பலமனேர்
பலமனேர் (Palamaner) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள ஒரு நகரமாகும். இந்நகரத்தை பலமனேரு என்றும் அழைக்கிறார்கள். பலமனேர் மண்டலத்தின் மண்டல தலைநகரமாகவும் இந்நகரம் செயல்படுகிறது[1]. இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. ஆகும்[2].
கோயில்கள்[தொகு]
பகவான் விநாயகர் கோயில்" யெதுலசந்த வீதியில் அமைந்துள்ளது, சிறீ வெங்கடேசுவர சுவாமி, சிறீ கங்கம்மா தாலி மற்றும் சிவன் கோயில்கள் கங்கம்மா குடி தெருவில் அமைந்துள்ளன, சிறீ ஆஞ்சநேய சுவாமி கோயில் பொட்டி சிறீ ராமுலு பசார் தெருவில் இருக்கும் மல்லிகா புடவை கடைக்கு எதிரில் உள்ளது. இக்கோயில்கள் அனைத்தும் நியூபெட்டில் உள்ளன. மாரிம்மா குடி தெருவில் மாரீம்மா கோயிலும் சானி மகாத்மா கோயில் பலமனேருக்கு அருகிலுள்ள கண்டாவூர் கிராமத்திலும் அமைந்துள்ளன. பலமநேரில் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயங்கள் பல உள்ளன. மற்றும் பல தூதுக்குழு பள்ளிகளும் மைதானமும், அரசு பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கின்றன.
கல்வி[தொகு]
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பள்ளிக்கல்வி துறையின் கீழ் கல்விச் சேவையை அளிக்கின்றன[3][4]. ஆங்கிலம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகள் இங்குள்ள பள்ளிகளில் பயிற்று மொழியாக உள்ளன. அரசுப் பள்ளிகள்: பல்வேறு அங்கன்வாடி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் பலமனேர் நகரில் உள்ளன. அவை: 1) வடக்கு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி 2) தெற்கு பெண்கள் உயர்நிலைப் பள்ளி 3) அரசு இசட் பி உயர்நிலைப் பள்ளி 4) உருது உயர்நிலைப் பள்ளி. தனியார் பள்ளிகள் 1) யுனிவர்சல் பள்ளி 2) பிரம்மர்சி உயர்நிலைப்பள்ளி 3) சாரதா 4) எம்மாசு சுவிசு 5) கேசவ ரெட்டி 6) எலெனா பெட்டினி 7) லிட்டில் பிளவர் 8) ஆதர்சா 9) சைதன்யா 10) ரவீந்திர பாரதி 11) நாராயணா 12) லிட்டில் ஏஞ்சல்சு நிதி உதவி பள்ளிகள்: டயமண்ட் வேலி ஆங்கில வழிப்பள்ளி, சிறீசாய் மேதா இ.எம் பள்ளி ஓ.எல்.எல் மேல் தொடக்க நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி
பெயர்க்காரணம்[தொகு]
பலமனேர் என்ற பெயர் "பல்லவ எரு" என்பதிலிருந்து உருவானதாகும். அதாவது பல்லவர்கள் தோண்டிய ஏரி என்பது இதன் பொருள், தெலுங்கு மொழியில் எரு என்ற சொல்லுக்கு ஏரி என்று பொருளாகும்.
புவியியல்[தொகு]
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் 13°12′00″N 78°45′00″E / 13.2000°N 78.7500°E.[5] என்ற அடையாள ஆள்கூறுகளில் பலமனேர் அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநிலங்களின் எல்லைகளுக்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 683 மீட்டர்கள் உயரத்தில் பலமனேர் உள்ளது. இங்குள்ள மக்கள் மூன்று மாநிலங்களின் கலப்பு கலாச்சாரத்தில் வாழ்கின்றனர்.
ஆட்சி[தொகு]
இந்த மண்டலத்தின் எண் 58. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பலமனேர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[6]
தட்பவெப்பம்[தொகு]
ஆண்டு முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12 முதல் 28 பாகை செல்சியசு வெப்பநிலை வரை இருக்கும். இங்குள்ள காலநிலை பருவகாலத்திற்கு ஏற்றபடி மாறுபடும் ஆனாலும் மாறாத மித வெப்பம் இப்பகுதியில் குடியிருப்பாளர்களை பிரச்சினையற்றவர்களாக வாழச்செய்கிறது.
திரையரங்குகள்[தொகு]
தேசிய நெடுஞ்சாலை 4 இல் பத்மசிறீ, யாவிலி சாலையில் வி.வி. மகால், மஞ்சுநாதா, மதனப்பள்ளி சாலையில் ரங்காமகால் ஆகிய நான்கு திரையரங்குகள் பலமனேரில் இருக்கின்றன.
புகழ்[தொகு]
சிவக்கச்சுட்ட பானைகளுக்கு பலமனேர் புகழ் பெற்ற ஊராகும். பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலை, பெங்களூர் -விசயவாடா / திருப்பதி / விசாகப்பட்டிணம் நெடுஞ்சாலை, அனந்தபூர்-சென்னை நெடுஞ்சாலை மற்றும் கர்னூல் - குப்பம் நெடுஞ்சாலை ஆகிய முக்கியசாலைகள் செல்லும் வழியில் பலமனேர் உள்ளது. மேலும் இங்கு தக்காளி சந்தை மிகவும் பிரபலமாகும். பெங்களுரு நகரம் இங்கிருந்து 132 கிலோமீட்டர் தொலைவு மட்டுமேயாகும். பலமனேரிலிருந்து சென்னை 191 கிலோமீட்டர், திருப்பதி 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விருபாக்சபுரத்தில் பக்கவாத நோய்க்கு இயற்கை முறை சிகிச்சை அளிக்கப் படுகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குண்டலபள்ளி கிராமத்தில் பட்டுப்புழு வளர்ப்பு பிரசித்தம் ஆகும்.
ஊர்கள்[தொகு]
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[2]
- நாகமங்களம்
- ரங்கநாயனிபள்ளி
- பலமனேர்
- ஜகமர்லா
- பென்கரகுண்டா
- சமுத்திரபள்ளி
- குர்மோய்
- ஜல்லிபேட்டை
- மொரம்
- ஸ்ரீரங்கராஜபுரம்
- அய்யம்ரெட்டிபள்ளி
- அங்கம்வாரிபள்ளி
- குண்டலபள்ளி
- கொலமசானபள்ளி
- கரிடிமடுகு
- பைப்பகாரிபள்ளி
- செத்தபெண்டா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Chittoor District Mandals" (PDF). Census of India. pp. 498, 519. 19 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2014-12-14 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "School Education Department" (PDF). School Education Department, Government of Andhra Pradesh. 27 December 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 7 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Department of School Education - Official AP State Government Portal | AP State Portal". www.ap.gov.in. 7 November 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Maps, Weather, and Airports for Palmaner, India". fallingrain.com.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-15 அன்று பார்க்கப்பட்டது.