சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேர்-இ-பங்களா தேசியத் துடுப்பாட்ட அரங்கம்
Sher-e-Bangla National Cricket Stadium
மிர்பூர் துடுப்பாட்ட அரங்கம்
Ispahani End, Sher-e-Bangla Cricket Stadium.jpg
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
அரங்கத் தகவல்கள்
அமைவிடம் மிர்பூர் தாணா, தாக்கா
அமைப்பு 2006
இருக்கைகள் 35,000
உரிமையாளர் தாக்கா கோட்டம்
இயக்குநர் வங்காளதேசம், தாக்கா டைனமைட்ஸ்
குத்தகையாளர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி
முடிவுகளின் பெயர்கள் இசுபானி முனை
அக்குவா பெயின்ட்ஸ் முனை
பன்னாட்டுத் தகவல்கள்
முதல் தேர்வு 25 மே– 27 மே 2007: வங்காளதேசம் எதிர் இந்தியா
கடைசித் தேர்வு மார்ச்சு 20-24 2010: வங்காளதேசம் எதிர் இங்கிலாந்து
முதல் ஒரு நாள் 8 திசம்பர் 2006: வங்காளதேசம் எதிர் சிம்பாப்வே
கடைசி ஒருநாள் 17 அக்டோபர் 2010: வங்காளதேசம் எதிர் நியூசிலாந்து

3 ஏப்ரல், 2010 இன் படி
மூலம்: [2]

சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் (Sher-e-Bangla Cricket Stadium) அல்லது ஷேர்-ஈ-பங்களா தேசிய துடுப்பாட்ட அரங்கம் (SBNS), வங்காளதேசத்தில் தாக்காவின் மிர்பூர் தாணா மாவட்டத்தில் உள்ள ஓர் துடுப்பாட்ட அரங்கமாகும்.2006ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரங்கம் 35,000 பார்வையாளர்களைக் கொள்ளும்.[1] துவக்கத்தில் "மிர்பூர் அரங்கம்" எனப் பெயரிடப்பட்டிருந்தாலும், வங்காளதேச அரசு பின்னர் இதற்கு ஷேர் - ஈ- பங்களா துடுப்பாட்ட அரங்கம் என மறுபெயரிட்டது.வங்காளதேசத்தின் மிகவும் மதிக்கப்படும் தலைவரும் 1940களில் விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கெடுத்தவருமான ஏ. கே. ஃபசுலுல் ஹக் நினைவாக இந்தப் பெயர் இடப்பட்டது.

தாக்கா நகரின் மையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. தாக்காவின் நகரினுள்ளேயே இருந்த பங்கபந்து தேசிய அரங்கத்திலிருந்து இங்கு மாறியது மிகுந்த கண்டனத்திற்கு உள்ளானது; இருப்பினும் துடுப்பாட்டத்திற்கே உரித்தாய அரங்கத்தை விரும்பிய வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் இந்த அரங்கத்தை கட்டியது.

இந்த துடுப்பாட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள நீர்வடிகால்கள் துணைக்கண்டத்திலேயே சிறந்த அமைப்புகளாகும். முன்னர் இருந்த தடகள ஆடுகளத்தை முற்றிலும் பெயர்த்தெடுத்து புதிய கற்களும் மண்ணும் இட்டு தயார் செய்கையில் பிவிசி குழாய்களை இட்டு நீர் வடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மையத்திலிருந்து எல்லைகள் 29 அங்குலம் தாழ்வாக உள்ளன.எனவே மழை நின்ற சிலமணித் துளிகளிலேயே துடுப்பாட்டத்தை துவங்க முடியும்.

இந்த அரங்கத்தில் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மே 2007ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே நடைபெற்றது. 2011 உலகக்கிண்ணத்திற்காக சீரமைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 23°48′24.9″N 90°21′48.9″E / 23.806917°N 90.363583°E / 23.806917; 90.363583