ஹான்ஸி குரொன்யே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹான்ஸி குரொன்யே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹான்ஸி குரொன்யே
பட்டப்பெயர்ஹன்ஸி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 237)ஏப்ரல் 18 1992 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுமார்ச்சு 2 2000 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 15)பிப்ரவரி 26 1992 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபமார்ச்சு 31 2000 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்5
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 68 188 184 304
ஓட்டங்கள் 3714 5565 12103 9862
மட்டையாட்ட சராசரி 36.41 38.64 43.69 42.32
100கள்/50கள் 6/23 2/39 32/57 5/32
அதியுயர் ஓட்டம் 135 112 251 158
வீசிய பந்துகள் 3800 5354 9897 7651
வீழ்த்தல்கள் 43 114 116 170
பந்துவீச்சு சராசரி 29.95 34.78 34.43 33.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/14 5/32 4/47 5/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
33/– 73/– 121/1 105/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com, ஆகத்து 22 2007

ஹான்ஸி குரொன்யே (Hansie Cronje, பிறப்பு: செப்டம்பர் 25 1969, இறப்பு: சூன் 1 2002) முன்னாள் , தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 68 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 188 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 184 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 304 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 - 2000 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்,1992 - 2000 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

1991 ஆம் அன்டுகளில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சிறப்பானபங்களிப்பை அளித்ததன் மூலம் இவர் 1992 ஆம் ஆண்டிற்கான உலகக் கோபைத் தொடரில் தேர்வானார். சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அனிக்கு எதிரான ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். எட்டு போட்டிகளில் விளையாடிய இவர் மட்டையாட்டத்தில் 34. 00 எனும் சராசரியினையும் எடுத்தார். மேலும் பந்துவீச்சில் 20 ஓவர்களை வீசினார்.

அதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் தேர்வானார். இதில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். அந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.

1992-93 ஆம் ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரின் ஒரு ஒருநாள் போட்டியில் நான்கு பந்துகளில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற ஆறு ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது இவர் சிக்ஸ் அடித்து அணியினை வெற்றி பெறச் செய்தார். அதில் 32 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.மேலும் அந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.இதன் மூலம் ஒருநாள் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றிய இரண்டாவது தென்னப்பிரிக்க வீரர் எனும் சாதனை படைத்தார்.

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 411 பந்துகளில் 135 ஓட்டங்களை எடுத்தார். மேலும் மொத்தமாக 275 நிமிடங்கள் மைதானத்தில் இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதன் பின் பாக்கித்தான், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் கலந்து கொண்ட முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அனிக்கு 70 பந்துகளில் 81 ஓட்டங்களை எடுத்தார்.

தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதன் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 122 ஓட்டங்களை எடுத்தார். இதுவே இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள் ஆகும். அந்தத் தொடரில் 237 ஓட்டங்களை 59.25 எனும் சராசரியோடு எடுத்தார்.

தலைவராக[தொகு]

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் உதவித் தலைவராகத் தேர்வானார். அதன் பின் நியூசிலாந்து, ஆத்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் கலந்து கொண்ட முத்தரப்பு ஒருநாள் தொடரில் மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு முதல் ஒருநாள் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 91* ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் இவர் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். பின் அதே துடுப்பாட்ட மைதனத்தில் 71 ஓட்டங்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி 5 இலக்குகளில் வெற்றி பெற உதவினார். 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் பாக்கித்தான் அணி தோற்றது.[1]

இறப்பு[தொகு]

இவர் தனது 32வது வயதில் ஒரு விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார்

சான்றுகள்[தொகு]

  1. "Batting and Fielding for South Africa, Wills Triangular Series 1994/95". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 21 October 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்ஸி_குரொன்யே&oldid=3604229" இலிருந்து மீள்விக்கப்பட்டது