கே. எல். ராகுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. எல். ராகுல்
Kannaur Lokesh Rahul
LOKESH RAHUL (15573141953).jpg
2015 சனவரியில் சிட்னி கிரிக்கெட் அரங்கில்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
வகை மட்டையாளர்; குச்சக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 284) 26 டிசம்பர், 2014: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு 20–24 ஆகத்து, 2015: எ இலங்கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2010–இன்று கர்நாடக அணி
2013 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
2014–இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 11)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேமு.தப.அஇ20
ஆட்டங்கள் 4 34 28 32
ஓட்டங்கள் 250 3,313 1,067 653
துடுப்பாட்ட சராசரி 35.71 55.25 41.03 24.18
100கள்/50கள் 2/0 10/11 2/8 0/3
அதிக ஓட்டங்கள் 199 337 110 62
பந்து வீச்சுகள் - - - -
இலக்குகள் - - - -
பந்துவீச்சு சராசரி - - - -
சுற்றில் 5 இலக்குகள் - - - -
ஆட்டத்தில் 10 இலக்குகள் - - - -
சிறந்த பந்துவீச்சு - - - -
பிடிகள்/ஸ்டம்புகள் 4/– 35/0 17/1 14/0

ஆகத்து 20, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ

கே. எல். ராகுல் என அழைக்கப்படும் கன்னூர் லோகேசு ராகுல் (Kannaur Lokesh Rahul, பிறப்பு: 18 ஏப்ரல் 1992),இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் கருநாடக துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலக்கைத் துடுப்பாட்டக் காரரான இவர் சிலவேளைகளில் குச்சக் காப்பாளராகவும் விளையாடுகிறார். ராகுல் 19-வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். 2013 ஆம் ஆண்டில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடினார். 2014 இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்.[1] 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடி வருகிறார்.

ராகுலின் முதல் முதல் தரத் துடுப்பாட்டம் ஆத்திரேலிய அணிக்கு எதிராக மெல்பேர்ணில் நடந்த 2014-15 தேர்வுத் தொடராகும் .சிட்னியில் நடந்த இரண்டாவது தேர்வு ஆட்டத்தில் 110 ஓட்டங்கள் எடுத்தார். 2016 ஆம் ஆண்டில் சிம்பாப்வே, அராரே விளையாட்டு சங்கம் மைதானத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100* ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார்.[2] தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டி ஆகிய முன்ன்று வடிவங்களிலும் நூறு அடித்த மூன்றாவது இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். ஆகஸ்டு 27, 2016 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 51 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110* ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் பன்னாட்டு இருபது20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[3][4][5] அனைத்துவிதமான வடிவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் பவுண்டரி அடித்து நூறு அடித்த ஒரே சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[6]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ராகுல் ஏப்ரல் 18, 1992 ஆம் ஆண்டில் மங்களூரில் பிறந்தார். இவரின் தந்தை கே. என். லோகேஷ் , தாய் ராஜேஷ்வரி. இவரின் தந்தை சூரத்கலிள்ள கருநாடக தேசியத் தொழிநுட்பக் கழகத்தில் பேராசிரியராகவும், பொறுப்பு இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.[7] இவரின் தாய் மங்களூர் பலகலைக் கழகத்தில் வராலாற்றுத் துறை பேராசிரியராக உள்ளார்.

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

இவர் கருநாடகம் மாநில அணிக்காக 2010 ஆம் ஆண்டுமுதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் விளையாடினார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அறிமுகமானார்.[1]

சர்வதேச போட்டிகள்[தொகு]

டிசம்பர் 24, 2014 இல் மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் பொக்சிங் நாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவிற்குப் பதிலாக விளையாடினார். முதலாட்டப் பகுதியில் 6 ஆவது வீரராக களம் இறங்கிய இவர் 3 ஓட்டங்கள் எடுத்தார். இதன் நான்காவது போட்டியில் முரளி விஜயுடன் இணைந்து துவக்கவீரராக கள்ம் இறங்கி 110 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் குச்சக் காப்பாளர் மற்றும் மட்டையாளராக விளையாடினார். 2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இவரை 1 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. 2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இவர் மீண்டும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். பின் 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி இவரை 11 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. இதன் முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] இதற்கு முன் சுனில் நரைன் 15 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.[8][9]

பன்னாட்டு சதங்கள்[தொகு]

தேர்வு சதங்கள்[தொகு]

கே.எல். ராகுலின் தேர்வு சதங்கள்
இல. ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு முடிவு
1 110 2  ஆத்திரேலியா ஆத்திரேலியாவின் கொடி சிட்னி, ஆத்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானம் 2015 சமம்
2 108 4  இலங்கை இலங்கையின் கொடி கொழும்பு, இலங்கை பி. சாரா ஓவல் 2015 வெற்றி
Source[10]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எல்._ராகுல்&oldid=2774997" இருந்து மீள்விக்கப்பட்டது