ஜாவெட் மியன்டாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாவெட் மியன்டாட்
Rene Schoonheim and Javed Miandad 1978.jpg
பிறப்பு12 சூன் 1957 (age 62)
கராச்சி
பணிசுயசரிதையாளர்
ஒரு நிகழ்ச்சியின் போது மியன்டட் (பச்சை நிற ஆடையில் இருப்பவர்.)

முகமது ஜாவெட் மியன்டாட் (Mohammad Javed Miandad (Urdu: محمد جاوید میانداد;பிறப்பு - ஜூன் 12, 1957, கராச்சி)பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் ஆவார். தனித்துவமான மட்டையாடும் திறனாலும் இவரின் தலைமைப் பண்பினாலும் பரவலாக அறியப்பட்டார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரின் தனித்துவமான விளையாடும் திறன் மூலம் பிரபலமானார்.[1] துடுப்பாட்ட விமர்சகர்கள் மற்றும் பல சாதனையாளர்களின் மூலமாக பல பாராட்டுக்களையும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களில் மிகச் சிறந்த மட்டையாளர் ஜாவெட் தான் என ஈஎஸ்பிஎன் தெரிவித்தது.[2] அனைத்துக் காலத்திற்குமான சிறந்த துடுப்பாளார்களில் இவரும் ஒருவர் என இவரின் சமகால துடுப்பாட்ட வீரர் மற்றும் பயிற்சியாளரான இயன் செப்பல் தெரிவித்தார்.[3] அனைத்துக் காலத்திற்குமான சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையை ஈஎஸ்பிஎன் நிறுவனம் லெஜன்ட்ஸ் ஆஃப் கிரிக்கெட் எனும் பெயரில் வெளியிட்டது.இதில் இவருக்கு 44 ஆவது இடம் கிடைத்தது.[4] இவர் 1975 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பாக்கித்தான் அணிக்காக விளையாடினார். இவர் பாக்கித்தான் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். 1986 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓட்டங்கள் தேவைப்பட்ட போது கடைசிப் பந்தில் ஆறு ஓட்டங்கள் அடித்ததன் மூலம் பிரபலமானார்.[5] 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் பாக்கித்தான் அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். இவரின் ஓய்விற்குப் பிறகு பல சமயங்களில் இவர் பாக்கித்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரின் மகன் தாவூத் இப்ராகிமின் மகளைத் திருமணம் செய்தார்.[6]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முதல் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர் அப்துல் ஹாபிஸ் காதர் இவரை 1970 ஆண்டுகளின் துவக்கத்தில் பார்த்தபோது இந்த நூற்றான்டின் சிறந்த வீரர் இவர்தான் எனத் தெரிவித்தார். இவரின் வருகை ஏற்கனவே முஷ்தாக் அகுமது, மஜீத் கான், சாதிக் முகம்மது, சஹீர் அப்பாஸ் மற்றும் வசீம் ராசா ஆகிய வலுவான மட்டையாளர்களின் வரிசையை மேலும் வலுவாக்கியது. 1976 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையடியது. அக்டோபர் 9 , லாகூரில் , கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[2] இதன்முதல் ஆட்டப் பகுதியில் இவர் 163 ஓட்டங்கள் அடித்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25* ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறு அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார். அப்போது இவருக்கு வயது 19 ஆண்டுகள் 119 நாட்கள் ஆகும். இந்தப்ம் போட்டியில் பந்துவீச்சில் இவர் ஒரு இலக்கினை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..[7][8] இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி கராச்சியிலுள்ள தேசிய மைதானத்தில் நடைபெற்றது.[9] இந்தப் போட்டியில் 206 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் இருநூறினைப் பதிவு செய்தார்.இதன்மூலம் 47 வயதான ஜார்ஜ் ஹெட்லியின் சாதனையைத் தகர்த்தார். மேலும் மிகக் குறைந்த வயதில் இருநூறு அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார்.[10] அப்போது இவருக்கு வயது 19 ஆண்டுகள் 140 நாட்கள் ஆகும். பின் இரண்டாவது ஆட்ப் பகுதியில் 85 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒரே போட்டியில் இருநூறு மற்றும் நூறு ஓட்டங்கள் அடிக்கும் சாதனையைத் தவறவிட்டார்.[11] இந்தத் தொடரில் அதிக ஒட்டங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதல் இடம்பிடித்தார். இவர் 504 ஓட்டங்களை 126.00 எனும் சராசரியோடு எடுத்தார்.[12] இவரின் சிறப்பான செயல்பாட்டினால் இந்தத் தொடரை 2-0 எனும் கணக்கில் பாக்கித்தான் அணி கைப்பற்றியது.[9]

சான்றுகள்[தொகு]

 1. Gower, David. David Gower's 50 Greatest Cricketers of All Time. Icon Books Ltd. பக். 33. 
 2. 2.0 2.1 "Javed Miandad". ESPNcricinfo. பார்த்த நாள் 12 August 2012.
 3. "The stars on Miandad". பார்த்த நாள் 10 October 2016.
 4. ESPN's Legends of Cricket
 5. Abbasi, Kamran (26 April 2000). "Miandad seals it with a six". ESPNcricinfo. பார்த்த நாள் 12 August 2012.
 6. Rabbani, Khawer (29 March 2003). "The man they called 'Mum & Dad'". ESPNcricinfo. பார்த்த நாள் 14 August 2012.
 7. "New Zealand tour of Pakistan, 1976/77: Test series – 1st Test". ESPNcricinfo. பார்த்த நாள் 3 October 2013.
 8. "Youngest players to score a hundred". ESPNcricinfo. பார்த்த நாள் 3 October 2013.
 9. 9.0 9.1 "New Zealand tour of Pakistan, 1976/77: Test series – 3rd Test". ESPNcricinfo. பார்த்த நாள் 3 October 2013.
 10. "Youngest players to score a double hundred". ESPNcricinfo. பார்த்த நாள் 3 October 2013.
 11. "Wisden: Pakistan v New Zealand". Wisden. ESPNcricinfo. பார்த்த நாள் 3 October 2013.
 12. "Records / New Zealand in Pakistan Test Series, 1976/77 / Most runs". ESPNcricinfo. பார்த்த நாள் 3 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாவெட்_மியன்டாட்&oldid=2733433" இருந்து மீள்விக்கப்பட்டது