உள்ளடக்கத்துக்குச் செல்

தேவரியா

ஆள்கூறுகள்: 26°30′06″N 83°46′46″E / 26.50167°N 83.77936°E / 26.50167; 83.77936
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவரியா
நகரம்
சியாம் கோயில்
சியாம் கோயில்
தேவரியா is located in உத்தரப் பிரதேசம்
தேவரியா
தேவரியா
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேவரியா நகரத்தின் அமைவிடம்
தேவரியா is located in இந்தியா
தேவரியா
தேவரியா
தேவரியா (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°30′06″N 83°46′46″E / 26.50167°N 83.77936°E / 26.50167; 83.77936
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்தேவரியா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தேவரியா நகராட்சி
ஏற்றம்
68 m (223 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,29,479
மொழிகள்
 • அலுவலல் மொழிஇந்தி மொழி[1]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
 • வட்டார மொழிபோச்புரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
274001
தொலைபேசி குறியீடு எண்05568
வாகனப் பதிவுUP-52
இணையதளம்Official Website

தேவரியா (Deoria), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தின் கிழக்கில் அமைந்த தேவரியா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கோரக்பூர் நகரத்திற்கு கிழக்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான லக்னோவிலிருந்து 317 கிலோ மீட்டர் தொலைவிலும்; வாரணாசிக்கு வடக்கே 209 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது பிகார் மாநில எல்லையை ஒட்டியுள்ள நகரம் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகளும், 20076 வீடுகளும் கொண்ட தேவரியா நகரத்தின் மக்கள் தொகை 1,29,479 ஆகும். அதில் ஆண்கள் 67,462 மற்றும் பெண்கள் 62,017 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.80% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6.32% மற்றும் 1.72% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.77%, இசுலாமியர் 11.66%, பௌத்தர்கள் , சமணர்கள் , சீக்கியர்கள் 0.20%, கிறித்தவர்கள் 0.14 % மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.[2]

இரயில் நிலையம்

[தொகு]

தேவரியா இரயில் நிலையம்[3]கோரக்பூர்-மவூ-அலகாபாத் மற்றும் தில்லி-கான்பூர்-கோரக்பூர்-ஹாஜிப்பூர்-பரௌனி-கொல்கத்தா இருப்புப் பாதையிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 1 April 2019.
  2. Deoria City Population 2011
  3. Deoria Sadar railway station

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவரியா&oldid=3529096" இலிருந்து மீள்விக்கப்பட்டது