சித்திரக்கூட மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°12′49″N 80°54′55″E / 25.21361°N 80.91528°E / 25.21361; 80.91528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திரக்கூடம் மாவட்டம் மாவட்டம்
चित्रकूट
India Uttar Pradesh districts 2012 Chitrakoot.svg
சித்திரக்கூடம் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சித்திரக்கூடம்
தலைமையகம்சித்திரக்கூடம் (கார்வி)
பரப்பு345,291 km2 (133,318 sq mi)
மக்கட்தொகை990,626 (2011)
மக்கள்தொகை அடர்த்தி315/km2 (820/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை96,352
படிப்பறிவு66.52
பாலின விகிதம்879
வட்டங்கள்4 [கார்வி, மௌ, மாணிக்பூர் & ராஜாபூர் (5 திசம்பர் 2013)
மக்களவைத்தொகுதிகள்பந்தா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைசித்திரகூட், மௌ & மாணிக்பூர்
முதன்மை நெடுஞ்சாலைகள்NH 76
சராசரி ஆண்டு மழைபொழிவுமிதமானது mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சித்திரக்கூட மாவட்டம் (அ) சித்திரகூட் மாவட்டம் (இந்தி: चित्रकूट जिला)இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 72 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் சித்திரக்கூட நகரம் ஆகும். இமமாவட்டம் சித்திரக்கூடப் பிரிவின் கீழ் உள்ளது. இது 3,45,291 சதுர கி.மீட்டர் பரப்பளவை உடையது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உத்தரப்பிரதேசத்தின் 72 மாவட்டங்களில் இரண்டாவது மிகவும் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாவட்டம் மகோபா மாவட்டத்திற்கு பிறகு சித்திரக்கூட மாவட்டம் ஆகும்.[1]. இங்கு 990,626 மக்கள் வசிக்கின்றனர்[2].

இம்மாவட்டம் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

6 மே 1997 அன்று பந்தா மாவட்டத்திலிருந்து கார்வி மாற்று மவூ வட்டங்களை உள்ளடக்கிய இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் முதலில் சத்திரபதி சிவாஜி நகர் மாவட்டம் என பெயரிடப்பட்டது. பின்னர் 4 செப்டம்பர் 1998 அற்று சித்திரக்கூட மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பொருளாதாரம்[தொகு]

2006 இல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சித்திரக்கூட மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[3] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்[3].

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சித்திரக்கூட மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 990,626[4]. இது தோராயமாக பிஜி நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[5]. இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 448வது இடத்தில் உள்ளது.[4] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 315 inhabitants per square kilometre (820/sq mi).[4] மேலும் சித்திரக்கூட மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 29.29%.[4]சித்திரக்கூட மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் உள்ளனர்.[4] மேலும் சித்திரக்கூட மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 66.52%.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.census2011.co.in/district.php
  2. http://www.census2011.co.in/census/district/542-chitrakoot.html
  3. 3.0 3.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. ஏப்ரல் 5, 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  5. US Directorate of Intelligence. "Country Comparison:Population". 2011-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-01 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]