இந்திய-பாகிஸ்தானிய எல்லை
Jump to navigation
Jump to search
இந்திய-பாகிஸ்தானிய எல்லை (இந்தி: इंडिया-पाकिस्तान बोर्डर, உருது: انڈیا-پاکستان بورڈر), உள்ளூரில் சர்வதேச எல்லை (IB) எனப்படுவது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடைப்பட்ட சர்வதேச எல்லைக்கோடாகும். இது இந்திய மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தையும் பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப் மற்றும் சிந்துவையும் பிரிக்கிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையை அடுத்து இந்தியா, (மேற்கு மற்றும் கிழக்கு) பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் உருவான போது இந்த எல்லைக்கோடு உருவானது.
கட்டுப்பாட்டு கோடு (LoC) இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு காஷ்மீரையும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஆசாத் காஷ்மீரையும் பிரிக்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானைக் கடக்கும் முக்கிய சம்பிரதாய புள்ளியாக உள்ள வாகா (பஞ்சாபி: ਵਗਾਹ உருது: واگہ) ஆனது இந்த எல்லைக்கோட்டில் அமைந்துள்ளது.
காட்சியகம்[தொகு]
|