ஜாலவுன் மாவட்டம்
Jump to navigation
Jump to search
ஜலாவுன் மாவட்டம் (Jalaun District இந்தி:जालौन) இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் ஜான்சி கோட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இம்மாவட்டத்தின் தலைநகரம் ஒராய் நகர் ஆகும். இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 4,565 கிமீ2 ஆகும். இந்திய விடுதலைக்கு முன்னர் இம்மாவட்டப் பகுதிகளை பாவனி சமஸ்தானம் ஆண்டது.
மக்கட்தொகை[தொகு]
2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி,
- மொத்த மக்கட்தொகை 16,70,718[1]
- மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 366 பேர்கள்[1]
- மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.87%[1]
- ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 865 பெண்கள்[1]
- கல்வியறிவு 75.16%[1]