வாகா
வாகா
واہگہ | |
---|---|
Union Council | |
Wahga | |
வாகாவின் இடம் | |
ஆள்கூறுகள்: 31°36′17″N 74°34′23″E / 31.60472°N 74.57306°E | |
Country | பாக்கித்தான் |
Province | பஞ்சாப் |
மாவட்டம் | லாகூர் |
Union Council | 181 |
நேர வலயம் | ஒசநே+5 (பாசீநே) |
வாகா (Wagah, பஞ்சாபி: ਵਾਹਗਾ, இந்தி: वाघा) இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் இடையேயான ஒரே சாலைப்புற எல்லையாகும்.[1] இது பெரும் தலைநெடுஞ்சாலையில் இந்திய பஞ்சாபின் அம்ரித்சர் நகரத்திற்கும், பாக்கித்தானிய பஞ்சாபின் லாகூர் நகரத்திற்கும் இடையே அமிர்தசரசிலிருந்து 32 கிலோமீட்டர்கள் (20 mi) தொலைவிலும் இலாகூரிலிருந்து 22 கிலோமீட்டர்கள் (14 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.
மேலோட்டம்
[தொகு]வாகா, (பாக்கித்தானில் வாகஹ் என்றழைக்கப்படுகிறது) இந்தியப் பிரிவினையின்போது இந்தியாவையும் பாக்கித்தானையும் பிரிக்கப் போடப்பட்ட சர்ச்சைக்குரிய ராட்கிளிஃப் கோடு செல்கின்ற சிற்றூர் ஆகும்.[2] 1947இல் இந்தச் சிற்றூர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது கிழக்குப் பகுதியிலுள்ள வாகா கிராமம், இந்தியக் குடியரசிலும் மேற்கு வாகா கிராமம் பாக்கித்தானிலும் உள்ளது.
ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு நடைபெறும் விரிவான வாகா எல்லைச் சடங்குக்காக இச் சிற்றூர் புகழ் பெற்றது.[2]
2014 தற்கொலைத் தாக்குதல்
[தொகு]நவம்பர் 2, 2014 அன்று வாகா எல்லைப்பகுதியின் பாக்கித்தான் புறத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றால் 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்; 110க்கும் கூடுதலானவர்கள் காயமுற்றனர். மாலையில் வாகா எல்லைச் சடங்கு முடிந்த பின்னர் குண்டு வெடித்தது.[3] பாக்கித்தானின் ஜுன்டால்லா என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பு இந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இதே அமைப்பு முந்தைய செப்டம்பரில் பெஷாவர் நகரில் கிறித்தவ தேவாலயமொன்றில் நிகழ்த்திய தாக்குதலில் 78 கிறித்தவர்கள் மாண்டனர்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Mixed feelings on India-Pakistan border". BBC News. 14 August 2007. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6945626.stm.
- ↑ 2.0 2.1 Frank Jacobs (3 July 2012). "Peacocks at Sunset". Opinionator: Borderlines. The New York Times. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.
- ↑ "Pakistan blast 'kills 60' at Wagah border with India". DAWN News. 2 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]தொடர்பான செய்திகள் உள்ளது.
- Michael Palin at the India-Pakistan border ceremony on the Pakistani side (from Himalaya with Michael Palin). BBCWorldwide video on YouTube.
- Sanjeev Bhaskar at the India-Pakistan border ceremony on the Indian side. BBCWorldwide video on YouTube.
- Pictures of independence's 60th anniversary celebration at Wagah Border பரணிடப்பட்டது 2008-01-23 at the வந்தவழி இயந்திரம்