துரானி அரசமரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துரானி அரசமரபு (Durrani dynasty) (பாரசீக மொழி: سلسله درانیان‎; பஷ்தூ: د درانيانو کورنۍ) என்பது 1747ஆம் ஆண்டு ஆப்கானித்தானின் காந்தாரத்தில் அகமது ஷா துரானியால் நிறுவப்பட்ட ஓர் அரசமரபு ஆகும். வேறுபட்ட பஸ்தூன் பழங்குடியினங்களை ஒன்றிணைத்த பிறகு இவர் துரானிப் பேரரசை அமைத்தார்.[1] இது அதன் உச்சபட்ச அளவில் தற்கால ஆப்கானித்தான், பாக்கித்தான் மற்றும் மேலும் ஈரானின் வட கிழக்கு பகுதிகள், கிழக்கு துருக்மெனிஸ்தான் மற்றும் வட மேற்கு இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.[2]

19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் போது துரானிகளை இடம் மாற்றி விட்டு பரக்சாய் அரசமரபானது ஆட்சிக்கு வந்தது.

அகமது ஷா மற்றும் அவரது வழித்தோன்றல்கள் துரானிகளின் போபல்சாய் வழியை (பின்னர் அப்தாலிகள் என்று அறியப்பட்டனர்) சேர்ந்தவர்களாவர். இவ்வாறாக கோதக் அரசமரபுக்குப் பிறகு கந்தகாரின் இரண்டாவது பஸ்தூன் ஆட்சியாளர்களாக இவர்கள் திகழ்ந்தனர். துரானிகள் 18ஆம் நூற்றாண்டின் இரண்டாம் [3]பாதியில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் அகமது ஷா துரானியின் தலைமைத்துவம் ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jonathan L. Lee "Afghanistan: A History from 1260 to the Present", pp. 124, 132, 134.
  2. Snedden, Christopher (2015) (in en). Understanding Kashmir and Kashmiris. Oxford University Press. பக். 43, 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84904-342-7. https://books.google.com/books?id=s5KMCwAAQBAJ&q=durrani+capture+kashmir&pg=PA43. 
  3. "Ahmad Shah and the Durrani Empire". Library of Congress Country Studies on Afghanistan. 1997. பார்க்கப்பட்ட நாள் 2010-08-25.
  4. "The Durrani dynasty".. (2010). 

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரானி_அரசமரபு&oldid=3776488" இலிருந்து மீள்விக்கப்பட்டது