சமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சமணர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியாவில் தோன்றிய பழைய இறைமறுப்புக் கொள்கைகளை சமணம் என்ற பொதுப்பெயரில் அடையாளப்படுத்துவர். அகிம்சை சமண சமயத்தின் தலைமைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயங்களை ஏறத்தாழ 1 கோடி மக்களுக்கு மேல் பின்பற்றுகின்றார்கள். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலக்குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே ஜைனத்தை மட்டும் குறிக்க பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர்.

சமணம் என்ற சொல்லின் பொருள்[தொகு]

திவாகர முனிவரால் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.

   சாவகர் அருகர் சமணர் ஆகும்;
   ஆசீ வகரும் அத்தவத் தோரே
              - திவாகர நிகண்டு

அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.

   சாவகர் அருகர் சமணர் அமணர்
   ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே
              - ஐயர் வகை, பிங்கல நிகண்டு

சிரமணம் என்ற வடமொழிச் சொல்லின் பாகத வடிவமே சமணம் எனும் தமிழ்ச்சொல்[சான்று தேவை]. கடிய நோன்புகளாலும், தவத்தாலும் தங்களைக் கடுமையாக வருத்திக் கொள்பவர் - சிரமப்படுத்திக்கொள்பவர் என்பது சமணர் என்ற சொல்லின் மற்றொரு பொருளாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பார்க்கும் அருள் உள்ளம் உடையவர் என்றும் இச்சொல்லிற்குச் சிறப்பு விளக்கம் செய்வர்.

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமணம்&oldid=2014056" இருந்து மீள்விக்கப்பட்டது