சிக்கோபாத்

ஆள்கூறுகள்: 27°06′N 78°36′E / 27.1°N 78.6°E / 27.1; 78.6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கோபாத்
நகரம்
சிக்கோகபாத் நகரம்
சிக்கோபாத் is located in உத்தரப் பிரதேசம்
சிக்கோபாத்
சிக்கோபாத்
இந்தியாவின் உத்தரப்ப் பிரதேச மாநிலத்தில் சிக்கோபாத் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°06′N 78°36′E / 27.1°N 78.6°E / 27.1; 78.6
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பிரோசாபாத்
தோற்றுவித்தவர்முகலாயப் பேரரசு
பெயர்ச்சூட்டுதாரா சிக்கோ
அரசு
 • வகைDemocratic
பரப்பளவு
 • மொத்தம்750.11 km2 (289.62 sq mi)
 • நீர்30 km2 (12 sq mi)
பரப்பளவு தரவரிசை4
ஏற்றம்163 m (535 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்107,404
 • தரவரிசை3
 • அடர்த்தி140/km2 (370/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்283135
தொலைபேசி குறியீடு எண்+91-5676
வாகனப் பதிவுUP-83

சிக்கோபாத் (Shikohabad), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த பிரோசாபாத் மாவட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும். இது யமுனை ஆற்றின் கரையில் உள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான பிரோசாபாத்திற்கு தென்மேற்கே 21.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான லக்னோவுக்கு கிழக்கே 273.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஆக்ராவிற்கு மேற்கே 68.9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

முகலாயப் பேரரசர் ஷாஜகான்-மும்தாஜ் மகால் தம்பதியரின் மூத்த மகன் தாரா சிக்கோ ஆவார். இவரை பதவி வெறி பிடித்த இவரது தம்பி அவுரங்கசீப், தன் அண்ணன் தாரா சிக்கோவை கொன்று விடுகிறார். அவரது நினைவாக அவுரங்கசீப் இந்நகரத்தை இந்நிறுவி, தாரா சிக்கோவின் பெயரிட்டார்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகளும், 18,622 வீடுகளும் கொண்ட சிக்கோபாத் நகரத்தின் மக்கள் தொகை 1,07,404 ஆகும். அதில் ஆண்கள் 56,794 மற்றும் பெண்கள் 50,610 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 891 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,798 மற்றும் 23 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 79.71%, இசுலாமியர் 18.38%, சமணர்கள் 1.19%, சீக்கியர்கள் 0.38%, கிறித்தவர்கள் 0.16% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[1]

இருப்புப் பாதை[தொகு]

சிக்கோபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்[2]தில்லி-ஹவுரா செல்லும் இருப்புப் பாதையில் உள்ளது.

=சாலைப் போக்குவரத்து[தொகு]

சிக்கோபாத் நகரம் வழியாக மாநில நெடுஞ்சாலை எண் 84 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 19 செல்கிறது. இது ஆக்ரா, மதுரா, பிரோசாபாத், நொய்டா, புது தில்லி, ஏட்டா, கான்பூர், அலகாபாத், வாரணாசி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கோபாத்&oldid=3528925" இலிருந்து மீள்விக்கப்பட்டது