மொகரா முராது
மொகரா முராது موہرا مرادو | |
---|---|
இருப்பிடம் | தட்சசீலம், பஞ்சாப் மாகாணம், பாகிஸ்தான் |
ஆயத்தொலைகள் | 33°45′39″N 72°51′38″E / 33.760821°N 72.860635°Eஆள்கூறுகள்: 33°45′39″N 72°51′38″E / 33.760821°N 72.860635°E |
வகை | விகாரை மற்றும் தூபி |
வரலாறு | |
கலாச்சாரம் | குசான், கிடாரைட்டுகள் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வாளர் | ஜான் மார்ஷல் |
அதிகாரபூர்வ பெயர்: Taxila | |
அளவுகோல் | iii, iv |
வரையறுப்பு | 1980 |
சுட்டெண் | 139 |

மொகரா முராது (Mohra Muradu) (உருது: موہرا مرادو) பாகிஸ்தான் நாட்டின், பஞ்சாப் மாகாணத்தின், பண்டைய தக்சசீலா நகரத்திற்கு அருகே கிபி இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த தூபியும், விகாரைகளுடன் நிறுவப்பட்ட உலகப் பாரம்பரிய பௌத்த தொல்லியல் களம் ஆகும்.
மொகரா முராது தூபியும், விகாரைகளும் குசான் பேரரசு காலத்தில் கிபி இரண்டாம் நூற்றாண்டில், பௌத்த பிக்குகள் தங்கி, தியானம் செய்வதற்கு நிறுவப்பட்டதாகும். இதனை ஹெப்தலைட்டுகள் கிபி 450-இல் அழித்ததால், ஐந்தாம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்டது. மொகரா முராது தூபியை, 1980-இல் யுனெஸ்கோ நிறுவனம், உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.
அகழ்வாய்வுகள்[தொகு]
1914 - 1915-இல் ஜான் மார்ஷல் எனும் பிரித்தானிய தொல்லியல் அறிஞர், மொகரா முராது தூபி பகுதிகளை அகழ்வாய்வு செய்தார். அகழ்வாய்வில் பிக்குகள் தியானம் செய்வதற்கான இரண்டு தளங்களுடன் கூடிய தூபிகளும், பிக்குகள் தங்குவதற்கான 27 அறைகளுடைன் கூடிய ஒரு விகாரையும், கௌதம புத்தர் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது.
படக்காட்சிகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- மொகரா முராது தூபியின் காணொளி
- dentity politics: Why Pakistan has erased Kautilya from its consciousness