ஆசம்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசம்கர்
நகரம்
Azamgarh Railway Station
Azamgarh Railway Station
ஆசம்கர் is located in உத்தரப் பிரதேசம்
ஆசம்கர்
ஆசம்கர்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசம்கர் நகரத்தின் அமைவிடம்
ஆசம்கர் is located in இந்தியா
ஆசம்கர்
ஆசம்கர்
ஆசம்கர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°04′05″N 83°11′02″E / 26.068°N 83.184°E / 26.068; 83.184ஆள்கூறுகள்: 26°04′05″N 83°11′02″E / 26.068°N 83.184°E / 26.068; 83.184
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஆசம்கர்
ஏற்றம்64 m (210 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,10,983
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • கூடுதல் மொழிஉருது
 • வட்டார மொழிபோச்புரி[2]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
அஞ்சல் சுட்டு எண்276001]
தொலைபேசி குறியீடு05462
வாகனப் பதிவுUP-50
வானூர்தி நிலையம்ஆசம்கர் வானூர்தி நிலையம்
இணையதளம்azamgarh.nic.in

ஆசம்கர் (Azamgarh), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த ஆசம்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். தமசா ஆற்றின் கரையில் அமைந்த ஆசம்கர் நகரம், மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு கிழக்கே 268 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ஆசம்கர் நகரத்தின் மக்கள் தொகை 1,10,983 ஆகும். அதில் ஆண்கள் 57,878 மற்றும் பெண்கள் 53,105 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13,352 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.23% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 70.22%, இசுலாமியர் 29.06%, கிறித்தவர்கள் 0.34% மற்றும் பிறர் 0.38% ஆகவுள்ளனர்.[3]

போக்குவரத்து[தொகு]

ஆசம்கர்-மும்பை வாரந்திர விரைவு வண்டி, ஆசம்கர் இரயில் நிலையம்

ஆசம்கர் ரயில் நிலையம்[4]வாரணாசி,லக்னோ, புது தில்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களுடன் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.

வானூர்தி நிலையம்[தொகு]

ஆசம்கர் நகரத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் மந்தூரி வானூர்தி நிலையம் உள்ளது.

கல்வி[தொகு]

  • ஆசம்கர் பல்கலைக்கழகம், நிறுவப்பட்ட ஆண்டு 2019
  • அசம்கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை
  • இராஜ்கிய பொறியியல் கல்லூரி, ஆசம்கர்
  • சில்பி தேசியக் கல்லூரி, ஆசம்கர்.[5]
  • டி. ஏ. வி. பட்டமேற்படிப்பு கல்லூரி, ஆசம்கர் [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. 25 May 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 23 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "LINGUISTIC SURVEY OF INDIA PART 2". new.dli.ernet.in. Rashtrapati Bhavan. 31 July 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 September 2018 அன்று பார்க்கப்பட்டது."Cultural regionalism and Hindi Nationalism: an analysis of identity-formation among Bhojpuri speech community" (PDF). shodhganga.inflibnet.ac.in. Shodhganga. 10 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Azamgarh City Population 2011
  4. {https://en.wikipedia.org/wiki/Azamgarh_railway_station Azamgarh railway station]
  5. "Shibli National College, Azamgarh". shiblicollege.ac.in. 12 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
  6. "D.A.V. Post Graduate College, Azamgarh". davpgcollegeazm.in. 26 May 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெள் இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசம்கர்&oldid=3527983" இருந்து மீள்விக்கப்பட்டது