காபீர் கோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காபீர் கோட்
کافرکوٹ
Bilot Fort Temple - Panorama 2.jpg
காபீர் கோட்டின் தொன்மையான இந்துக் கோயில்களின் சிதிலங்கள்
காபீர் கோட் is located in பாக்கித்தான்
காபீர் கோட்
Shown within Pakistan
இருப்பிடம்தேரா இஸ்மாயில் கான் மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்
வகைகோட்டைகள், விகாரைகள்
வரலாறு
கட்டப்பட்டதுகிபி ஏழாம் நூற்றாண்டு
பயனற்றுப்போனது1947
கலாச்சாரம்இந்து ஷாகி

காபீர் கோட் (Kafir Kot) (உருது: کافرکوٹ; பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின் தெற்கில் அமைந்த தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் பாயும் சிந்து நதிக்கரையில் அமைந்த பைலட் செரீப் நகரத்தில் அமைந்துள்ளது. [1] காபீர் கோட்டில் கிபி ஏழாம் நூற்றாண்டு காலத்திய இந்து ஷாகி மன்னர்கள் எழுப்பிய இந்துக் கோயில்கள் இங்குள்ளது. 1915-ஆம் ஆண்டில் மியான்வலி மாவட்ட கெஜட் புத்தகத்தில், காபீர் கோட் பகுதிகளில் உள்ள தொன்மையான இந்து கோயில்களால், இப்பகுதி கணிசமான முக்கியத்துவம் மற்றும் பழமையான இந்து நாகரிகம் இருந்ததற்கான அறிகுறிகள் கொண்டிருந்தது எனக்குறித்துள்ளது. [2] It is located at 32°30'0N 71°19'60E[3]

இதனை [[இந்தியப் பிரிவினை|1947-இல் பாகிஸ்தான் விடுதலைக்கு] முன்னரே, பாகிஸ்தானியர்கள், இந்த இந்துக் கோயில் தொகுதிகளை, பாவிகளின் கட்டிடங்கள் என்ற பொருளில் காபீர் கோட் என அழைத்ததுடன், இந்த பழமையன இந்துக் கோயில் கட்டிடங்களை சிதைத்தனர்.

பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள் காபீர் கோட்டின் சிதிலங்கள்[தொகு]

காபீர் கோட் தொல்லியல் களத்தின் தொல் பொருட்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காபீர்_கோட்&oldid=3381405" இருந்து மீள்விக்கப்பட்டது