பதாவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பதாவுன் என்பது இந்திய நகரங்களில் ஒன்று. இது உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் உள்ளது. இங்கு இசுலாமிய மக்களும், இந்துக்களும் வாழ்கின்றனர். சாலைப் போக்குவரத்திற்கு மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இங்கு ரயில் நிலையமும் உள்ளது, இங்கு அதிகளவிலான மசூதிகள் உள்ளன. உழவுத் தொழில் முதன்மைத் தொழிலாக உள்ளது. இதற்கும் அருகில் உள்ளது பரேய்லி நகரம். இது கங்கை ஆறுக்கு அருகில் உள்ளது. உள்ளூர் அளவில் சிறு தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. இது பரேய்லி கோட்டத்திற்கு உட்பட்டது. இல்துமிஷ் கட்டிய பழைய மசூதி இங்குள்ளது குறிப்பிடத்தக்கது. இசுலாமிய அரசர்கள் கட்டிய கோட்டைகளும் இங்குள்ளன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதாவுன்&oldid=1607107" இருந்து மீள்விக்கப்பட்டது