உள்ளடக்கத்துக்குச் செல்

ரிஷப் பந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிஷப் பந்த்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரிஷப் ராஜேந்திர பந்த்
பிறப்பு4 அக்டோபர் 1997 (1997-10-04) (அகவை 26)
ரூர்க்கி,[1] உத்தராகண்டம் இந்தியா
மட்டையாட்ட நடைஇடதுகை மட்டையாளர்,
பங்குகுச்சக் காப்பாளர், இந்தியா
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 281)18 ஆகஸ்டு 2018 2018 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுடிசம்பர் 14 2018 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 224)அக்டோபர் 21 2018 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபஅக்டோபர் 27 2018 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப அறிமுகம் (தொப்பி 68)நவம்பர் 25 2018 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப25 நவம்பர் 2018 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015- தற்போதுவரைபுது தில்லி
2016- தற்போது வரைடெல்லி டேர்டெவில்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப.து மு.து T20I
ஆட்டங்கள் 7 3 28 7
ஓட்டங்கள் 465 41 2,090 137
மட்டையாட்ட சராசரி 38.75 20.50 52.25 22.83
100கள்/50கள் 1/2 0/0 5/10 0/1
அதியுயர் ஓட்டம் 114 24 308 58
வீசிய பந்துகள் -
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
20/2 30/0 86/9 2/0
மூலம்: ESPNcricinfo, 6 டிசம்பர் 2018

ரிஷப் ராஜேந்திர பந்த் (Rishabh Rajendra Pant (பிறப்பு:4 அக்டோபர்,1997) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் புது தில்லி மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார்.[2] அக்டோபர் 22, 2015 ஆம் ஆண்டில் 2015-2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] டிசம்பர் 23, 2015 ஆம் ஆண்டில் 2015- 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் அசாரே போட்டித் தொடரின் மூலம் பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[4] டிசம்பர் 2015 ஆம் ஆண்டில் 2016 ஆம் ஆண்டிற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் விளையாடும் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது.[5]பெப்ரவரி 1, 2016 ஆம் ஆண்டில் இந்தத் தொடரில் 18 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] 2018 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.பெப்ரவரி 6,2016 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிநிர்வாகம் இவரை 1.9 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. அன்றைய தினம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் நூறு அடித்து இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல உதவினார்.[7]

இந்தியன் பிரீமியர் லீக்

[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவரின் முதல் போட்டியில் குஜராத் லயன்சு அணிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்து 8 இலக்குகள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற உதவினார். இவரின் முதல் 50 ஓட்டங்களை 25 பந்துகளில் எடுத்தார். 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மே 4 இல் நடந்த குஜராத் லயன்சு அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 97 ஓட்டங்கள் எடுத்தார்.[8][9]

மே 2018 இல், 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 128 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 15 நான்குகளும் 7 ஆறுகளும் அடங்கும்.[10] அணியின் மொத்த ஓட்டங்களில் இவரின் பங்கு 68.4 சதவீதம் ஆகும். 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின் 20 பந்துகளில் அடுத்த 50 ஓட்டங்களை எடுத்தார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைச் சேர்ந்த கிறிஸ் கெயில், புனே வாரியர்சு இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் நூறு அடித்ததே சாதனையாக உள்ளது.[10] இதன்மூலம் இருபது20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த முரளி விஜய் 2010 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 127 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.[11][12] ஆனால் இந்தப் போட்டியில் டெல்லி அணி தோல்வியடைந்தது.

சர்வதேச போட்டிகள்

[தொகு]

2017 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்தார்.[13] சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கத்தில் பெப்ரவரி 1, 2017 இல் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அறிமுகமானார்.[14]

சூன்,2017 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியிலிடம் பிடித்தார்.[15] பெப்ரவரி,2018 இல் நடைபெற்ற 2018 சுதந்திரக் கோப்பை தொடரில் பன்னாட்டு இருபது20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.[16]

சூலை, 2018 இல் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டத் தொடரில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஆகத்து 18, 2018 இல் அறிமுகமானார்.[17][18][19] அறிமுகப் போட்டியில் ஆறு இலக்குகளைக் வீழ்த்திய (கேட்ச்) இந்தியர் எனும் சாதனை படைத்தார்.[20] இதே தொடரில் ரிஷப் பந்த் (இந்) தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். மேலும் இங்கிலாந்தில் முதல் நூறு ஓட்டங்கள் ( தே.து) எடுத்த குச்சக் காப்பாளர் எனும் சாதனை படைத்தார்.[21]

திசெம்பர், 2018 இல் ஆத்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 11 கேட்சுகளைப் பிடித்தார், இதன்மூலம் ஒரே போட்டியில் அதிக கேட்சுகளைப் பிடித்த இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார்.[22] நான்காவது போட்டியில் 159 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ஆத்திரேலிய அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்த முதல் குச்சக் காப்பாளர் எனும் சாதனை படைத்தார்.[23]

சான்றுகள்

[தொகு]
  1. "'People are going to be scared of bowling to Pant in the future'". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 April 2017.
  2. "Rishabh Pant". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.
  3. "Ranji Trophy, Group A: Delhi v Bengal at Delhi, Oct 22-25, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.
  4. "Vijay Hazare Trophy, 2nd Quarter-Final: Jharkhand v Delhi at Bangalore, Dec 23, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
  5. "Ishan Kishan to lead India at U19 World Cup". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
  6. "Rishabh Pant slams fastest fifty in huge India win". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
  7. "Rishabh Pant powers India U-19 to semi-finals on his IPL 'Pay Day'". dna. 6 February 2016. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
  8. "Pant, Samson and five scorching fifties from IPL’s teens" இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170713122243/http://www.wisdenindia.com/cricket-lists/pant-samson-and-five-scorching-fifties-from-ipls-teens/209530. 
  9. "IPL Highlights, DD Vs GL: Samson, Pant Power Delhi To 7-Wicket Win Vs Gujarat". https://sports.ndtv.com/indian-premier-league-2017/ipl-live-cricket-score-dd-vs-gl-1689637. 
  10. 10.0 10.1 Rishabh Pant rewrites records with 128* off 63 balls (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-13
  11. "Rishabh Pant rewrites records with 128* off 63 balls". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
  12. "Rishabh Pant's blistering 128* went in wain as Williamson-Dhawan combo thrashed Delhi Daredevils with a unbroken record stand of 176 runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
  13. "Yuvraj recalled, Kohli named ODI and T20I captain". ESPN Cricinfo. 
  14. "England tour of India, 3rd T20I: India v England at Bangalore, Feb 1, 2017". ESPN Cricinfo. 
  15. "Pant, Kuldeep picked for West Indies tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 June 2017.
  16. "Rohit Sharma to lead India in Nidahas Trophy 2018". BCCI Press Release. 25 February 2018. Archived from the original on 25 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 25 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "20-year-old Rishabh Pant becomes India's 291st Test player". India Today. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
  18. "3rd Test, India tour of Ireland and England at Nottingham, Aug 18-22 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
  19. "Pant, Kuldeep picked for first three England Tests, Rohit dropped". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
  20. "Rishabh Pant creates history on Test debut at Trent Bridge". India Today. பார்க்கப்பட்ட நாள் 19 August 2018.
  21. "Rishabh Pant second-youngest wicketkeeper to score a Test century". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
  22. "Stats - India savour a high not felt in 50 years". ESPNcricinfo (in ஆங்கிலம்). 10 December 2018. பார்க்கப்பட்ட நாள் 10 December 2018.
  23. "Pant roars into record books with second Test ton". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 January 2019.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஷப்_பந்த்&oldid=3918290" இலிருந்து மீள்விக்கப்பட்டது