ஹர்திக் பாண்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹர்திக் பாண்ட்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஹர்திக் பாண்டியா
Hardik Pandya (cropped).jpg
ஆகத்து 2015இல் பாண்டியா
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஹர்திக் ஹிமான்சு பாண்டியா
பிறப்பு 11 அக்டோபர் 1993 (1993-10-11) (அகவை 26)
சூரத், குஜராத், இந்தியா
வகை பன்முக ஆட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலது-கை
பந்துவீச்சு நடை வலது கை மித வேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 289) 26 சூலை, 2017: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 215) 16 அக்டோபர், 2016: எ நியூசிலாந்து
முதல் இ20ப போட்டி (cap 58) 26 சனவரி, 2016: எ ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2012/13–தற்போது பரோடா
2015–தற்போது மும்பை இந்தியன்ஸ் (squad no. 33)
அனைத்துலகத் தரவுகள்
தேர்வுஒ.நா.இ20ப
ஆட்டங்கள் 11 45 38
ஓட்டங்கள் 532 757 296
துடுப்பாட்ட சராசரி 36.80 29.24 16.44
100கள்/50கள் 1/4 0/4 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 108 83 33 *
பந்துவீச்சுகள் 498 1,604 665
வீழ்த்தல்கள் 17 45 36
பந்துவீச்சு சராசரி 33.71 32.38 25.61
5 வீழ்./ஆட்டம் 1 0 0
10 வீழ்./போட்டி 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/28 4/30 4/38
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 7/– 16/– 23/–

22 செப்டம்பர், 2019 தரவுப்படி மூலம்: ESPNcricinfo

ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) என்பவர் இந்தியாவிற்காகச் சர்வதேச அரங்கில் மட்டைப்பந்து விளையாடும் விளையாட்டு வீரர். இவரது முழுப்பெயர் ஹர்திக் ஹிமான்சூ பாண்டியா. இவர் பந்துவீச்சு, மட்டைவீச்சு, தடுப்பு ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கும் முழுமையான வீரர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஹர்திக் பாண்டியா அக்டோபர் 11, 1993 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஹிமான்சூ பாண்டியா சூரத்தில் ஒரு சிறிய தானுந்து நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஹர்திக் பாண்டியாவிற்கு ஐந்து வயதாக இருக்கும் போது அந்த நிறுவனத்தை நிறுத்தி விட்டு அவர் வதோதரா சென்றார். அங்கு தான் தனது இரு மகன்களுக்கான (ஹர்திக், குருனல் பாண்டியா) சிறந்த துடுப்பாட்ட பயிற்சி கிடைக்கும் என்ற காரணத்திற்காக அங்கே குடியேறினார். அவர் வதோதராவில் உள்ள கிரண் மோர் பயிற்சி நிறுவனத்தில் தனது இரு மகன்களையும் சேர்த்தார்.[1] பொருளாதாரச் சிக்கலின் காரணமாக கோர்வாவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தனர். ஒரு பழைய தானுந்திலேயே அவர்கள் தினமும் துடுப்பாட்ட மைதானத்திற்குச் சென்றனர். [2] ஒன்பதாம் வகுப்பு வரை எம். கே நடுநிலைப் பள்ளியில் பயின்றார்.[3]

இவருடைய சகோதரர், இளையோர் அளவிலான மன்ற துடுப்பாட்டப் போட்டிகளில் பலவற்றை ஹர்திக் பாண்டியா தனி ஆளாக வென்று கொடுத்தார் எனக் கூறியுள்ளார்.[4] ஹர்திக் பாண்டியா இந்தியன் எக்சுபிரசுக்கு அளித்த பேட்டியில் தனது மனோபாவத்தின் காரணமாக மாநில அணியிலிருந்து விலக நேரிட்டது எனக் கூறியுள்ளார். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தன்னால் இயலவில்லை எனக் கூறியுள்ளார்.[5]

உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]

2013 ஆம் ஆண்டிலிருந்து பரோடா துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார். 2013 -2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சயது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவதில் முக்கியப் பங்காற்றினார். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் விளையாடினார். அந்தப் போட்டியில் 8 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அதே போட்டியில் இலக்குகளை (விக்கெட்) எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அந்தப் போட்டி முடிந்தவுடன் , சச்சின் டெண்டுல்கர் இவரிடம் நீங்கள் இன்னும் 18 மாதங்களில் இந்திய அணிக்காக விளையாடுவாய் எனக் கூறினார். அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே 2016 ஆசிய கோப்பை மற்றும் 2016 ஐசிசி உலக இருபது20 போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. அதில் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து அணி வெற்றிபெற உதவிகரமாக இருந்தார். [6] அந்தப் போட்டியில் அதிகமாக ஆறு ரன்கள் எடுத்ததற்கான யெசு வங்கி விருதைப் பெற்றார்.[7]

2016 ஆம் ஆண்டு சனவரியில் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் விதர்பா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா 8 ஆறு ரன்கள் உட்பட 86 ஓட்டங்கள் எடுத்து ஆறு இலக்குகள் (விக்கெட்) வித்தியாசத்தில் வெற்றிபெற காரணமாக இருந்தார்.[8]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

ஆட்ட நாயகன் விருது[தொகு]

வ. எண் எதிரணி இடம் நாள் போட்டி செயல்பாடு முடிவு
1  நியூசிலாந்து தர்மசாலா 16 அக்டோபர் 2016 7–0–31–3 ; DNB  இந்தியா ஆறு இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது[9]
2  ஆத்திரேலியா சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்

சென்னை

17 செப்டம்பர் 2017 83 (66 பந்துகள்: 5x4, 5x6) ; 4–0–28–2  இந்தியா 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது (D/L).[10]
3  ஆத்திரேலியா இந்தூர் 24 செப்டம்பர் 2017 10-0-58-1 ; 78 (72 பந்துகள்: 5x4, 4x6)  இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[11]

பன்னாட்டு இருபது 20[தொகு]

முதல் பன்னாட்டு இருபது20 போட்டியை சனவரி 27 , 2016 அன்று ஆத்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.[12] அப்போது அவருக்கு வயது 22. இவருடைய முதல் இலக்காகக் கிறிஸ் லின்னை வெளியேற்றினார். இரண்டாவது போட்டி இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார். இந்தப் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பையில் 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய போது 28 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைப் பெற்று அந்த அணியை 83 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. மார்ச் 23 அன்று வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய பரபரப்பான போட்டியில் கடைசி 3 பந்துகளில் 2 இலக்குகளைப் பெற்று 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.[13]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி[தொகு]

ஹர்திக் பாண்ட்யா 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல்முறையாக 5 இலக்குகளைக் கைப்பற்றினர்.[14]

வெளியிணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Mehta, Jigar (25 February 2016). "From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life". Firstpost. http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html. பார்த்த நாள்: 2 June 2017. 
  2. Tere, Tushar (25 May 2017). "Pandya brothers finally build their dream home". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/vadodara/pandya-brothers-finally-build-their-dream-home/articleshow/58831111.cms. பார்த்த நாள்: 2 June 2017. 
  3. Tere, Tushar (17 January 2015). "'Every individual has different set of talents'". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/vadodara/Every-individual-has-different-set-of-talents/articleshow/47703096.cms. பார்த்த நாள்: 2 June 2017. 
  4. Mehta, Jigar (25 February 2016). "From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life". Firstpost. http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html. பார்த்த நாள்: 2 June 2017. 
  5. Sundaresan, Bharat (26 May 2017). "I always dreamt big. I wanted cars…and the only way I could get that was through my sport, says Hardik Pandya". The Indian Express. http://indianexpress.com/article/sports/cricket/i-always-dreamt-big-i-wanted-cars-and-the-only-way-i-could-get-that-was-through-my-sport-hardik-pandya-4674067/. பார்த்த நாள்: 2 June 2017. 
  6. "List of players sold in IPL 8 auction". Times of India. பார்த்த நாள் 18 April 2015.
  7. "M43: CSK vs MI – Yes Bank Maximum Sixes".
  8. Pandya sixathon secures Baroda victory
  9. "New Zealand in India ODI Series, 2016–17 – 1st ODI match".
  10. "New Zealand in India ODI Series, 2016–17 – 1st ODI match".
  11. "3rd ODI (D/N), Australia tour of India at Indore, Sep 24 2017".
  12. "India tour of Australia, 1st T2020I: Australia v India at Adelaide, Jan 26, 2016". ESPN Cricinfo. பார்த்த நாள் 26 January 2016.
  13. "India win after WWW in last three balls". ESPN Cricinfo. 23 March 2016. http://www.espncricinfo.com/ci/content/story/988173.html. பார்த்த நாள்: 27 July 2017. 
  14. "India vs England: Hardik Pandya's Maiden Five-Wicket Haul Dismantles England At Trent Bridge". NDTV. பார்த்த நாள் 19 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்திக்_பாண்டியா&oldid=2812757" இருந்து மீள்விக்கப்பட்டது