நவ்தீப் சைனி
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
பிறப்பு | 23 நவம்பர் 1992 கர்னல், அரியானா, இந்தியா |
மட்டையாட்ட நடை | வலது கை |
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப்பந்து வீச்சு |
பங்கு | பந்துவீச்சாளர் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2013-தற்போது வரை | தில்லி துடுப்பாட்ட அணி |
2018-தற்போது வரை | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
மூலம்: கிரிக் இன்ஃபோ, 26 மார்ச் 2018 |
நவ்தீப் சைனி (Navdeep Saini (பிறப்பு:நவ23,1992) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தில்லி துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார்.[1]
உள்ளூர்ப் போட்டிகள்
[தொகு]சனவரி 2, 2016 இல் சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தொடரில் தனது முதல் இருபது20போட்டியில் விளையாடினார். [2]
2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.[3] 2018 ஆம் ஆண்டில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.[4] 2019 ஆம் ஆண்டிலும் இவர் அதே அணிக்காக விளையாடினார்.
சர்வதேசப்போட்டிகள்
[தொகு]சூன் 2018 இல் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் முகம்மது சமிக்குப் பதிலாக இவர் தேர்வானார். ஆனால் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.[5] ஏப்ரல் 2019 இல் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் கூடுதல் பந்துவீச்சாளராகத் தேர்வானார்.[6]
சான்றுகள்
[தொகு]- ↑ "Navdeep Saini". ESPN Cricinfo. Retrieved 7 November 2015.
- ↑ "Syed Mushtaq Ali Trophy, Group C: Delhi v Railways at Vadodara, Jan 2, 2016". ESPN Cricinfo. Retrieved 10 January 2016.
- ↑ "List of players sold and unsold at IPL auction 2017". ESPN Cricinfo. Retrieved 20 February 2017.
- ↑ "List of sold and unsold players". ESPN Cricinfo. Retrieved 27 January 2018.
- ↑ "Shami out of Afghanistan Test after failing fitness Test". ESPN Cricinfo. Retrieved 11 June 2018.
- ↑ "Navdeep Saini named standbys for World Cup". ESPN Cricinfo. Retrieved 24 April 2019.
வெளியிணைப்புகள்
[தொகு]கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: நவ்தீப் சைனி