சென்னையின் எப் சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னையின் காற்பந்துக் கழகம்
Chenniayin FC.jpg
முழுப்பெயர்சென்னையின் எஃப்.சி
தோற்றம்2014
ஆட்டக்களம்சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
ஆட்டக்கள கொள்ளளவு40,000
உரிமையாளர்அபிஷேக் பச்சன், மகேந்திர சிங் தோனி மற்றும் விட்டா டானி
தலைமை பயிற்சியாளர்மார்க்கோ மாத்தெரசி
கூட்டமைப்புஇந்தியன் சூப்பர் லீக்
2014துவக்கப் பருவம்

சென்னையின் எப் சி என்பது இந்திய சூப்பர் லீகின் சென்னை நகரத்தின் அணியாகும். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் அக்டோபர் 2014 முதல் தொடங்கப்பட உள்ளன. இதில் சென்னை அணியின் பெயரே சென்னையின் எப் சி ஆகும். சன் குழுமம் இந்தியன் சூப்பர் லீகில் இருந்து விலகியதால் பெங்களூர் அணிக்கு பதிலாக சென்னை அணி உருவாக்கப்பட்டது. இந்த அணியின் உரிமையாளர்கள் அபிஷேக் பச்சன் மற்றும் விடா டானி ஆவர்.

வரலாறு[தொகு]

இந்திய சூப்பர் லீக் 2013 இல் உருவாக்கப்பட்ட போது சென்னை உட்பட ஒன்பது மாநகரங்களில் கிளை ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சென்னை அணியின் முதன்மை அமைப்பாளர் சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் வாரியத்துடன் இருந்த வேலை காரணமாக விலகி கொண்டார். இதனால் இந்திய சூப்பர் லீகில் உள்ள அணிகளின் எண்ணிக்கை எட்டாக குறைந்தது. இதனிடையில் பெங்களூரு அணியை ஏலம் எடுத்திருந்த சன் குழுமம் இந்திய சூப்பர் லீகில் இருந்து விலகியது. இந்திய சூப்பர் லீக் பெங்களூரு அணிக்கு புதிய உரிமையாளர்களைத் தேடிக் கொண்டிருந்த நிலையில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் விடா டானி பெங்களூருக்கு பதிலாக சென்னைக்கான அணியின் உரிமையை ஏலம் எடுப்பதாக அறிவித்தனர். இதன்மூலம் சென்னை அணி மீண்டும் உயிர்பெற்றது. இதற்கு சென்னையின் எப் சி எனப் பெயர் சூட்டினர்.

சென்னை அணியின் முதல் போட்டி அக்டோபர் 16, 2014 அன்று தொடங்குகிறது.

அரங்கம்[தொகு]

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம்

சென்னையின் எப் சி அணியின் இல்ல அரங்கம் சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் ஆகும். இந்த அரங்கம் 40,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய பெரிய விளையாட்டரங்கம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னையின்_எப்_சி&oldid=3206409" இருந்து மீள்விக்கப்பட்டது