உள்ளடக்கத்துக்குச் செல்

நெடுஞ்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெவாடாவில் உள்ள நெடுஞ்சாலை

நெடுஞ்சாலை (Highway) என்பது பொதுவாக பொதுமக்கள் பாவனைக்காக முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளைக் குறிக்கும்.

சில நெடுஞ்சாலைகள் பல நாடுகளையும் இணைக்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள "நெடுஞ்சாலை 1" உலகிலேயே மிக நீண்டதாகும். இது 20,000கிமீ நீளமானதாகும்.


மேற்பார்வை

[தொகு]

பழங்காலத்தில் மக்கள் நெடுஞ்சாலைகளை நடைப்பயனமாகவோ அல்லது குதிரைகள் மூலமாகவோ பயன்படுத்தி வந்தனர். பின்னர் சாலை கட்டுமான மேம்பாட்டின் காரணமாக அவர்கள் மிதிவண்டிகள், மோட்டார் சைக்கில் மற்றும் கார்கள் போன்றவற்றை பயன்படுத்தினர்.

முக்கிய நெடுஞ்சாலைகள் பொதுவாக அவற்றை உருவாக்க மற்றும் பராமரிக்க என்று அரசாங்கங்கள் அவற்றிற்கு பெயர் மற்றும் சாலை எண்கள் தரப்படுகின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்காவிலேயே பெரியளவிலான நெடுஞ்சாலைக் கட்டமைப்பு காணப்படுகிறது. அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள், பெரும் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் இங்கு அமைக்கப்படுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவில் பெரும் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு உள்ளது.

வரலாறு

[தொகு]

நவீன நெடுஞ்சாலை அமைப்புகள் 20 ஆம் நூற்றாண்டில் வாகனப் போக்குவரத்து பிரபலமடைந்த்தால் விரிவாக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுஞ்சாலை&oldid=2754254" இலிருந்து மீள்விக்கப்பட்டது