பியூஷ் சாவ்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூஷ் சாவ்லா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பியூஷ் பிரமோத் சாவ்லா
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
மட்டையாட்ட நடைஇடதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலதுகை கழல் திருப்பம்
பங்குபன்முகத் துடுப்பாட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
தேர்வு அறிமுகம் (தொப்பி [[{{{country}}} தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|255]])9 மார்ச்சு 2006 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு11 ஏப்ரல் 2008 எ. தென்னாபிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|167]])12 மே 2007 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாப2 சூலை 2008 எ. பாக்கிஸ்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005/06–நடப்பில்உத்தரப் பிரதேசம்
2008–நடப்பில்கிங்ஸ் XI பஞ்சாப்
2009சசெக்ஸ்
2010–நடப்பில்சர்ரே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுகள் ஒ.ப.து கள் மு.து ப.அ
ஆட்டங்கள் 2 21 48 64
ஓட்டங்கள் 5 28 1,687 605
மட்டையாட்ட சராசரி 2.50 5.60 27.20 22.40
100கள்/50கள் 0/0 0/0 1/12 0/4
அதியுயர் ஓட்டம் 4 13* 102* 93
வீசிய பந்துகள் 205 1,102 10,290 3,136
வீழ்த்தல்கள் 3 28 194 95
பந்துவீச்சு சராசரி 45.66 32.53 26.35 27.49
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 13 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 2/66 4/23 6/46 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 9/– 21/– 20/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 20 சூன் 2009

பியூஷ் பிரமோத் சாவ்லா (Piyush Pramod Chawla, பிறப்பு 24 திசம்பர் 1988, அலிகர், உத்தரப் பிரதேசம்) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். பத்தொன்பது கீழ் இந்தியத் துடுப்பாட்ட அணியிலும் மத்திய வலய துடுப்பாட்ட அணியிலும் ஆடியவர். உள்ளூர் போட்டிகளில் கழல் திருப்ப பன்முகத் துடுப்பாட்டக்காரராக அறியப்பட்டாலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் தமது மட்டையடித் திறனை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

சாவ்லா பயிற்றுவலைக்குள் பந்து வீசுதல்.

2004-05 ஆட்டகாலத்தில் இங்கிலாந்தின் பதினொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான அணிக்கெதிரே இந்திய பதினொன்பது கீழ் அணியில் தமது ஆட்டத்தைத் துவங்கினார். இரண்டு ஆட்டங்களில் 13 விக்கெட்களை சராசரி 12 ஓட்டங்களுக்கு வீழ்த்தினார்.2005-06 காலத்தில் ஆத்திரேலியாவின் பதினொன்பது கீழ் அணிக்கெதிரே இந்தியாவில் ஆடிய ஐந்து ஆட்டங்களில் எட்டு விக்கெட்களை வீழ்த்தினார். இவரது பந்துவீச்சு மணிக்கு 80 முதல் 85 கி.மீ வேகத்தில் இருக்கும்.2005-06 காலத்தில் இந்தியாவின் இரண்டாம்நிலை அணிக்கு ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டிகளில் இந்தியாவின் முதல்நிலை அணியுடன் ஆடியபோது இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இந்திய முதல்நிலை அணியுடன் ஆடிய ஆட்டத்தில் துடுப்பாட்டத்தின் சாதனையாளரும் மிகச்சிறந்த மட்டையாளருமான சச்சின் டெண்டுல்கரை கூக்ளி பந்து மூலம் குச்சத்தை வீழ்த்தி ஆட்டமிழக்கச் செய்தது இவரது ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அதே ஆட்டத்தில் முதல்நிலை மட்டையாளர்களான யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி ஆகியோரையும் வீழ்த்தினார். இருவாரங்களில் நடந்த துலீப் கோப்பைப் போட்டியிலும் தமது பன்முகத் திறமையை வெளிப்படுத்தினார்.

சாவ்லா களத்தடுப்புப் பயிற்சியில்.

சாவ்லா தேர்வுத் துடுப்பாட்டத்தில் மார்ச்சு 2006ஆம் ஆண்டு நாக்பூரில் இங்கிலாந்திற்கு எதிரான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் இவரது முதல் தேர்வு ஆட்டம் மொகாலியில் நடந்த இரண்டாம் தேர்வில் வாய்த்தது. இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரை அடுத்து மிக இளவயதில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமான இந்திய அணி வீரராக சாதனை படைத்தார்.

முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 12 மே 2007ஆம் ஆண்டு விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.வங்காள தேசத்துடன் நடந்த முதல் ஆட்டத்தில் மூன்று விக்கெட்கள் எடுத்தார். அடுத்து அயர்லாந்துடன் ஆடிய அவரது இரண்டாவது ஆட்டத்திலும் மூன்று விக்கெட்கள் எடுத்தார்.

2009ஆம் ஆண்டு பிரித்தானிய கௌன்டி சசெக்ஸ் உடன் உடன்பாடு கையொப்பமிட்டு ஒரு திங்கள் ஆடினார்.தமது முதல் கௌன்டி போட்டியில் வொர்செஸ்டர்சைருக்கு எதிராக மொத்தமாக எட்டு விக்கெட்கள் எடுத்தார். தவிர முதல் இன்னிங்சில் ஒன்பதாவது ஆட்டக்காரராக களமிறங்கி 86 பந்துகளில் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்கள் எடுத்தார். 2010ஆம் ஆண்டில் சர்ரே கௌன்டிக்காக கையொப்பமிட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2010 பதுஅ உலக இருபது20 போட்டியில் பங்கேற்ற இந்தியத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பியூஷ் சாவ்லா 2011 உலக கோப்பை இந்திய அணியின் பதினைந்து நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Piyush Chawla
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூஷ்_சாவ்லா&oldid=3221017" இலிருந்து மீள்விக்கப்பட்டது