மொராதாபாத்
மொராதாபாத் (மொரதாபாத்/முரதாபாத்) | |||||||
பித்தளை நகரம் | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம்: மொராதாபாத் (மொரதாபாத்/முரதாபாத்), உத்தரப் பிரதேசம் , இந்தியா
| |||||||
ஆள்கூறு | 28°50′N 78°47′E / 28.83°N 78.78°E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | உத்தரப் பிரதேசம் | ||||||
மாவட்டம் | மொராதாபாத் | ||||||
ஆளுநர் | இராம் நாயக், ஆனந்திபென் படேல் | ||||||
முதலமைச்சர் | யோகி அதித்யாநாத் | ||||||
நாடாளுமன்ற உறுப்பினர் | முகமது அசாருதீன் | ||||||
நகரத்தந்தை | எஸ்.டி. அசன் | ||||||
துணை மேயர் | சீருங்கல் அத்தேர் | ||||||
மக்களவைத் தொகுதி | மொராதாபாத் (மொரதாபாத்/முரதாபாத்) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
6,41,240 (2001[update]) • 281/km2 (728/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
2,285 சதுர கிலோமீட்டர்கள் (882 sq mi) • 286 மீட்டர்கள் (938 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.moradabad.nic.in |
மொரதாபாத் (Moradabad, Hindi: मुरादाबाद, Urdu: مراداباد) வட இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். 1600ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் ஷா ஜகானின் மகன் முரத் பக்ஷால் நிறுவப்பட்டதால் மொரதாபாத் எனப் பெயரிடப்பட்டது. இது மொரதாபாத் மாவட்டத்தின் தலைநகருமாகும்.
தேசியத் தலைநகர் புதுதில்லியிலிருந்து 167 கிமீ (104 மை) தொலைவில் ராம்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கிருந்து வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு பித்தளை கைவினைப்பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. இதனால் பித்தளை நகரம் (உள்ளூர் மொழியில் பீத்தள் நக்ரி) என்று அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு இனத்தையும் சமயத்தையும் சார்ந்த பத்து இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொரதாபாத் முசுலிம்கள் கூடுதலாக உள்ள பெரும்பான்மை மாவட்டங்களில் ஒன்றாக இந்திய அரசு அறிவித்துள்ளது.[1]