முகமது அசாருதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது அசாருதீன்
தனது மனைவி சங்கீதா பிஜ்லானியுடன் அசாருதீன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகமது அசாருதீன்
பட்டப்பெயர்அஜ்ஜு
அஸ்ஸு பாய்.[1]
மட்டையாட்ட நடைவலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 169)30 திசம்பர் 1984 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு2 மார்ச்சு 2000 எ. தென்னாபிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 51)20 சனவரி 1985 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசூன் 3 2000 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1981–2000ஐதராபாத் துடுப்பாட்ட அணி
1983–2000தென்மண்டல துடுப்பாட்ட அணி
1991–1994டெர்பிசையர் கவுண்டி துடுப்பாட்டச் சங்கம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.ப.து மு.து ப.அ
ஆட்டங்கள் 99 334 229 433
ஓட்டங்கள் 6,216 9,378 15,855 12,941
மட்டையாட்ட சராசரி 45.03 36.92 51.98 39.33
100கள்/50கள் 22/21 7/58 54/74 11/85
அதியுயர் ஓட்டம் 199 153* 226 161*
வீசிய பந்துகள் 13 552 1,432 827
வீழ்த்தல்கள் 0 12 17 15
பந்துவீச்சு சராசரி 39.91 46.23 47.26
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/4 3/19 3/36 3/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
105/– 156/– 220/– 200/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 13 பெப்ரவரி 2009

முகமது அசாருதீன் (Mohammad Azharuddin, பிறப்பு பெப்ரவரி 8, 1963) இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பேட்ஸ்மேன் மற்றும் அரசியல்வாதி. 1984 இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய அசாருதீன் தன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இந்தச் சாதனை இன்றுவரை வேறு எவராலும் எட்டப்படவில்லை. வலதுகை பேட்ஸ்மேனான இவர் 99 டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்கள் உட்பட 6215 ரன்களை (சராசரி 45.03) எடுத்துள்ளார்.

மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர், பின்னாளில் சூதாட்டத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனால், நூறாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்தார்.[2] இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை, கல்வி[தொகு]

முகமது அசாருதீன் பெப்ரவரி 8, 1963 இல் ஐதராபாத்து இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை முகமது அசாருதீன் , தாய் யூசுஃப் சுல்தானா. இவர் ஐதராபாத்திலுள்ள ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பின் நிசாம் கல்லூரியில், உசுமானியா பல்கலைக்கழகம் வணிகப் பிரிவில் இலங்கலைப் பட்டம் படித்தார்.[4]

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

முகமது அசாருதீன் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக 1985 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகம் ஆனார். டிசம்பர் 31, 1984 இல் ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்தார்.[3]

1985ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .மே 6 அராரேயில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 322 பந்துகளில் 110 ஓட்டங்களை எடுத்து கோவன்சு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் மட்டையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[5]

தேர்வுத் துடுப்பாட்டங்களில் மொத்தம் 22 நூறுகள் அடித்துள்ளார். இவரின் சராசரி 45 ஆகும். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 7 முறை நூறு ஓட்டங்களும் சராசரி 37 ஆகும். களத் தடுப்பாட்டக்காரராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 156 கேட்ச்சுகள் பிடித்துள்ளார். மொத்தம் 99 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 199 ஓட்டங்கள் எடுத்தார்.[6] இது தான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ஓட்டங்களாகும். 300 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடிய முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக நூறு ஓட்டங்கள் அடித்தவர் எனும் சாதனையைப் படைத்தவர் ஆவார்.[7]

2000 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .மார்ச் 2 இல் பெங்களூருவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 33 பந்துகளில் 9 ஓட்டங்களை எடுத்து டொனால்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 170 பந்துகளில் 102 ஓட்டங்கள் எடுத்து ஷான் பொல்லாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஓர் ஆட்டப் பகுதி மற்றும் 71 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[8]

எதிர் அணி ஓட்டங்கள் சராசரி நூறுகள்
 ஆத்திரேலியா 780 39.00 2
 இங்கிலாந்து 1978 58.09 6
நியூசிலாந்து 1152 61.23 2
பாக்கிஸ்தான் 1089 40.47 3
தென்னப்பிரிக்கா 915 41.00 4
இலங்கை 1215 55.23 5
மேற்கிந்தியத் தீவுகள் 539 28.37 0
 சிம்பாப்வே 59 14.75 0
மொத்தம் 6215 45.04 22

ஒருநாள் போட்டிகள்[தொகு]

முகமது அசாருதீனின் துடுப்பாட்ட வாழ்க்கையின் செயல்பாடு

1985 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. சனவரி 20 இல் பெங்களூருவில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியில் 37 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 3 இலக்குகளில் வெற்றி பெற்றது. [9]

2000 ஆம் ஆண்டில் ஆசியக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் சூன் 3 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 3 பந்துகளில் 1 ஓட்டங்களில் எடுத்து அப்துல் ரசாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 44 ஓட்டங்களில் பெற்றது. [10]

அணித் தலைவர்[தொகு]

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இவரின் தலைமையில் இந்திய அணி மொத்தம் 47 தேர்வுத் துடுப்பாட்டங்களிலும், 174 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 90 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். செப்டம்பர் 2, 2014 இல் இந்தச் சாதனையினை மகேந்திரசிங் தோனி தகர்த்தார்.[11] 14 தேர்வுத் துடுபாட்டப் போட்டிகளில் இவரின் தலைமையில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. பின் 21 போட்டிகளி வெற்றி பெற்று சௌரவ் கங்குலி இநதச் சாதனையை தகர்த்தார்.[6]

விளையாடும் முறை[தொகு]

லெக் சைடு ஃபிளிக் ஷாட் ஆடுவது அசாருதீனின் டிரேட்மார்க் ஷாட். பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றாலும் அதை லெக் சைட் ஃபிளிக் செய்யக்கூடியவர். டிரைவ் ஷாட்களும் சிறப்பாக ஆடுவார்.

விருதுகள்[தொகு]

1986-ம் ஆண்டு அசாருதீனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி 1988-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் நான்காவது உயரிய விருதான அர்ஜுனா விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1991-ல் விஸ்டன் வெளியிட்ட, 'ஆண்டின் 5 சிறந்த கிரிக்கெட் வீரர்கள்' பட்டியலில் இவரும் இடம் பிடித்தார்.

துடுப்பாட்ட ஊழல்[தொகு]

2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டிகளில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டார்.[12] தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணித் தலைவர் ஹான்ஸி குரொன்யே அசாருதீன் தான் எனக்கு தரகரை அறிமுகம் செய்து வைத்தார் எனக் கூறினார்.[13] நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் அறிக்கையின் படி இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.[14] துடுப்பாட்டப் போட்டிகளில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முதல் வீரர் ஆனார்.

அரசியல்[தொகு]

முகமது அசாருதீன் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில் பெப்ரவரி 19, 2009இல் சேர்ந்தார். 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப்பொதுத் தேர்தலில் உததரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத் தொகுதியில் நின்று வெற்றி பெற்று மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார்.[15][16] 2019 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட தனது விருப்பத்தினைத் தெரிவித்தார்.[17] தற்போது தெலங்கானா மாநிலக் குழுத் தலைவராக உள்ளார்.[18][19][20]

மேற்கோள்கள்[தொகு]

  1. .http://www.thehindu.com/sport/cricket/article1498691.ece
  2. "cricket channel - The CBI Report, in full". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2010-12-21.
  3. 3.0 3.1 Choudhury, Angikaar. "Mohammad Azharuddin: The rise and fall of the Nawab of Hyderabad". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 April 2016.
  4. "Biography of Azhar". azhar.co.in. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016..
  5. "முதல் தேர்வுத் துடுப்பாட்டப்போட்டி". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. 6.0 6.1 "Azhar: Here’s all the real life drama from Mohammad Azharuddin’s life". இந்தியன் எக்சுபிரசு. 13 May 2016. http://indianexpress.com/article/sports/cricket/azhar-movie-trailer-mohammad-azharuddin-emraan-hashmi-2797198/. 
  7. "Records | Test matches | Batting records | Hundreds in consecutive matches from debut | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/282979.html. 
  8. "இறுதி ஒருநாள் போட்டி". ஈ எஸ் பி என் கிரிகின்ஃபோ. அக்டோபர் 13. {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  9. "முதல் ஒருநாள் போட்டி". ஈ எஸ் பி என் கிரிகின்ஃபோ. அக்டோபர் 13. {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  10. "இறுதி ஒருநாள் போட்டி". ஈ எஸ் பி என் கிரிகின்ஃபோ. அக்டோபர் 13. {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  11. "Virat Kohli has to behave like a captain, says Mohammad Azharuddin". இந்தியன் எக்சுபிரசு. 30 July 2013. http://www.indianexpress.com/news/virat-kohli-has-to-behave-like-a-captain-says-mohammad-azharuddin/1148650/. பார்த்த நாள்: 6 January 2014. 
  12. "The CBI Report in Full -- Part 26". Rediff.com. 1 November 2000. http://www.rediff.com/cricket/2000/nov/01full26.htm. 
  13. "The CBI Report, in full". Rediff. 1 November 2000. http://www.rediff.com/cricket/2000/nov/01full25.htm#azza1. 
  14. Full text of the CBI report on cricket match-fixing and related malpractises, October 2000. Central Bureau of Investigation, New Delhi (Report). Rediff. பார்க்கப்பட்ட நாள் 21 December 2010.
  15. "Azhar starts new innings". IBN Live இம் மூலத்தில் இருந்து 21 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090221062717/http://ibnlive.in.com/news/azharuddin-starts-new-innings-joins-congress/85805-37.html. 
  16. "Detailed Profile: Shri Mohammed Azharuddin" இம் மூலத்தில் இருந்து 24 மே 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180524151835/https://archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4265. 
  17. Azaharuddin keen on contesting from Secunderabad LS seat
  18. "President of Pradesh Congress Committee". Indian National Congress. Archived from the original on 2019-02-14. பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.வார்ப்புரு:Vn
  19. "Mohammad Azharuddin appointed working president of Telangana Congress". Hindustan Times. Nov 30, 2018.
  20. Supriya Bhardwaj (Nov 30, 2018). "New innings: Mohammad Azharuddin is Congress's working president in Telangana". India Today.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அசாருதீன்&oldid=3766508" இலிருந்து மீள்விக்கப்பட்டது