சார்ப்-இ-அஸ்ப் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சார்ப்-இ-அஸ்ப் நடடிக்கை (Operation Zarb-e-Azb, உருது : آپریشن ضربِ عضب‎) என்பது பாக்கித்தான் இராணுவத்தால் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் இராணுவ நடவடிக்கை ஆகும். ஸார்ப்-இ-அஸ்ப் எனும் சொல்லுக்கு துல்லியமாக வெட்டுதல் (கூர்மையாக மற்றும் வெட்டுதல் - sharp and cutting) என்று பொருள்.[1] இந்நடவடிக்கையானது உஸ்பெக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், அல் காயிதா, பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் மற்றும் பிற இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக பாக்கிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் நடக்கு இராணுவ நடவடிக்கையாகும்.[2]

தாக்குதல்[தொகு]

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தியதி இந்த இராணுவ நடவடிக்கைகள் 2014 ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து பதில் நடவடிக்கையாக பாக்கிஸ்தானின் வடக்கு வசீரிஸ்தான் பகுதி மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் தொடங்கப்பட்டது. இந்நடவடிக்கை பரந்த நடவடிக்கை (comprehensive operation) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இராணுவத் தாக்குதலின் நோக்கம் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் ஒளிந்துள்ள உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுத் தீவிரவாதிகளை ஒழிப்பதாகும். பாக்கிஸ்தானிய இராணுவம் நடத்திய இராணுவத் தாக்குதலில் 2014 ஜூன் 16 காலை வரை 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.[3] மேலும் 17 ஜூன் 2014 அன்று நடந்த விமானத் தாக்குதலில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.[4] 17 ஜூன் 2014 அன்று இதுவரை மொத்தம் 187 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5]

வீரர்கள் பலி[தொகு]

ஆப்கானிஸ்தான் எல்கைக்கு அருகேயான தாக்குதலில் பாக்கிஸ்தான் இராணுவத்தைச் சார்ந்த ஆறு வீரர்கள் பலியாகினர் மேலும் மூவர் காயமுற்றனர்.[5]

இராணுவத் தளபதியின் பயண மாற்றம்[தொகு]

பாக்கிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீஃப் (Raheel Sharif) இலங்கை செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வடக்கு வஸீரிஸ்தான் பகுதியில் ஸார்ப்-இ-அஸ்ப் நடடிக்கை மேற்கொள்ளப்படுவதால், இலங்கைக்கான தனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.[4]

எல்லை மூடல்[தொகு]

பாக்கிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆப்கானியப் பிரதமர் ஹமீத் கர்சாயிடம் வடக்கு வஸீரிஸ்தான் தாக்குதலில் தீவிரவாதிகள் தப்பித்து ஆப்கானிஸ்தானுக்குள் பதுங்குவதைத் தவிர்க்கப் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லையை மூடக் கேட்டுக் கொண்டார்.[6]

இடப்பெயர்வு[தொகு]

இராணுவத்தினர் பயங்கரவாதிகளைத் தாக்குவதற்காக பீரங்கிகள் மற்றும் இதர இராணுவ வாகனங்களையும், வீரர்களையும் தாலிபான்கள் அதிகம் உள்ள இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இத்தகைய சூழ்நிலையின் காரணமாக 30,000 அதிகமான மக்கள் வடக்கு வஸீரிஸ்தான் பகுதியின் மிராலி (Mirali) நகரிலிருந்து இடம் பெயர்ந்துள்ளனர். இந்த இராணுவ நடவடிக்கையின் காரணமாய் மொத்தம் 92,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.பெரும்பாலானவர்கள் கைபர் பகுதியிலுள்ள பான்னு மாவட்டத்திற்கு (Bannu district) இடம்பெயர்ந்துள்ளனர்.[7]

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Desk, Web (10 June 2014). "Operation Zarb-e-Azb updates: Potential terrorist bases cordoned off; surrender points established". The Express Tribune. 15 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-06-16 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2014-06-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.dawn.com/news/1112909/zarb-e-azb-operation-120-suspected-militants-killed-in-n-waziristan
  4. 4.0 4.1 http://www.dawn.com/news/1113302/15-more-killed-in-fresh-n-waziristan-air-strikes
  5. 5.0 5.1 http://www.dawn.com/news/1113108/nwa-operation-seven-more-militants-killed-toll-rises-to-187
  6. http://www.dawn.com/news/1113312/sharif-urges-karzai-to-seal-pak-afghan-border
  7. http://www.dawn.com/news/1113681/30000-flee-as-curfew-eased-in-some-areas