மகாமாத்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோகரால் உருவாக்கப்பட்ட "தர்மத்தின் ஆய்வாளர்கள்", தர்மமகாமாத்திரா என்ற பதவியைக் குறிப்பிடும் கல்லவெழுத்து. தில்லி-டோப்ரா தூணில் 7வது அசோகரின் பெரிய தூண் கல்வெட்டு ஆணை பிராமி எழுத்து.
மகாமாத்திரா என்று குறிப்பிடப்பட்டுள்ள அசோகர் கல்வெட்டுக்கள்.

மகாமாத்திரா (Mahamatra, "உயர் பதவியில் உள்ள அதிகாரி" என்று பொருள்படும்) [1] என்பது பேரரசர் அசோகரால் (கி. மு. 269-233 ஆட்சியில்) உருவாக்கப்பட்ட ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஒரு அரசு பதவி ஆகும். இவரின் முழுப் பெயர் தர்மமகாமத்திரா "தர்மத்தின் ஆய்வாளர்" என்பதாகும். [2] இவர்கள் வெளிப்படையாக நிர்வாகம் மற்றும் நீதியின் பல்வேறு அம்சங்களைப் பொறுப்பேற்ற மூத்த அதிகாரிகள் பிரிவினராக இருந்தனர். [3]

பாறைகளிலும், தூண்களிலும் பொறிக்கப்பட்ட அசோகரின் பல ஆணைகளில் மகாமாத்திராக்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் அசோகரின் அரசாங்கத்தின் முக்கிய அங்கமாக இருந்ததாகத் தெரிகிறது.[3]

சிலர் "தர்ம-மகாமாத்திராக்கள்" ("நல்லொழுக்கத்தின் மகாமாத்திராக்கள்") என்று அழைக்கப்பட்டனர். இப்பதவியானது அசோகர் ஆட்சியின் 14 வது ஆண்டில் (கி. மு. 256) உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. [3] வெளிநாட்டவர்களுக்குப் பொறுப்பான அம்தா-மகாமாத்திரர்களும், பெண்களுக்குப் பொறுப்பான ஸ்திரீ-அதிக்ஷா-மகாமாத்திரர்களும் இருந்தனர். [3][4] மகாமாத்திராக்களின் வேலை தர்மத்தைப் பிரசாரம் செய்வதும் காப்பாற்றுவதும் மக்களுக்கு உபகாரம் செய்வதும் தான தர்மங்களை நடத்தி வைப்பதுமே. இவ்வதிகாரிகளுக்குத் தனிப் பிரதேசம் கொடுக்கப்படவில்லையென்று தோன்றுகிறது. எப்போதும் பிரயாணஞ் செய்து, ஸர்வ வியாபகமாயிருந்து, எல்லோருக்கும் நன்மைகளைச் செய்து, அனாதைகளுக்கு அன்னவஸ்திரங்கள் அளித்துக் காப்பாற்றி காட்டுஜாதியாருக்கும் குறவரைப் போல அலைந்து திரிந்து வாழ்கின்ற ஜனங்களுக்கும் தர்மத்தைப் போதித்து வர வேண்டுவதே தர்மமகாமாத்திரரின் அலுவல் என்று கூறப்படுகிறது.[5]

குறிப்புகள்[தொகு]

  1. (in en) Early history of Jammu region. 2010. https://books.google.com/books?id=pSKNeJsH7QgC&pg=PA374. 
  2. (in en) A Social History of India. 2000. https://books.google.com/books?id=Be3PCvzf-BYC&pg=PA81. 
  3. 3.0 3.1 3.2 3.3 Sen, Sailendra Nath (1999) (in en). Ancient Indian History and Civilization. New Age International. பக். 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788122411980. https://books.google.com/books?id=Wk4_ICH_g1EC&pg=PA146. 
  4. (in en) Indian History. Allied Publishers. பக். 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184245684. https://books.google.com/books?id=MazdaWXQFuQC&pg=SL1-PA253. 
  5. ஆர். ராமய்யர் (1925). "அசோகனுடைய சாஸனங்கள்". நூல். ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ். p. 53. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாமாத்திரா&oldid=3318643" இலிருந்து மீள்விக்கப்பட்டது