பார்த்தியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இந்தக் கட்டுரையில் உசாத்துணைகள் இல்லை. |
Parthian Empire at its greatest extent, c. 60 BCE. |
|
| மொழி | பார்த்தியன் மொழி |
|---|---|
| மதம் | பார்சி |
| தலைநகரம் | Ctesiphon, Hecatompylus |
| பரப்பு | மத்திய கிழக்கு |
| Existed | 238 BCE–228 CE |
பார்த்தியா (Parthia) என்பது பண்டைய ஆசியாவில் இருந்த ஒரு நாடு ஆகும். இது தற்போதைய ஈரானையும் அர்மேனியா, ஈராக், ஜியார்ஜியா, கிழக்கு துருக்கி, கிழக்கு சிரியா, அசர்பெய்ஜான், துர்க்மெனிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், குவைத், பெர்சிய வளைகுடா, சவுதி அரேபியக் கடற்கரை, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அமீரகம் ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.
பார்த்தியன்கள் சிறந்த வில்லாளிகளாயும் குதிரை வீரர்களாகவும் விளங்கினர். போரில் புறமுதுகிட்டு ஓடுவது போல் நடித்து எதிரிகளின் மீது அம்பு மாரி பொழிவர்.
கி.மு. 250 ஆம் ஆண்டில் பார்த்தியன்கள் தனிநாடு அமைப்பதில் வெற்றி பெற்றனர். கி.மு முதலாம் நூற்றாண்டில் அது யூப்ரடீசு மற்றும் சிந்து நதிகளுக்கிடையிலும் இந்தியப் பெருங்கடல் மற்றும் அமு தர்யா ஆற்றுக்கிடையிலும் பரந்து விரிந்த பேரரசாக வளர்ந்தது.
வெளியிணைப்புகள்[தொகு]
| விக்கிமீடியா பொதுவகத்தில் பார்த்தியப் பேரரசு தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |