முகமது அசாருதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகமது அசாருதீன்
Mohammad Azharuddin Sangeeta Bijlani.jpg
தனது மனைவி சங்கீதா பிஜ்லானியுடன் அசாருதீன்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் முகமது அசாருதீன்
பட்டப்பெயர் அஜ்ஜு
அஸ்ஸு பாய்.[1]
பிறப்பு 8 பெப்ரவரி 1963 (1963-02-08) (அகவை 56)
ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 169) 30 திசம்பர், 1984: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு 2 மார்ச்சு, 2000: எ தென்னாபிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 51) 20 சனவரி, 1985: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி சூன் 3, 2000:  எ பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1981–2000 ஐதராபாத் துடுப்பாட்ட அணி
1983–2000 தென்மண்டல துடுப்பாட்ட அணி
1991–1994 டெர்பிசையர் கவுண்டி துடுப்பாட்டச் சங்கம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.ப.துமு.துப.அ
ஆட்டங்கள் 99 334 229 433
ஓட்டங்கள் 6,216 9,378 15,855 12,941
துடுப்பாட்ட சராசரி 45.03 36.92 51.98 39.33
100கள்/50கள் 22/21 7/58 54/74 11/85
அதிக ஓட்டங்கள் 199 153* 226 161*
பந்து வீச்சுகள் 13 552 1,432 827
இலக்குகள் 0 12 17 15
பந்துவீச்சு சராசரி 39.91 46.23 47.26
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/4 3/19 3/36 3/19
பிடிகள்/ஸ்டம்புகள் 105/– 156/– 220/– 200/–

13 பெப்ரவரி, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

முகமது அசாருதீன் (Mohammad Azharuddin, பிறப்பு பெப்ரவரி 8, 1963) இந்திய அணியின் முன்னாள் தலைவர், மட்டையாளர் மற்றும் அரசியல்வாதி. 1984 இல் தேர்வு போட்டிகளில் அறிமுகமாகிய அசாருதீன் தன் முதல் மூன்று தேர்வுப் போட்டிகளிலும் நூறு ஓட்டங்களைப் பெற்றார். இச்சாதனை இன்றுவரை வேறெவராலும் எட்டப்படவில்லை. வலது கைத் துடுப்பாளரான இவர் 99 தேர்வுப் போட்டிகளில் 22 சதங்கள் உட்பட 6215 ஓட்டங்களைப் (சராசரி 45.03) பெற்றுள்ளார். துடுப்பாட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இவருக்கு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை விதித்தமையால் நூறாவது தேர்வுப் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்தார்.[2] இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை, கல்வி[தொகு]

முகமது அசாருதீன் பெப்ரவரி 8, 1963 இல் ஐதராபாத்து இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை முகமது அசாருதீன் , தாய் யூசுஃப் சுல்தானா. இவர் ஐதராபாத்திலுள்ள ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பின் நிசாம் கல்லூரியில், உசுமானியா பல்கலைக்கழகம் வணிகப் பிரிவில் இலங்கலைப் பட்டம் படித்தார்.[4]

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

முகமது அசாருதீன் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக 1984 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகம் ஆனார். டிசம்பர் 31, 1984 இல் ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்தார்.[3] தேர்வுத் துடுப்பாட்டங்களில் மொத்தம் 22 நூறுகள் அடித்துள்ளார். இவரின் சராசரி 45 ஆகும். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 7 முறை நூறு ஓட்டங்களும் சராசரி 37 ஆகும். களத் தடுப்பாட்டக்காரராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 156 கேட்ச்சுகள் பிடித்துள்ளார். மொத்தம் 99 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 199 ஓட்டங்கள் எடுத்தார்.[5] இது தான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ஓட்டங்களாகும். 300 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடிய முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக நூறு ஓட்டங்கள் அடித்தவர் எனும் சாதனையைப் படைத்தவர் ஆவார்.[6]

அணித் தலைவர்[தொகு]

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இவரின் தலைமையில் இந்திய அணி மொத்தம் 47 தேர்வுத் துடுப்பாட்டங்களிலும், 174 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 90 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். செப்டம்பர் 2, 2014 இல் இந்தச் சாதனையினை மகேந்திரசிங் தோனி தகர்த்தார்.[7] 14 தேர்வுத் துடுபாட்டப் போட்டிகளில் இவரின் தலைமையில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. பின் 21 போட்டிகளி வெற்றி பெற்று சௌரவ் கங்குலி இநதச் சாதனையை தகர்த்தார்.[5]

துடுப்பாட்ட ஊழல்[தொகு]

2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டிகளில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டார்.[8] தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணித் தலைவர் ஹான்ஸி குரொன்யே அசாருதீன் தான் எனக்கு தரகரை அறிமுகம் செய்து வைத்தார் எனக் கூறினார்.[9] நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் அறிக்கையின் படி இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.[10] துடுப்பாட்டப் போட்டிகளில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முதல் வீரர் ஆனார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அசாருதீன்&oldid=2711354" இருந்து மீள்விக்கப்பட்டது