அக்சார் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அக்சர் படேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அக்சார் பட்டேல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அக்சார் ராஜேசுபாய் பட்டேல்
பிறப்பு20 சனவரி 1994 (1994-01-20) (அகவை 27)
நாடியாத், குசராத்து, இந்தியா
உயரம்1.83 m (6 ft 0 in)
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமைச் சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 302)13 பெப்ரவரி 2021 எ இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 202)15 சூன் 2014 எ வங்காளதேசம்
கடைசி ஒநாப29 அக்டோபர் 2017 எ நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்20
இ20ப அறிமுகம் (தொப்பி 53)17 சூலை 2015 எ சிம்பாப்வே
கடைசி இ20ப24 பெப்ரவரி 2018 எ தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012–தற்போதுவரைகுசராத்து அணி
2013மும்பை இந்தியன்ஸ்
2014–2019கிங்சு இலெவன் பஞ்சாபு (squad no. 20)
2018டர்ஹாம் (squad no. 20)
2019–தற்போதுவரைடெல்லி கேபிடல்ஸ் (squad no. 20)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒதுப பஇ20 முதது
ஆட்டங்கள் 1 38 11 31
ஓட்டங்கள் 12 181 68 1,420
மட்டையாட்ட சராசரி 12.00 12.92 17.00 41.76
100கள்/50கள் 0/0 0/0 0/0 1/11
அதியுயர் ஓட்டம் 7 38 20* 110*
வீசிய பந்துகள் 246 1,908 234 7,033
வீழ்த்தல்கள் 7 45 9 104
பந்துவீச்சு சராசரி 31.31 29.44 28.64
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 0 5
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/60 3/34 3/17 7/54
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 15/– 5/– 14/–
மூலம்: இஎஸ்பிஎன்கிரிக்கின்ஃபோ, 13 பெப்ரவரி 2021

அக்சார் பட்டேல் (Axar Rajeshbhai Patel) [1][2] பிறப்பு: 20 சனவரி 1994) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் குசராத்து மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக பந்துவீசுவதிலும், துடுப்பாட்டத்திலும் விளையாடி வருகிறார். இடக்கைத் துடுப்பாட்ட, மற்றும் இடதுகை மரபுவழா சுழல் பந்துவீச்சாளருமான இவர், இந்தியன் பிரீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013 ஆம் ஆண்டிலும், பின்னர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணியில் 2014 ஆம் ஆண்டிலும் விளையாடினார். தனது முதலாவது ஒருநாள் போட்டியை 2014 சூன் 15 வங்காளதேச அணிக்கு எதிராக விளையாடினார்.

ஆத்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் நடைபெற்ற 2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவர் விளையாடினார்.

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2013 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. பின் 2014 ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்சு லெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இவர் 17 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் 2014 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் (எமெர்ஜிங் பிளேயர் ஆஃப் தெ சீரிஸ்) விருது பெற்றார்.[3] 2014 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 2015 ஆம் ஆண்டிலும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் இவரை அணி நிர்வாகம் இவரை தக்கவைத்தது. 2015 ஆம் ஆண்டில் பந்துவீச்சு மட்டுமின்றி மட்டையாளராகவும் சிறப்பாகப் பங்களித்தார். இந்தத் தொடரில் 206 ஓட்டங்கள் எடுத்தார்.[4] மே 1, 2016 இல் ராஜ்கோட்டில் நடைபெற்ற குஜராத் லயன்சு அணிக்கு எதிரான போட்டியின் போது 5 பந்துகளில் 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.[5] இதில் ஹேட்ரிக் இலக்குகளும் அடங்கும். 2016 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஹேட்ரிக் இதுவாகும். இதன்மூலம் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் லயன்சு அணிக்கு எதிராக 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச போட்டிகள்[தொகு]

2014 ஆம் ஆண்டில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக சிறப்பாக விளையாடியதன் மூலம் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவருக்கு இடம் கிடைத்தது. சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 59 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார்.

பின் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் நான்காவது போட்டியில்  10 ஓவர்கள் வீசி 26 ஒட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். ஆத்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் நடைபெற்ற2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவர் விளையாடினார்.

சூலை 17, 2015 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 ஓவர் போட்டியில் இவர் அறிமுகமானார்.[6] சிம்பாப்வே அணிக்கு எதிராக 3 இலக்குகள் எடுத்ததன் மூலம் சூன் 20, 2016 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

ஆட்டநாயகன் விருது[தொகு]

# தொடர் ஆண்டு செயல்பாடு முடிவு
1 இந்தியா எதிர் சிம்பாப்வே 2015 மட்டையாடவில்லை ; 4-0-17-3  இந்தியா 54 ஓட்டங்க'ள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பிறந்த அக்சார் பட்டேல் தர்ம்சிங் தேசாய் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கிறார்.[8]

விருதுகள்[தொகு]

2014 ஆம் ஆண்டின் சிறந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் விருதினைப் பெற்றார்.[9] 2014 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் எமெர்ஜிங் பிளேயர் ஆஃப் தெ சீரிஸ் விருது பெற்றார்.[3][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சார்_பட்டேல்&oldid=3373104" இருந்து மீள்விக்கப்பட்டது