ஷிகர் தவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷிகர் தவான்
Shikhar Dhawan
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஷிகர் தவான்
உயரம் 5 ft 11 in (1.80 m)
வகை ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்
துடுப்பாட்ட நடை இடக்கை ஆட்டம்
பந்துவீச்சு நடை வலக்கைப் புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு மார்ச் 14, 2013: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு மார்ச் 14, 2013: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி 20 அக்டோபர், 2010: எ ஆஸ்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி சூன் 16, 2011:  எ மேற்கிந்தியத்தீவுகள்
முதல் இ20ப போட்டி (cap 36) சூன் 4, 2011: எ மேற்கிந்தியத்தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
தெரியவில்லை-இன்றுவரை தில்லி
2008 டெல்லி டேர்டெவில்ஸ்
2009–2010 மும்பை இந்தியன்ஸ்
2011–2012 டெக்கான் சார்ஜர்ஸ்
2013-இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒநாபமுதபஏ
ஆட்டங்கள் 1 5 80 102
ஓட்டங்கள் 187 69 5616 3866
துடுப்பாட்ட சராசரி 187.00 13.80 46.03 43.93
100கள்/50கள் 1/1 0/1 16/23 10/21
அதிகூடிய ஓட்டங்கள் 187 51 224 155*
பந்து வீச்சுகள் - 244 176
வீழ்த்தல்கள் - 3 6
பந்துவீச்சு சராசரி 41.33 23.00
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a
சிறந்த பந்துவீச்சு n/a 2/30 2/22
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் -/– 1/- 82/- 51/-

சனவரி 23, 2013 தரவுப்படி மூலம்: Cricinfo

ஷிகர் தவான் (Shikhar Dhawan, பிறப்பு: திசம்பர் 5, 1985, தில்லி) ஒரு இந்தியத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டியின் இந்திய அணியின் உதவி அணி தலைவரும் ஆவார்.. இவர் இடது-கை மட்டையாளர். துவக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். சில சமயங்களில் வலது கை சுழற்பந்துவீச்சாளராகவும் செயல்படுகிறார். இவர் டில்லி அணிக்காக உள்ளூர் போட்டிகளிலும் ,இந்தியத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார். 2014 முதல் 2014 ஆண்டு பருவலகாலங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணித் தலைவராக இருந்தார். நவம்பர், 2004 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அதற்கு முன்பாக 17வயதுக்கு உட்பட்டோருக்கான மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடினார்.

2010 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகம் ஆனார். பின் 2013 இல் மொகாலியில் இதே அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் அறிமுகம் ஆனார். அந்த அறிமுகப் போட்டியில் 174 பந்துகளில் 187 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டிகளில் விரைவாக நூறு ஓட்டங்கள் அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[1] 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணம் , 2013 மற்றும் 2017 ஐசிசி வாகையாளர் கோப்பை ஆகிய போட்டிகளில் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 1000 ஓட்டங்களைக் கடந்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[2][3] ப்ரெட்டோரியாவில் ஆகஸ்டு, 2013 இல் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணியில்விளையாடினார். அந்தப் போட்டியில் 150 பந்துகளுக்கு 248 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[4] 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இந்திய அணியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரரானார்.[5] அதன் பின்பு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 3000 ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரர் ஆனார். பின் விரைவாக 4000 ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரர் ஆனார். ஜோகானஸ்பேர்க்கில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடரின் நான்காவது போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் 100 ஆவது போட்டியில் நூறு அடித்த முதல் இந்திய வீரர் மற்றும் ஒன்பதாவது சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஷிகர் தவான் டிசம்பர் 5, 1985 இல் புது தில்லியில் பிறந்தார். இவரின் தந்தை மகேந்திர பால் தவான்

இவர் பஞ்சாபி காத்ரி குடும்பத்தைச் சார்ந்தவர். தாய் சுனைனா. தவானுக்கு ஷ்ரேஸ்தா எனும் இளைய சகோதரி உள்ளார். புதுதில்லியில் உள்ள புனித மார்க் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். தனது 12 ஆம் வயது முதல் சான்னட் கிளப்பில் தரக் சின்ஹாவிடம் பயிற்சி எடுத்தார்.[6][7] இவர் 12 சர்வதேச துடுப்பாட்டக் காரர்களை உருவாக்கியுள்ளார்.[8] துடுப்பாட்ட அகாதமியில் சேர்ந்த போது குச்சக் காப்பாளராக இருந்தார்.[7]

புள்ளி விவரங்கள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள்
# ஓட்டங்கள் போட்டி எதிரணி நகரம்/நாடு இடம் துவங்கிய நாள் முடிவு
1 187 1  ஆத்திரேலியா இந்தியாவின் கொடி மொகாலி, இந்தியா பஞ்சாப் துடுப்பாட்ட சங்க மைதானம் மார்ச் 14, 2013 வெற்றி
2 115 6  நியூசிலாந்து நியூசிலாந்து கொடி ஓக்லாந்து நியூசிலாந்து ஈடன் பார்க் பெப்ரவரி 6 2014 தோல்வி
3 173 14  வங்காளதேசம் வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் ஃபதுல்லா ஒஸ்வாமி துடுப்பாட்ட அரங்கம் 10 சூன் 2015 சமனில்முடிந்தது
4 134 15  இலங்கை இலங்கையின் கொடி காலி காலி துடுப்பாட்ட அரங்கம் 12 ஆகஸ்டு2015 தோல்வி
5 190 24  இலங்கை இலங்கையின் கொடி காலி காலி துடுப்பாட்ட அரங்கம் சூலை 26, 2017 வெற்றி
6 119 26  இலங்கை இலங்கையின் கொடி கண்டி முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் 12. ஆகஸ்டு, 2017 வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shikhar Dhawan | Cricket Players and Officials". ESPN Cricinfo. பார்த்த நாள் 2013-08-13.
  2. "Does Dhawan raise his game for ICC tournaments?". ESPN Cricinfo. 8 June 2017. http://www.espncricinfo.com/ci/content/story/1102094.html. பார்த்த நாள்: 26 July 2017. 
  3. "Shikhar Dhawan breaks Sachin Tendulkar’s record in ICC tournaments". The Indian Express. 11 June 2017. http://indianexpress.com/article/sports/cricket/shikhar-dhawan-breaks-sachin-tendulkars-record-in-icc-tournaments-4699110/. பார்த்த நாள்: 26 July 2017. 
  4. "Magnificent Dhawan powers India A win". Wisden India. 12 August 2013. http://www.wisdenindia.com/match-report/magnificent-dhawan-powers-india-win/72096. 
  5. "ICC Cricket World Cup, 2014/15 / Records / Most runs". ESPNcricinfo. பார்த்த நாள் 22 February 2015.
  6. "Two Young Stars, One Big Hope". India Today. பார்த்த நாள் 15 April 2014.
  7. 7.0 7.1 "Long wait made Shikhar's resolve stronger: Childhood coach". The Hindu. பார்த்த நாள் 15 April 2014.
  8. "4 Generations 12 International Cricketers 1 Coach". India Today. பார்த்த நாள் 15 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷிகர்_தவான்&oldid=2775012" இருந்து மீள்விக்கப்பட்டது