இந்திய கிரிக்கெட் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய கிரிக்கெட் லீக் (Indian Cricket League) என்பது 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற தனியார் துடுப்பாட்ட தொடர் ஆகும். இந்த தொடருக்கு ஜீ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் நிதியுதவி வழங்கியது. இந்த தொடரில் இரண்டு பருவங்கள் நான்கு சர்வதேச அணிகள் (உலக லெவன், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்) இடம்பெற்றது. போட்டிகள் ட்வென்டி 20 வடிவத்தில் நடத்தப்பட்டன. 50 ஒவர் போட்டிகளும் விளையாட திட்டமிடப்பட்டது. ஆனால் இது நிகழவில்லை. ஐ.சி.எல் நிறுவனம் இந்திய பிரிமியர் லீகின் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், ஐ.சி.எல் தொடர் 2009 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

வரலாறு[தொகு]

முதலாவது ஐ.சி.எல் தொடர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. முதல் தொடர் பட்டத்தை சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணியினர் வென்றனர். இரண்டாவது தொடர் அகமதாபாத்தில் 2008 ம் ஆண்டின் கடைசியில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின் லாகூர் பாக்தாஸ் வெற்றி பெற்றது. பாக்தாஸ் அணியில்இம்ரான் நசீர், அப்துர் ரஸ்சாக், ஷேன் பாண்ட், இன்சமாம் உல் ஹக் போன்ற சர்வதேச வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். பாக்தாஸ் அணியின் பயிற்சியாளராக மோயின் கான் இருந்தார்.

ஐ.சி.எல் தனியார் குழுக்களின் ஒன்பது அணிகள்[தொகு]

  • மும்பை சாம்ப்ஸ்
  • சென்னை சூப்பர்ஸ்டார்ஸ்
  • சண்டிகர் லயன்ஸ்
  • ஹைதராபாத் ஹீரோஸ்
  • ராயல் பெங்கால் டைகர்ஸ் (கொல்கத்தா)
  • தில்லி ஜயண்ட்ஸ்
  • அஹமதாபாத் ராக்கெட்ஸ்
  • லாகூர் பாட்காஸ்
  • டாக்கா வாரியர்ஸ்

மேற்கோள்[தொகு]

1.Cricinfo staff (14 May 2007). "Zee Sports denies signing of stars". Cricinfo. Retrieved 2007-06-13. 2.Khanna, Roma (14 May 2007). "BCCI's own now have a new job". CricketNext. Retrieved 2007-06-13. 3. Vasu, Anand (22 August 2007). "ICL to hold camp at Mayajaal in Chennai". cricinfo.com. Retrieved 2007-08-23.