archive.org/details/in.ernet.dli.2015.32142 pg.330
- ↑ https://archive.org/details/in.ernet.dli.2015.32142 pg.333- 334
- ↑ https://archive.org/details/in.ernet.dli.2015.32142 pg.352
- ↑ https://archive.org/details/in.ernet.dli.2015.32142 pg 250- 345
- ↑ "Third Battle of Panipat (1761)". Government of Haryana, India. Retrieved 6 November 2023.
- ↑ Patil, Vishwas. Panipat.
- ↑ "Bravest of the Brave Marathas". www.thisday.app. Retrieved 6 November 2023.
- ↑ Mehta, Jaswant Lal (2005). Advanced Study in the History of Modern India 1707-1813. Sterling Publishers Pvt. Ltd. pp. 202–. ISBN 978-1-932705-54-6.
இதனையும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Tryambak Shankar Shejwalkar, Panipat 1761 (Deccan College Monograph Series. I.), Pune (1946)
- Pramod Oak, "Peshwe gharanyacha Itihas"