ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு
ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு ஆங்கிலம்: Asian Highway Network (AH) அல்லது Great Asian Highway) என்பது ஆசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தின் கீழ் வருகின்ற நெடுஞ்சாலைகளின் வலையமைப்பு ஆகும். இந்தத் திட்டம் ஆசியாவில் உள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக ஆசியாவைச் சேர்ந்த நாடுகளும், ஐரோப்பாவைச் சேர்ந்த சில நாடுகளும், "எஸ்காப்" (ESCAP) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் ஆசியாவுக்கும் பசிபிக்குக்குமான பொருளியல் சமூக ஆணையம் (Economic and Social Commission for Asia and the Pacific) என்னும் நிறுவனமும் கூட்டாகச் செயற்படுத்தும் ஒரு திட்டம் ஆகும்.
இந்தத் திட்டம் 1959-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது. 1960-க்கும் 1970-க்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற இதன் முதல் கட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டன. எனினும், 1975-ஆம் ஆண்டில் நிதி உதவிகள் நிறுத்தப் பட்டதனால் திட்டத்தின் முன்னேற்றம் தடைப்பட்டது.
1992-ஆம் ஆண்டில் எஸ்காப் ஆணையத்தினால் அதன் 48-ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட ஆசியத் தரைவழிப் போக்குவரத்துக் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம் (Asian Land Transport Infrastructure Development (ALTID) எனும் திட்டத்தின் கீழ், ஆசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தின் உறுப்பு நாடுகளுடன் இணைந்து படிப்படியாகச் சில திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.
பொது
[தொகு]அரசுகளுக்கிடையே இடம்பெற்ற கூட்டம் ஒன்றில், ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு தொடர்பான அரசுகளிடை ஒப்பந்தம் ஒன்று 2003-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் திகதி உருவாக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் வழி, ஆசிய நெடுஞ்சாலையின் புள்ளி விவரங்கள்/மேல் விவரங்கள்:
- ஏறத்தாழ 87,500 மைல்கள் (140,000 கிலோமீட்டர்) நீளம்;
- 32 உறுப்பு நாடுகளுக்கு ஊடாகச் செல்லும் சாலை;
- 55 ஆசிய நெடுஞ்சாலைகளைப் பட்டியலிடும் பின்னிணைப்பு 1;
- நெடுஞ்சாலைகளின் வகைப்பாடு, வடிவமைப்புத் தரம் என்பவற்றை விளக்கும் பின்னிணைப்பு 2;
2004-ஆம் ஆண்டு ஏப்ரலில், சீனாவின் சாங்காயில் நடைபெற்ற "எஸ்காப்" நிறுவனத்தின் 60-ஆவது அமர்வில், மேற்படி ஒப்பந்தத்தில் 23 நாடுகள் கையெழுத்திட்டன. பின்னர் கையெழுத்திட்ட நாடுகளையும் சேர்த்து 2007-ஆம் ஆண்டு நிலைவரப்படி இதுவரை 28 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன.
எண்ணிடலும் அடையாளப் பலகைகளும்
[தொகு]திட்ட ஆவணம், எல்லா நாடுகளிலும் பொதுவான அடையாளப் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும் என முன்மொழிந்துள்ளது. இதன்படி வழி இலக்கங்கள், ஆங்கிலத்தில் ஆசிய நெடுஞ்சாலை என்பதைக் குறிக்கும் "Asian Highway" என்பதன் முதல் எழுத்துக்களான "AH" என்பவற்றுடன் ஒன்று, இரண்டு அல்லது மூன்று இலக்கங்களைக் கொண்ட ஒரு எண்ணையும் சேர்ப்பதன் மூலம் குறிக்கப்படும்.
இது மேலை நாட்டு முறையைத் தழுவி ரோமன் எழுத்திலும், அராபிய எண்களிலும் எழுதப்படும். அனைத்துலக ஈ-சாலை வலையமைப்பைச் சேர்ந்த நெடுஞ்சாலைகளின் அடையாளப் பலகைகளிலேயே ஆசிய நெடுஞ்சாலை எண்ணையும் குறிக்கலாம்.
மூன்று இலக்கங்கள்
[தொகு]"AH" உடன் ஒரு இலக்க எண்ணுடன் அமையும் சாலை எண்கள் முழு ஆசியாக் கண்டத்தினூடும் செல்லும் சாலைகளைக் குறிக்கும், இரண்டு இக்கங்கள் கொண்ட எண்ணுடன் கூடியவை ஒரே நாடு அல்லது பல நாடுகளூடாகச் செல்லும் நீண்ட சாலைகளைக் குறிக்கும், மூன்று இலக்கங்கள் கொண்ட எண்களால் குறிக்கப்படும் சாலைகள் ஒரே நாட்டின் சிறிய பகுதிக்குள் அடங்கிய நீளம் குறைவான சாலைகளைக் குறிக்கும்.
அடையாளப் பலகைகளின் வடிவமைப்புக்கள் தரப்படுத்தப்படவில்லை. எழுத்துக்களும், இலக்கங்களும் மட்டுமே வெள்ளை அல்லது கறுப்பு நிறத்தில் இருக்க வேண்டும், பலகைகளின் நிறம் வடிவம், அளவு என்பவற்றை உசிதமான படி வடிவமைத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலான பலகைகள் நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்களால் ஆனவை. எனினும், பச்சை நிறப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்களுடன் கூடிய பலகைகளும், வெள்ளைப் பின்னணியில் கறுப்பு எழுத்துக்களுடன் கூடிய பலகைகளும் உள்ளன.
நெடுஞ்சாலைகள்
[தொகு]முழுக் கண்டத்துக்கு ஊடாகச் செல்லும் ஒற்றை இலக்கச் சாலைகள்:
- AH1, 12,848 மைல்கள் (20,557 கிமீ); சப்பானில் உள்ள டோக்கியோவில் இருந்து துருக்கிக்கும் பல்கேரியாவுக்கும் இடையிலான எல்லை வரை (AH5 உடன்)
- AH2, 8326 மைல்கள் (13,177 கிமீ); இந்தோனீசியாவின் டென்பாசரில் இருந்து ஈரானின் கோசுராவி வரை
- AH3, 4582 மைல்கள் (7,331 கிமீ); உலன்-உடே, ரசியா (AH6 இல்) - தாங்கு, சீனா; மற்றும் சங்காய், சீனா (AH5 இல்) - சியாங் ராய், தாய்லாந்து and Kyaing Tong, மியன்மார் (both on AH2)
- AH4, 3765 மைல்கள் (6,024 கிமீ); நொவோசிபர்சுக், ரசியா (on AH6) - யாரந்தாய், மங்கோலியா; மற்றும் உரும்கி, சீனா (AH5 இல்) - கராச்சி, பாகிஸ்தான் (AH7 இல்)
- AH5, 6488 மைல்கள் (10,380 கிமீ); சாங்காய், சீனா (AH3 இல்) - துருக்கிக்கும் பல்கேரியாவுக்கும் இடையிலான எல்லை (AH1 உடன்)
- AH6, 6547 மைல்கள் (10,475 கிமீ); புசான், தென் கொரியா (AH1 இல்) - ரசியாவுக்கும் பெலாரசுக்கும் இடையிலான எல்லைவரை
- AH7, 3667.5 மைல்கள் (5,868 கிமீ); யெக்காட்டெரின்பர்க், ரசியா - கராச்சி, பாகிஸ்தான் (AH4 இல்)
- AH8, 2949 மைல்கள் (4,718 கிமீ); ரசியாவுக்கும் பின்லாந்துக்கும் இடையிலான எல்லை - பந்தர் எமாம், ஈரான்
10-29 -- 100-299 - தென்கிழக்கு ஆசியாவுக்கு ஒதுக்கப்பட்ட எண்கள்
- AH11, 992.5 மைல்கள் (1,588 கிமீ); வியெண்டியான், லாவோஸ் (AH12 இல்) - சிகானூக்வில்லி, கம்போடியா வரை
- AH12, 747 மைல்கள் (1,195 கிமீ); Nateuy, லாவோஸ் (AH3 இல்) - இன் கொங், தாய்லாந்து (AH1 இல்)
- AH13, 456 மைல்கள் (730 கிமீ); ஓடோம்சாய், லாவோஸ் (AH12 இல்) - நாக்கோன் சுவான், தாய்லாந்து (AH1/AH2 இல்)
- AH14, 1298 மைல்கள் (2,077 கிமீ); ஆய் ஃபோங், வியட்நாம் - மண்டலே, மியன்மார் (AH1/AH2 இல்)
- AH15, 354 மைல்கள் (566 கிமீ); வின், வியட்நாம் (AH1 இல்) - உடோன் தானி, தாய்லாந்து (AH12 இல்)
- AH16, 645 மைல்கள் (1,032 கிமீ); டோங் ஹா, வியட்நாம் (AH1 இல்) - தாக், தாய்லாந்து (AH1/AH2 இல்)
- AH18, 651 மைல்கள் (1,042 கிமீ); ஹட் யாய், தாய்லாந்து (AH2 இல்) - சோகோர் பாஃரு கடற்சாலை, மலேசியா
- AH19, 287 மைல்கள் (459 கிமீ); நாக்கோன் ரட்சாசிமா, தாய்லாந்து (AH12 இல்) - பாங்காக், தாய்லாந்து (AH2 இல்)
- AH25, 1593 மைல்கள் (2,549 கிமீ); பண்டா Aceh, இந்தோனீசியா - மேரக், இந்தோனீசியா (AH2 இல்)
- AH26, 2198 மைல்கள் (3,517 கிமீ); லாவோக், பிலிப்பைன்ஸ் - சாம்போங்கா, பிலிப்பைன்ஸ்
30-39 -- 300-399 - கிழக்காசியாவுக்கும் வடகிழக்கு ஆசியாவுக்கும் ஒதுக்கப்பட்டவை:
- AH30, 1712 மைல்கள் (2,739 கிமீ); உசிரியிஸ்க், ரசியா (AH6 இல்) - சித்தா, ரசியா (AH6 இல்)
- AH31, 997 மைல்கள் (1,595 கிமீ); பெலோகோர்சுக், ரசியா (AH30 இல்) - டாலியான், சீனா
- AH32, 2342.5 மைல்கள் (3,748 கிமீ); சோன்போங், வட கொரியா (AH6 இல்) - கோவ்ட், மங்கோலியா (AH4 இல்)
- AH33, 359 மைல்கள் (575 கிமீ); அர்பின், சீனா (AH6/AH31 இல்) - தொங்சியாங், சீனா
- AH34, 646 மைல்கள் (1,033 கிமீ); லியான்யுங்காங், சீனா - சியான், சீனா (AH5 இல்)
40-59 -- 400-599 - தென்னாசியாவுக்கு ஒதுக்கப்பட்டவை:
- AH41, 592.5 மைல்கள் (948 கிமீ); மியன்மாருக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான எல்லை - மோங்லா, வங்காளதேசம்
- AH42, 2346 மைல்கள் (3,754 கிமீ); லான்சூ, சீனா (AH5 இல்) - பார்கி, இந்தியா (AH1 இல்)
- AH43, 1892 மைல்கள் (3,024 கிமீ); ஆக்ரா, இந்தியா (AH1 இல்) - மாத்தறை, இலங்கை
- AH44, 67 மைல்கள் (107 கிமீ); தம்புல்லை, இலங்கை (AH43 இல்) - திருகோணமலை, இலங்கை
- AH45, 1269 மைல்கள் (2,030 கிமீ); கொல்கத்தா, இந்தியா (AH1 இல்) - பெங்களூர், இந்தியா (on AH43/AH47)
- AH46, 946 மைல்கள் (1,513 கிமீ); காரக்பூர், இந்தியா (AH45 இல்) - டூலே, இந்தியா (on AH47)
- AH47, 1286 மைல்கள் (2,057 கிமீ); குவாலியர், இந்தியா (AH43 இல்) - பெங்களூர், இந்தியா (on AH43/AH45)
- AH48, .625 மைல்கள் (1 கிமீ); புவென்ட்சோலிங், பூட்டான் - பூட்டானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை.
- AH51, 539 மைல்கள் (862 கிமீ); பெசாவர், பாகிஸ்தான் (AH1 இல்) - குவேட்டா, பாகிஸ்தான் (AH2/AH7 இல்)
60-89 -- 600-899 - வட ஆசியா, நடு ஆசியா, தென் மேற்கு ஆசியா ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட எண்கள்:
- AH60, 1344 மைல்கள் (2,151 கிமீ); ஓம்ஸ்க், ரசியா (AH6 இல்) - புருபைட்டல், கசாக்ஸ்தான் (AH7 இல்)
- AH61, 2599 மைல்கள் (4,158 கிமீ); காசுகர், சீனா (AH4/AH65 இல்) - ரசியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான எல்லை.
- AH62, 1701 மைல்கள் (2,722 கிமீ); பெட்ரோபாவ்லோவ்சுக், கசாக்ஸ்தான் (AH6/AH64 இல்) - மசாரி சாரிஃப், ஆப்கானிசுத்தான் (AH76 இல்)
- AH63, 1521 மைல்கள் (2,434 கிமீ); சமாரா, ரசியா (AH6 இல்) - குசார், உசுபெக்கிசுத்தான் (AH62 இல்)
- AH64, 1041 மைல்கள் (1,666 கிமீ); பார்னோல், ரசியா (AH4 இல்) - பெட்ரோபாவ்லோவ்சுக், ரசியா (AH6/AH62 இல்)
- AH65, 781 மைல்கள் (1,250 கிமீ); காசுகர், சீனா (AH4/AH61 இல்) - தேர்மெசு, உசுபெக்கிசுத்தான் (AH62 இல்)
- AH66, 622 மைல்கள் (995 கிமீ); சீனாவுக்கும் தாசிக்கிசுத்தானுக்கும் இடையிலான எல்லை - Dushanbe, தாசிக்கிசுத்தான்
- AH67, 1430 மைல்கள் (2,288 கிமீ); குயிட்டுன், சீனா (AH5 இல்) - செசுக்காசுகன், கசாக்ஸ்தான் (AH62 இல்)
- AH68, 174 மைல்கள் (278 கிமீ); ஜிங்கே, சீனா (AH5 இல்) - உச்சாரல், கசாக்ஸ்தான் (AH60 இல்)
- AH70, 3020 மைல்கள் (4,832 கிமீ); உக்ரைன், ரசியா என்பவற்றுக்கு இடையிலான எல்லை - பந்தர் அப்பாசு, ஈரான்
- AH71, 266 மைல்கள் (426 கிமீ); டிலாரம், ஆப்கானிசுத்தான் (AH1 இல்) - டாசுத்தாக், ஈரான் (AH75 இல்)
- AH72, 717 மைல்கள் (1,147 கிமீ); தெகரான், ஈரான் (AH1/AH2/AH8 இல்) - புசேர், ஈரான்
- AH75, 1169 மைல்கள் (1,871 கிமீ); தெஜேன், துர்க்மெனிசுத்தான் (AH5 இல்) - சாபகர், ஈரான்
- AH76, 616 மைல்கள் (986 கிமீ); போலேகும்ரி, ஆப்கானிசுத்தான் (on AH7) - ஏரத், ஆப்கானிசுத்தான் (AH1/AH77 இல்)
- AH77, 811 மைல் (1,298 கிமீ); சுபுல்சார்க், ஆப்கானிசுத்தான் (AH7 இல்) - மேரி, துர்க்மெனிசுத்தான் (on AH5)
- AH78, 672.5 மைல்கள் (1,076 கிமீ); ஆசுகாபாத், துர்க்மெனிசுத்தான் (AH5 இல்) - கெர்மான், ஈரான் (AH2 இல்)
- AH81, 714 மைல்கள் (1,143 கிமீ); லார்சி, ஜார்ஜியா - அக்தோ, கசாக்ஸ்தான் (AH70 இல்)
- AH82, 788 மைல்கள் (1,261 கிமீ); ரசியா, ஜார்ஜியா ஆகியவற்றுக்கு இடையிலான எல்லை - ஈவியோக்லு, ஈரான் (AH1 இல்)
- AH83, 107.5 மைல்கள் (172 கிமீ); கசாக், அசர்பைசான் (AH5 இல்) - யெரெவான், ஆர்மேனியா (AH81/AH82 இல்)
- AH84, 742.5 மைல்கள் (1,188 கிமீ); டோகுபேயாசித், துருக்கி (AH1 இல்) - İçel, துருக்கி
- AH85, 211 மைல்கள் (338 கிமீ); ரெபாகியே, துருக்கி (AH1 இல்) - மேர்சிபோன், துருக்கி (AH5 இல்)
- AH86, 154 மைல்கள் (247 கிமீ); ஆசுக்காலே, துருக்கி (AH1 இல்) - டிராப்சன், துருக்கி (AH5 இல்)
- AH87, 378.75 மைல்கள் (606 கிமீ); அங்காரா, துருக்கி (AH1 இல்) - ஆசுமீர், துருக்கி
நாடுகள் அடிப்படையில் சாலைகளின் நீளம்
[தொகு]திட்டப்படி வலையமைப்பின் மொத்த நீளம் 87799 மைல் (140,479 கிமீ).
- ஆப்கானிசுத்தான், (4,247 கிமீ)
- ஆர்மேனியா, (958 கிமீ)
- அசர்பைசான், 901.25 மைல்கள் (1,442 கிமீ)
- வங்காளதேசம், 1127.5 மைல்கள் (1,804 கிமீ)
- பூட்டான் .625 மைல்கள் (1 கிமீ)
- கம்போடியா, 837 மைல்கள் (1,339 கிமீ)
- சீனா, 15,978 மைல்கள் (25,579 கிமீ)
- Democratic People's Republic of Korea (வட கொரியா), 825 மைல்கள் (1,320 கிமீ)
- ஜார்ஜியா, 721.25 மைல்கள் (1,154 கிமீ)
- இந்தியா, 7145 மைல்கள் (11,432 கிமீ)
- இந்தோனீசியா, 2493 மைல்கள் (3,989 கிமீ)
- ஈரான், 6970 மைல்கள் (11,152 கிமீ)
- சப்பான், 750 மைல்கள் (1,200 கிமீ)
- கசாக்ஸ்தான், (13,189 கிமீ)
- கிர்கிசுத்தான், 1059 மைல்கள் (1,695 கிமீ)
- லாவோசு, 1436 மைல்கள் (2,297 கிமீ)
- மலேசியா, 997 மைல்கள் (1,595 கிமீ)
- மங்கோலியா, 2678.75 மைல்கள் (4,286 கிமீ)
- மியன்மார், 1877 மைல்கள் (3,003 கிமீ)
- நேபாளம், 826.6 மைல்கள் (1,321 கிமீ)
- பாகிஸ்தான், 3360.6 மைல்கள் (5,377 கிமீ)
- பிலிப்பைன்ஸ், 2198.1 மைல்கள் (3,517 கிமீ)
- கொரியக் குடியரசு, 566.9 மைல்கள் (907 கிமீ)
- ரசியக் கூட்டமைப்பு, 10543.1 மைல்கள் (16,869 கிமீ)
- சிங்கப்பூர், 11.9 மைல்கள் (19 கிமீ)
- இலங்கை, 406.25 மைல்கள் (650 கிமீ)
- தாசிக்கிசுத்தான், 1203.1 மைல்கள் (1,925 கிமீ)
- தாய்லாந்து, 3195 மைல்கள் (5,112 கிமீ)
- துருக்கி, 3283.75 மைல்கள் (5,254 கிமீ)
- துர்க்மெனிசுத்தான், 1377.5 மைல்கள் (2,204 கிமீ)
- உசுபெக்கிசுத்தான், 1853.75 (2,966 கிமீ)
- வியட்நாம், 1673.75 மைல்கள் (2,678 கிமீ)