சிறிசாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறிசாந்த்
Sreesanth.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் சிறிசாந்த்
பட்டப்பெயர் சிறி
பிறப்பு 6 பெப்ரவரி 1983 (1983-02-06) (அகவை 36)
இந்தியா
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 253) மார்ச்சு 1, 2006: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு அக்டோபர் 9, 2010: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 162) அக்டோபர் 25, 2005: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 27, 2010:  எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 24 51 64 80
ஓட்டங்கள் 263 44 573 127
துடுப்பாட்ட சராசரி 11.43 4.00 9.71 6.04
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 35 10* 35 33
பந்து வீச்சுகள் 4,753 2,403 11,364 3,796
இலக்குகள் 79 75 191 104
பந்துவீச்சு சராசரி 35.16 32.04 34.02 34.47
சுற்றில் 5 இலக்குகள் 3 1 6 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/40 6/55 5/40 6/55
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 7/– 12/– 9/–

சனவரி 24, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சாந்தகுமாரன் சிறிசாந்த் (Shanthakumaran Sreesanth (இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation, ),பிறப்பு: பிப்ரவரி 6 1983), முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் விளையாடினார். வலது கை விரைவு வீச்சாளரான இவர் வலது கை இறுதிக்கட்ட மட்டையாளரும் ஆவார். கேரளா மாநிலத் துடுப்பாட்ட அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 51 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2006 – 2010 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது.[1] பிக் பிக்சர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]

சிறிசாந்த் , இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் புதிய பந்தில் வீசிய இவர் குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோரது இலக்கினை வீழ்த்தினார்.[2][3] பின் இரு ஆட்டங்களில் இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பிறகு நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது போட்டியில் இவருக்கு அணியின் பயிற்சியாளரான கிறெக் சப்பல் வாய்ப்பு வழங்கினார்.[4] பின் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. ஆனால் விளையாடும் அணியில் இவர் இடம்பெறவில்லை. பின் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட தொடரில் ஐந்து போட்டிகளிலும் விளையாடினார். கராச்சியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 58 ஓட்டங்கள் கொடுத்து 4 இலக்குகளை வீழ்த்தினார்.ஏப்ரல், 2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் அனியில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் 55 ஓட்டங்கள் கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். மேலும் மொத்தமாக 10 இலக்குகளை வீழ்த்தினார். இவரின் பந்துவீச்சு சராசரி 16.3 ஆக இருந்தது.[5]

இவரின் அதிகபட்சமான பந்துவீச்சு சராசரியினால் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்தார். இவருக்குப் பதிலாக ஆர் பி சிங் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். பின் அஜித் அகர்கருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு அந்தத் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளைணியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பிரவீன் குமாருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 5 ஓவர்கள் வீசிய இவர் இலக்கினைக் கைப்பற்றாது 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். பின் இறுதிப்போட்ட்டியில் விளையாடிய இவர் 8 ஓவர்கள் வீசிய இவர் இலக்கினைக் கைப்பற்றாது 52 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்

சான்றுகள்[தொகு]

  1. "Sreesanth gets life ban for IPL fixing". ESPNcricinfo. 13 September 2013. http://www.espncricinfo.com/india/content/story/671043.html. பார்த்த நாள்: 14 September 2013. 
  2. Sreesanth to be given the new ball
  3. India wrap up comprehensive win
  4. No changes to Indian squad
  5. ODIs – Innings by innings list

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிசாந்த்&oldid=2719858" இருந்து மீள்விக்கப்பட்டது