மகேந்திரசிங் தோனி
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 7 சூலை 1981 ராஞ்சி, பீகார் (தற்பொழுது ஜார்க்கண்ட்), இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | தல, கேப்டன் கூல், மகி[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 9 அங்குலம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | இலக்குக் கவனிப்பாளர் மட்டையாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 251) | 2 டிசம்பர் 2005 எ இலங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 26 டிசம்பர் 2014 எ ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 158) | 23 டிசம்பர் 2004 எ வங்காளதேசம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 9 ஜூலை 2019 எ நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 7 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 2) | 1 டிசம்பர் 2006 எ தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 27 பிப்ரவரி 2019 எ ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 7 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1999–2004 | பீகார் துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2004/05–தற்காலம் | ஜார்க்கண்ட் துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2015 | சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 7) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–2017 | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 7) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–தற்காலம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 7) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 9 ஜூலை 2019 |
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ஒநாப போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[2][3][4][5] மேலும் அவர் காலத்திலான ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்.[6]
2004ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதைப் பெற்றார். இவர் இந்த விருதை இருமுறை வென்ற முதல் வீரர் ஆவார்.மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்திய குடிமக்களுக்கான நான்காவது மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூசன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்[7]. 2009, 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான உலகப் பதினொருவர் அணியின் தலைவராக இவர் தேர்வானார். மேலும் இந்த அணியில் எட்டு முறை இடம் பிடித்தார். அதில் ஐந்து முறை தலைவராக இருந்தார். நவம்பர் 2011இல் இந்திய ரானுவம் தோனிக்கு கௌரவ துணைநிலை கர்னல் பதவி அளித்தது.[8] இவர் கபில்தேவிற்குப் பிறகு இந்த மரியாதையைப் பெறும் இரண்டாவது வீரர் ஆவார்.
2012 ஆம் ஆண்டில் ஸ்போர்ட்ஸ் புரோ ஊடகத்தின் அதிக வியாபாரமாகக்கூடிய தடகள வீரர்கள் வரிசையில் இவருக்கு பதினாறாவது இடம் கிடைத்தது.[9] இந்தியன் சூப்பர் லீக்கின் சென்னையின் எப் சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார்.[10] 2015 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் இவருக்கு 23 ஆம் இடம்கிடைத்தது (31 மில்லியன் அமெரிக்க டாலர்) [11]. எம். எஸ். தோனி (திரைப்படம்) இவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
விருதுகள்[தொகு]
2008 மற்றும் 2009ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாட்டு வீரர் விருது (இந்த விருதை இரண்டு முறை பெற்ற முதலாவது இந்திய விளையாட்டு வீரர்), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்திய குடிமகனுக்கான மிக உயரிய நான்காவது கவுரமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய மூன்றாவது விருதான பத்ம பூசண்[12] உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்.[13] 2009ஆம் ஆண்டு நவம்பர் வரை ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தோனி அதிக மதிப்பெண் பெற்ற மட்டையாளராக இருக்கிறார். 2009ஆம் ஆண்டில் விசுடனின் முதலாவது கனவு தேர்வு XI அணிக்கான தலைவராகவும் இடம்பெற்றிருக்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் 10 அதிக வருமானம் ஈட்டும் துடுப்பாட்ட வீரர்களில் மகேந்திர சிங் தோனி முதலாவதாக இருந்தார்.[14]. தோனி தலைமையிலான இந்திய அணி 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையை வென்றது.அதன் பின்னர் இதுவரை இந்திய அணி உலக கோப்பையை வெல்லவில்லை.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
தோனி பீகார், ராஞ்சியில், (இப்போது ஜார்க்கண்ட்) பிறந்தார். இவர் பான் சிங் மற்றும் தேவகி தேவி ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இளையவர் ஆவார்.[15][16][17][18] இவரது பெற்றோர் உத்தரகாண்டிலிருந்து ராஞ்சிக்கு குடிபெயர்ந்தனர். இவரது தந்தை சார்க்கண்டிலுள்ள மெகன் காலணி நிறுவனத்தில் குழாய் செய்குநராக பணியாற்றினார்.[19]
தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியினைத் தொடர்ந்து, 2005 திசம்பரில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார்.[20] தோனி தனது முதல் போட்டியில் 30 ஓட்டங்கள் எடுத்தார், அந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.[21] இரண்டாவது போட்டியில் தனது முதல் ஐம்பது ஓட்டத்தினைப் பதிவு செய்தார்.[22]
இருபது20[தொகு]
12 பிப்ரவரி 2012 அன்று, அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியாவை இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி நிறைவில், அவர் கிளின்ட் மெக்கேயின் பந்துவீச்சில் 112 மீட்டர் தூர பெரிய ஆறினை அடித்தார். போட்டிக்குப் பின்னர் 2011ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது அடித்த ஆறினை விட இது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.[23]
இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]
தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் ஐபிஎல் முதல் பருவ ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[24] இவரது தலைமையின் கீழ், 2010, 2011, 2018 மற்றும் 2021 இந்தியன் பிரீமியர் லீக் பட்டங்களையும், 2010 மற்றும் 2014 சாம்பியன்ஸ் லீக் இ20 பட்டங்களையும் வென்றது மற்றும் 2008, 2012, 2013, 2019 பருவத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.[25][26]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஜைதி தாலுகாவில் உள்ள லவாலி இவரது பூர்வீக கிராமமாகும். இக்கிராமத்தில் 20 முதல் 30 குடும்பங்கள் வசிக்கின்றன. இவரது தந்தை பான் சிங் தோனி 1970ல் வேலைக்காக கிராமத்தை விட்டு வெளியேறி ராஞ்சியில் குடியேறினார். தோனியின் மாமா தன்பத் சிங் தௌனி மற்றும் அவரது உறவினர் ஹயாத் சிங் தௌனி லவாலியில் வசிக்கின்றனர்.[27][28]
குறிப்புகள்[தொகு]
- ↑ Sen, Rohan. "MS Dhoni pays tribute to CSK fans: Thala is a big nickname they have given me". India Today (ஆங்கிலம்). 5 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dhoni's numbers prove his worth as a finisher in One Day Internationals". London: Daily Mail. 15 February 2012. http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2101782/Dhonis-numbers-prove-worth-finisher-One-day-Internationals.html. பார்த்த நாள்: 5 December 2013.
- ↑ "Dhoni is best finisher I have ever seen: Vengsarkar". Chennai, India: The Hindu. 12 July 2013. http://www.thehindu.com/sport/cricket/dhoni-is-best-finisher-i-have-ever-seen-vengsarkar/article4909009.ece. பார்த்த நாள்: 5 December 2013.
- ↑ "MS Dhoni, a fantastic finisher". DNA India. 5 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Experts feel Dhoni is the best finisher". Sunday Guardian. 27 நவம்பர் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Snehal Pradhan (12 June 2016). "ஃபினிஷ்". Firstpost. 29 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. 15 November 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ PTI (1 November 2011). "Dhoni, Bindra conferred Lt. Col. rank". New Delhi Edition (Chennai, India: The Hindu). http://www.thehindu.com/sport/other-sports/article2589084.ece. பார்த்த நாள்: 2 November 2011.
- ↑ "MS Dhoni, Mary Kom world's 16th, 38th most marketable athletes". The Times Of India. 26 June 2012. Archived from the original on 2013-06-18. https://web.archive.org/web/20130618042111/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-26/off-the-field/32424123_1_mc-mary-kom-london-olympics-world-champion-boxer.
- ↑ "Dhoni becomes ISL team Chennaiyin FC co-owner".
- ↑ "Mahendra Singh Dhoni". Forbes. 10 June 2014. 4 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. 15 November 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. 15 November 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. July 21, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dhoni Forbes' top earning cricketer".
- ↑ "MS Dhoni's mother and father test positive for Covid-19, admitted to private hospital in Ranchi". India Today (ஆங்கிலம்). 17 October 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Players and Officials – MS Dhoni". Cricinfo. 12 February 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 August 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ MS Dhoni's sister to convey school's best wishes | India vs England 2012 – News | NDTVSports.com பரணிடப்பட்டது 3 சூலை 2021 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Ranchi rocker". The Tribune. India. 29 April 2006. 10 April 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 May 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Mishra, Rashmi (30 April 2017). "Mahendra Singh Dhoni New Home in Ranchi: Dhoni and Family shifted to farmhouse Kailashpati on Akshaya Tritiya". India.com. https://www.india.com/viral/mahendra-singh-dhoni-new-home-in-ranchi-dhoni-and-family-shifted-to-farm-house-kailashpati-on-akshaya-tritiya-2084229/amp/.
- ↑ "Ganguly included in Test squad". Cricinfo. 23 November 2005. 12 October 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 May 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Jayawardene and Vaas star in draw". Cricinfo. 6 December 2005. 12 October 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 May 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Scorecard:India v/s Sri Lanka 2nd Test 2005/06 Season". Cricinfo. 21 February 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 May 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Yahoo Cricket". 26 February 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ipl 2008#Player auctions
- ↑ "MS Dhoni: Indian cricket's first mega-brand". ESPNcricinfo. 25 October 2017. 11 November 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ . 25 March 2022. http://epaper.lokmat.com/articlepage.php?articleid=LOK_JLLK_20220325_5_3.
- ↑ Mohammad Anab (17 August 2020). "'MS Dhoni could have played for a few more years' | Dehradun News – Times of India". The Times of India (ஆங்கிலம்). 17 October 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ .
புற இணைப்புகள்[தொகு]
- டோனியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2018-03-29 at the வந்தவழி இயந்திரம்
- இன்றைய ஐபிஎல் போட்டிகள் பரணிடப்பட்டது 2020-02-23 at the வந்தவழி இயந்திரம்