பதேபூர், உத்தரப் பிரதேசம்
பதேபூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°56′N 80°48′E / 25.93°N 80.8°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பதேபூர் |
சட்டமன்றத் தொகுதி | பதேபூர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பதேப்பூர் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 57 km2 (22 sq mi) |
ஏற்றம் | 110 m (360 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,93,193 |
• அடர்த்தி | 3,400/km2 (8,800/sq mi) |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[2] |
• கூடுதல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 212601 |
வாகனப் பதிவு | UP-71 |
இணையதளம் | fatehpur |
பதேபூர் (Fatehpur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் தென்மத்தியப் பகுதியில் உள்ள பதேபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரத்தில் கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகள் பாய்கிற்து. ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய விடுதலைப் போரில் இராணி இலட்சுமிபாய்க்கு உதவிய படைத்தலைவர் பாபு பதே சந்திர என்பவர் பெயரால் இந்நகரம் அழைக்கப்படுகிறது.
புவியியல்
[தொகு]உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் மற்றும் கான்பூர் நகரங்களுக்கு இடையே தோவாப் பிரதேசத்தில் பதேபூர் மாவட்டம் அமைந்துள்ளது. பதேபூர் நகரம் கான்பூரிலிருந்து 76 கிலோ மீட்டரும்; அலகாபாத்திலிருந்து 117 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 19, பதேபூர் நகரத்தின் வழியாகச் செல்கிறது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பதேபூர் நகரத்தின் மக்கள் தொகை 1,93,193 ஆகும். அதில் ஆண்கள் 1,01,263 மற்றும் பெண்கள் 91,930 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23,233 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 76.48% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.74%, இசுலாமியர் 30.69%, கிறித்தவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்.[4] ==போக்குவரத்து
ஹவுரா-தில்லி செல்லும் இருப்புப் பாதையில் பதேபூர் இரயில் நிலையம் உள்ளது.[5][6]
சாலைகள்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை எண் 19 மற்றும் 232 பதேபூர் நகரத்தின் வழியாகச் செல்கிறது.[7]
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், பதேபூர், உத்தரப் பிரதேசம் (1981–2010, extremes 1932–2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32.2 (90) |
35.5 (95.9) |
41.7 (107.1) |
45.8 (114.4) |
47.2 (117) |
48.1 (118.6) |
44.0 (111.2) |
41.0 (105.8) |
40.0 (104) |
38.9 (102) |
36.4 (97.5) |
31.1 (88) |
48.1 (118.6) |
உயர் சராசரி °C (°F) | 22.0 (71.6) |
26.2 (79.2) |
32.3 (90.1) |
38.5 (101.3) |
40.7 (105.3) |
39.0 (102.2) |
34.2 (93.6) |
32.9 (91.2) |
32.9 (91.2) |
32.6 (90.7) |
28.8 (83.8) |
23.9 (75) |
32.0 (89.6) |
தாழ் சராசரி °C (°F) | 8.5 (47.3) |
11.4 (52.5) |
16.0 (60.8) |
20.9 (69.6) |
25.1 (77.2) |
26.1 (79) |
25.0 (77) |
24.6 (76.3) |
24.9 (76.8) |
19.9 (67.8) |
14.2 (57.6) |
9.6 (49.3) |
18.9 (66) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -1.7 (28.9) |
-1.6 (29.1) |
1.7 (35.1) |
7.4 (45.3) |
11.7 (53.1) |
15.4 (59.7) |
15.1 (59.2) |
14.6 (58.3) |
12.4 (54.3) |
10.5 (50.9) |
1.7 (35.1) |
-3.3 (26.1) |
−3.3 (26.1) |
மழைப்பொழிவுmm (inches) | 15.3 (0.602) |
13.3 (0.524) |
8.1 (0.319) |
6.1 (0.24) |
12.7 (0.5) |
84.2 (3.315) |
213.2 (8.394) |
233.8 (9.205) |
190.8 (7.512) |
33.2 (1.307) |
0.5 (0.02) |
7.6 (0.299) |
818.9 (32.24) |
% ஈரப்பதம் | 69 | 62 | 49 | 39 | 40 | 52 | 75 | 80 | 78 | 68 | 66 | 69 | 63 |
சராசரி மழை நாட்கள் | 1.4 | 1.2 | 0.7 | 0.6 | 1.3 | 3.9 | 11.1 | 10.5 | 8.2 | 1.5 | 0.2 | 0.7 | 41.4 |
ஆதாரம்: |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uttar Pradesh (India): State, Major Agglomerations & Cities – Population Statistics, Maps, Charts, Weather and Web Information". citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.
- ↑ "District Fatehpur, Government of Uttar Pradesh | The City of Doaba | India". FATEHPUR. பார்க்கப்பட்ட நாள் 23 September 2020.
- ↑ Fatehpur City Population 2011
- ↑ Fatehpur Railway Station – Time Table
- ↑ Fatehpur railway station
- ↑ "PM Modi to inaugurate Raebareli-Fatehpur-Banda section of NH-232" (in en). ANI News. 14 December 2018. https://www.aninews.in/news/national/general-news/pm-modi-to-inaugurate-raebareli-fatehpur-banda-section-of-nh-232201812142319440001/.
- ↑ "Station: Fatehpur Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 273–274. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M214. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.