ஏட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏட்டா (Etah) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஏட்டா மாவட்டத்தின் தலைமையகமாகும். புது தில்லியில் இருந்து இந்த நகரிற்கான ஓட்டுநர் தூரம் 210 கி.மீ ஆகும். மேலும் பொது போக்குவரத்து மூலம் அங்கு செல்ல சுமார் 6 மணி நேரம் ஆகும்.[1] ஆக்ராவில் இருந்து 82 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. ஆக்ராவில் இருந்து சாலை வழியாக இரண்டு மணி நேரத்தில் பயணிக்கலாம்.[2] ஏட்டா மாவட்டம் அலிகார் பிரிவின் ஒரு பகுதியாகும்.

புவியியல்[தொகு]

ஏட்டா 27.63 ° N 78.67 ° E என்ற புவியியல் அமைவிடத்தில் சராசரியாக 170 மீட்டர் (557 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[3] காஜிப்பூர் பஹோர் கிராமத்தின் பின்னால் ஈசன் நதி பாய்கிறது. இந்த நதி இப்போது மிகவும் மாசுபட்டு கிட்டத்தட்ட வறண்டு காணப்படுகின்றது.

விவசாயம்[தொகு]

ஏட்டா மாவட்டத்து சார்ந்த மக்களின் முதன்மை தொழில் விவசாயம். இந்த பகுதி கங்கை மற்றும் யமுனா ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. இந்தப் பகுதி வளமான வண்டல் மண்ணைக் கொண்டுள்ளது. விவசாயிகள் ஒரு வருடத்தில் மூன்று பயிர்களை அறுவடை செய்கிறார்கள். நீர்ப்பாசனத்திற்கான நீர் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. அரிசி, கோதுமை, பார்லி, சோளம், கம்பு , மக்காச்சோளம் என்பன முக்கிய விவசாயப் பொருட்களாகும். இப்பகுதி மண் புகையிலை சாகுபடிக்கு ஏற்றது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட் தொகை கணக்கெடுப்பின் தற்காலிக தரவுகளின்படி ஏட்டா நகர்ப்புற ஒருங்கிணைப்பு 131,023 மக்கட் தொகையை கொண்டிருந்தது. அவர்களில் ஆண்கள் 69,446 ஆகவும், பெண்கள் 61,577 ஆகவும் உள்ளனர். மக்களின் எழுத்திறிவு விகிதம் 85.62% வீதமாக இருந்தது.[4]

2001 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி ஏட்டா நகரின் மக்கட் தொகை 107,098 ஆகும்.[5] ஆண்கள் 53% ஆகவும் மற்றும் பெண்கள் 47% ஆகவும் இருந்தனர். மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 68% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 73% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 63% வீதமாகவும் இருந்தது. மேலும் ஏட்டாவின் சனத்தொகையில் 14% வீதம் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.

முன்னேற்றங்கள்[தொகு]

முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தொடருந்து பாதையை திறந்தார். இங்கே ஈ.டி.ஏ.எச் முதல் டண்ட்லா வரை ஒரே ஒரு சிறிய தொடருந்து பாதை மட்டுமே உள்ளது.

புது தில்லி, ஆக்ரா மற்றும் அலிகார் ஆகிய நாடுகளுக்கு நேரடி தொடருந்துகளுக்காக ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

1320 மெகாவாட் வெப்ப மின் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. ஏட்டாவில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த திட்டத்தை அனுமதித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டன. அதன் கட்டுமானம் 2015 இல் தொடங்க இருந்தது.[சான்று தேவை] தற்போது ஏட்டா வளர்ந்து வரும் நகரமாகும். பல அரசுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

உணவுகள்[தொகு]

ஏட்டா நகரின் உணவு முறைகள் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்படும் உணவுகளை கொண்டுள்ளது. ஆக்ராவின் முகலாய உணவு முறைகளையும் உள்ளடக்கியுள்ளது.மேலும் சைவ மற்றும் அசைவ உணவுகளை உள்ளடக்கியது.[சான்று தேவை] தம் பிரியாணி, கபாப் மற்றும் கோர்மாக்கள் இந்த பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் உணவுகளில் சிலவாகும்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏட்டா&oldid=3586395" இருந்து மீள்விக்கப்பட்டது