உள்ளடக்கத்துக்குச் செல்

2014 வாகா எல்லை தற்கொலைத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014 வாகா எல்லை குண்டுவெடிப்பு
இடம்வாகா, பஞ்சாப், பாக்கித்தான்
ஆள்கூறுகள்31°36′16.9″N 74°34′22.5″E / 31.604694°N 74.572917°E / 31.604694; 74.572917
நாள்நவம்பர் 2, 2014 (2014-11-02)
17.30 (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+5)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
குடிமக்கள்
தாக்குதல்
வகை
தற்கொலைத் தாக்குதல்
ஆயுதம்வெடிகுண்டு
இறப்பு(கள்)60[1]
காயமடைந்தோர்100
தாக்கியோர்ஜமாத்-உல்-அரார்[2]
சந்தேக நபர்ஜுண்டுல்லா
நோக்கம்சார்ப்-இ-அஸ்ப் நடவடிக்கைக்கு எதிராக
இலாகூர் is located in பாக்கித்தான்
இலாகூர்
இலாகூர்
வாகா எல்லையின் அமைவிடம்

நவம்பர் 2, 2014 அன்று இந்தியாவிற்கும் பாக்கிதானுக்கும் வாகா எல்லையில் நாள்தோறும் நடைபெறும் கொடியிறக்கல் சடங்கிற்குப் பிறகு தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது.[3]

பின்னணி

[தொகு]

ஒவ்வொரு நாளும்இந்திய-பாக்கிதானிய எல்லையில் வாகா எல்லைச் சடங்கு நடைபெறும்; இதனை இரு நாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் எல்லையின் இருபுறத்தும் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து காண்பது வழமையாகும்.

எச்சரிக்கை

[தொகு]

அடையாளம் காணா அலுவலர் ஒருவரின் கூற்றுப்படி, சட்டக் கட்டுப்பாட்டுப் படைகளுக்கு வாகா எல்லையில் இத்தகைய தாக்குதல் நடைபெறும் என எச்சரிக்கை கிடைத்தது. காணாமல் போன இளைஞர் ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்துனராக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை காவல்துறை நவம்பர் 1 அன்று எல்லையிலுள்ள பாக்கித்தான் ரேஞ்சர்சுக்கு வழங்கியதாகவும் இலாகூர் காவல்துறை ஆணையரின் அலுவலகம் தெரிவித்தது. [4]

தாக்குதல்

[தொகு]

பாக்கிதான் துணை இராணுவப்படையினர் சோதனைச்சாவடிக்கருகே உள்ள தானுந்து நிறுத்துமிடத்தில் உணவகம் ஒன்றிற்கு வெளியே குண்டு வெடித்தது. [5][6][7] 25 கிலோ[8] எடையுள்ள வெடிபொருள் வெடித்துள்ளதாகத் தெரிகிறது. அருகிலுள்ள கடைகளும் கட்டிடங்களும் இடிபட்டுள்ளன.

துவக்கநிலையில் சமையல் எரிவாயுக்கலன் வெடித்தது என நம்பப்பட்டது. பின்னதாக பாக்கித்தான் ரேஞ்சர்சு தலைமை இயக்குநர் கான் தாகிர் கான் தற்கொலைத் தாக்குதல் நடந்ததாக உறுதி செய்தார். அணிவகுப்பு நிகழிடத்தில் இருந்த சோதனைக் கட்டுப்பாடுகளினால் தற்கொலை தீவிரவாதி சற்றுத் தொலைவில் வெடித்ததாகவும் கூறினார். பார்வையாளர்கள் அமர்கின்ற இடத்திற்கு செல்லச் சோதனைச் சாவடியை கடக்க முடியாது என்பதால் சோதனைச்சாவடிக்கு மிக அருகில் வெடித்துள்ளான்.[9]

செயலிழக்கம் செய்யப்பட்ட வெடிபொருள்கள்

[தொகு]

இந்தத் தாக்குதலுக்கு பின்னர் நடைபெற்ற சோதனைகளில் குண்டு வெடித்த இடத்திற்கு அண்மையில் மிகுந்த அளவிலான வெடிபொருட்களையும் தற்கொலைச் சட்டைகளையும் கண்டெடுத்தனர். இவை யாவும் செயலிழக்கச் செய்யப்பட்டன.[10]

தாக்குண்டோர்

[தொகு]

குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர்; 100க்கும் கூடுதலானவர்கள் காயமடைந்தனர்.[11] பஞ்சாப் அரசு இலாகூரின் அனைத்துப் பொது மருத்துவமனைகளிலும் நெருக்கடி நிலையை அறிவித்தது.[12] தாக்கப்பட்டவர்களில் 10 பெண்களும் எட்டு சிறுவயதினரும் அடக்கம்.[13] ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்தனர்.[9]

பொறுப்பும் நோக்கமும்

[தொகு]

இந்தத் தற்கொலைத் தாக்குதலிற்கு தடை செய்யப்பட்டுள்ள ஜுண்டாலாவும் ஜமாத்-உல்-அராரும் பொறுப்பேற்றன.

பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபானிலிருந்து பிரிந்த இந்த அமைப்பின் தொடர்பாளர் அகமது மார்வத் இது பாக்கித்தானின் படைத்துறை முன்னெடுத்த சார்ப்-இ-அஸ்ப் நடவடிக்கைக்கும் வாசிரித்தான் நடவடிக்கைக்குமான எதிர்வினை என்று தொலைபேசியில் கூறினார்.[14]

ஜமாத்-உல்-அரார் குழு இது தங்கள் உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறியது. இதற்கு மற்ற குழுக்கள் பொறுப்பென்று கூறிக்கொண்டாலும் அவை அடிப்படையில்லாதவை. விரைவில் இத்தாக்குதல் குறித்த ஒளிதத்தை வெளியிடுவோம் என்று ஜமாத்-உல்-அரார் தொடர்பாளர் எசானுல்லா எசான் கூறினார். வடக்கு வாசிரித்தானில் ஏதுமறியா மக்கள் கொல்லப்பட்டதற்கான எதிர்வினை இது என்றும் அவர் குறிப்பிட்டார்.[15]

மேலும் காண்க

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. http://www.dawn.com/news/1142006/ttp-splinter-groups-claim-wagah-attack-60-dead
  2. http://www.dawn.com/news/1142307/wagah-attack-ahrar-claim-of-responsibility-appears-more-credible
  3. http://indianexpress.com/article/world/world-others/pakistan-at-least-30-killed-in-explosion-at-wagah-border-crossing/
  4. http://www.dawn.com/news/1142169/questions-about-breach-at-wagah-abound
  5. http://tribune.com.pk/story/784976/cylinder-blasts-kill-3-in-islamabad-injure-2-in-karachi/
  6. http://www.thenews.com.pk/article-164531-Blast-at-Wagah-border,-dozens-killed,-scores-hurt
  7. http://www.dawn.com/news/1142006/at-least-45-killed-after-blast-near-wagah-border
  8. http://thediplomat.com/2014/11/scores-killed-in-suicide-attack-on-india-pakistan-border/
  9. 9.0 9.1 http://www.aljazeera.com/news/asia/2014/11/pakistan-india-border-blast-2014112141227182769.html
  10. http://www.dawn.com/news/1142188/fresh-explosives-defused-near-wagah-bomb-site
  11. "60 Killed in Pakistan in Suicide Attack at Wagah Border". NDTV. 3 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.
  12. Gilani, Iqtidar (3 November 2014). "Emergency at hospitals". The Nation. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.
  13. PTI (3 November 2014). "Death toll in Pakistan suicide attack at Wagah Border rises to 61". Economic Times. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.
  14. http://www.dawn.com/news/1142006/jundullah-claims-suicide-attack-near-wagah-border-45-dead
  15. http://www.dawn.com/news/1142006/ttp-splinter-groups-claim-wagah-attack-60-dead