ஈடன் கார்டன்ஸ்
![]() ஈடன் கார்டன்ஸ் | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | கொல்கத்தா |
உருவாக்கம் | 1865 |
இருக்கைகள் | 82,000 |
முடிவுகளின் பெயர்கள் | |
உயர் நீதிமன்ற முனை ![]() பவிலியன் முனை | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 5 - 8 ஜனவரி 1934:![]() ![]() |
கடைசித் தேர்வு | 14 - 18 பெப்ரவரி 2010:![]() ![]() |
முதல் ஒநாப | 18 பெப்ரவரி 1987:![]() ![]() |
கடைசி ஒநாப | 24 டிசம்பர் 2009:![]() ![]() |
As of 23 டிசம்பர் 2010 Source: கிக்கின்போ |
ஈடன் கார்டன்ஸ் (Eden Gardens) என்பது இந்தியாவின் கொல்கத்தா நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இந்தியாவிலேயே பழமையான துடுப்பாட்ட அரங்கமான இது 1864ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வங்காள துடுப்பாட்ட அணி மற்றும் ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் உள்ளகத் துடுப்பாட்டக் களமாக விளங்குகிறது. அத்துடன் இந்தியத் துடுப்பாட்ட அணி பங்கேற்கும் பன்னாட்டுத் தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் நிகழ்விடமாக விளங்குகிறது. இவ்வரங்கில் மொத்தம் 68,000 இருக்கைகள் அமைந்துள்ளன.
துடுப்பாட்டத்தின் கொலோசியம் என்று குறிப்பிடப்படும் ஈடன் கார்டன்ஸ் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட அரங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு உலகக் கோப்பை, உலக இருபது20 மற்றும் ஆசியக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய பன்னாட்டுத் தொடர்களின் போட்டிகளும் நடந்துள்ளன. இங்கு நடைபெற்ற 2016 ஐசிசி உலக இருபது20 இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
சாதனைகள்[தொகு]
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் வீவீஎஸ் லட்சுமண் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற 281 ஆகும்.
- இம்மைதானத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் கவுதம் கம்பீர் இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் பெற்ற 150 ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற 657/7d ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட ஆகக்குறைந்த ஓட்டங்கள் இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராகப் பெற்ற 90 ஓட்ட்ங்கள் ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதி ஜவகல் ஸ்ரீநாத் பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற 13/132 ஆகும்.
போட்டிகள்[தொகு]
1996 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்[தொகு]
13 மார்ச் 1996
ஆட்ட விவரம் |
எ
|
||
- ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இலங்கை அணி வெற்றி பெற்றதாக போட்டி கண்காணிப்பாளர் அறிவித்தார்
2011 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்[தொகு]
2016 ஐசிசி உலக இருபது20[தொகு]
எ
|
||
எ
|
||
எ
|
||