ஜஸ்பிரித் பும்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜஸ்பிரித் பம்ரா
Jasprit Bumrah
Jasprit Bumrah.jpg
ஜஸ்பிரித் பம்ரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜஸ்பிரித் ஜஸ்பிர் சிங் பும்ரா
பிறப்பு6 திசம்பர் 1993 (1993-12-06) (அகவை 29)
அகமதாபாத், குசராத்து, இந்தியா
பட்டப்பெயர்யசி
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு-நடுத்தரம்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 210)23 சனவரி 2016 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாப3 செப்டம்பர் 2017 எ இலங்கை
ஒநாப சட்டை எண்93
இ20ப அறிமுகம் (தொப்பி 57)26 சனவரி 2016 எ ஆத்திரேலியா
கடைசி இ20ப6 செப்டம்பர் 2017 எ இலங்கை
இ20ப சட்டை எண்93
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012–இன்றுகுசராத்து
2013–இன்றுமும்பை இந்தியன்ஸ் (squad no. 93)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப இ20ப இ20 முத
ஆட்டங்கள் 21 24 89 26
ஓட்டங்கள் 1 0 35 120
மட்டையாட்ட சராசரி 0.00 8.75 13.33
100கள்/50கள் 0/0 -/- 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 1* 0* 14* 16*
வீசிய பந்துகள் 585 535 1986 2255
வீழ்த்தல்கள் 41 33 104 89
பந்துவீச்சு சராசரி 21.68 17.79 23.07 25.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 0 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 6/27 6/19 3/11 6/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 2/– 13/- 9/–
மூலம்: ESPNcricinfo, ஏப்ரல் 16 2017

ஜஸ்பிரித் ஜஸ்பிர் சிங் பும்ரா(Jasprit Jasbir Singh Bumrah பிறப்பு: டிசம்பர் 6, 1993) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் விரைவு வீச்சாளர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று துடுப்பாட்ட வடிவங்களிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு ஆண்டில் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 28 மட்டையாளர்களை வீழ்த்தி இந்தச் சாதனையினைப் புரிந்தார்.[1] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு நிறைவில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனையினை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக எடுத்தார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு நிறைவில் 35 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையினைப் புரிந்தார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் குசராத்து மாநில துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2015-2016 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் புவனேசுவர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இடம் பிடித்தார்.[2] இதே தொடரில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் அதே அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜஸ்பிரித் ஜஸ்பிர் சிங் பும்ரா டிசம்பர் 6, 1993 இல் அகமதாபாத், குசராத்தில் பிறந்தார். இவர் சீக்கியர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை ஜஸ்பிர் சிங், தாய் தல்ஜித். பும்ராவுக்கு ஏழு வயதாக இருக்கும் போது இவரின் தந்தை காலமானார். இவரின் தாய் பள்ளிக்கூட முதல்வராக இருந்தார்.

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

குசராத்து மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக முதலில் விளையாடினார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 32 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையாளர்களை வீழ்த்தினார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

சனவரி 27,2016 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். இறுதிக் கட்டங்களில் நேர்க்கூர்ப் பந்துகளை சிறப்பாக வீசினார். சில புதுமையான பந்துவீசும் பாங்கினைக் கொண்டிருந்தார். இதனால் மட்டையாளர் அந்தப் பந்தினைக் கணிப்பது வழக்கத்தை விட சற்று சிரமமாக இருந்தது.

ஆகஸ்டு, 2016 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியின் போது 28வது முறையாக மட்டையாளரை வீழ்த்தினார். இதன் மூலம் ஒரு ஆண்டில் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[4]

2016 -2017 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதன் இரண்டாவது பன்னாட்டு இருபது20 போட்டியின் போது நான்கு ஓவர்களில் 20 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து இரண்டு மட்டையாளர்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தத் தொடரின் இறுதிப்போட்டியின் போது எதிரணிக்கு இறுதி அறுவீச்சில் எட்டு ஓட்டங்கள் தேவைப்பட்ட போது இரண்டு ஓட்டங்கள் மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு மட்டையாளர்களை வீழ்த்தி தன் அணியின் வெற்றிக்கு உதவினார். கடைசிப் பந்தில் ஆறு ஓட்டங்கள் தேவைப்பட்ட போது சிறப்பான நேர்க்கூர் பந்து வீசினார்.[5] 2017 ஆம் ஆண்டில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் 15 மட்டையார்களை வீழ்த்தினார். ஐந்து அல்லது அதற்கும் குறைவான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் விளையாடி அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார்.[6] 2019 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றார். அத்தொடரில் அவர் இலங்கை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் தனது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வாழ்க்கையின் 100வது மட்டையாளரை வீழ்த்தினார். மேலும் அத்தொடரில் இவர் மொத்தம் 18 மட்டையாளர்களை வீழ்த்தினார். ஐசிசி அறிவித்த 2019 உலகக்கிண்ணத்தின் சிறந்த அணி பட்டியலில் பும்ராவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

சான்றுகள்[தொகு]

  1. "Most wickets in a calendar year".
  2. "சமிக்கு பதிலாக பும்ரா இடம்பிடித்தார்". ESPNcricinfo (ESPN Sports Media). 18 சனவரி 2016. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/963217.html. பார்த்த நாள்: 18-01-2016. 
  3. "Bumrah replaces Shami in T20 squad". ESPNcricinfo (ESPN Sports Media). 18 January 2016. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/963217.html. பார்த்த நாள்: 18 January 2016. 
  4. "Bumrah breaks Nannes' T20 record".
  5. "New-ball Nehra, old-ball Bumrah a recipe for victory". ESPNcricinfo. 29 January 2017. 30 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Kohli second only to Tendulkar". ESPNCricinfo. 3 September 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்பிரித்_பும்ரா&oldid=3460941" இருந்து மீள்விக்கப்பட்டது